PF Transfer Claim: வேலையை மாற்றும் போது... இனி PF கணக்கை மாற்றுவது மிக எளிது

ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO, வேலைகளை மாற்றும்போது PF கணக்கை மாற்றும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது. இந்த தகவல் வெள்ளிக்கிழமை வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 26, 2025, 11:59 AM IST
  • PF கணக்கு ட்ரான்ஸ்ஃபர் விதி மாற்றம் குறித்த முழு விபரம்.
  • சுமார் 1.25 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு பலனளிக்கும் நடவடிக்கை.
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அளித்த தகவல்.
PF Transfer Claim: வேலையை மாற்றும் போது... இனி PF கணக்கை மாற்றுவது மிக எளிது

PF Transfer Claim Rule: கோடிக்கணக்கான PF சந்தாதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. அரசாங்கம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO, வேலைகளை மாற்றும்போது PF கணக்கை மாற்றும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது. இப்போது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முதலாளியிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. இந்த தகவல் வெள்ளிக்கிழமை வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அளித்த தகவல்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், வருங்கால வைப்பு நிதி (PF) வைப்புத்தொகை பரிமாற்றம் தொடர்பான நடவடிக்கையில் இதுவரை இரண்டு ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) அலுவலகங்கள் ஈடுபட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. இவற்றில் முதலாவது, மாற்றப்பட வேண்டிய PF கணக்கு உள்ள மூல அலுவலகம் மற்றும் மற்றொன்று இறுதியாக பிஎஃப் கணக்கு மாற்றப்பட வேண்டிய அலுவலகம் ஆகியவை அடங்கும். இருப்பினும், இப்போது இந்த செயல்முறையை மேலும் எளிதாக்கும் வகையில், திருத்தப்பட்ட படிவம்-13 மென்பொருள் அமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், பணியில் சேருமிடத்தில் உள்ள அலுவலகத்தில் அனைத்து ட்ரான்ஸ்ஃபர் கோரிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டிய தேவையை EPFO ​​நீக்கியுள்ளது.

PF கணக்கு ட்ரான்ஸ்ஃபர் விதிமாற்றம் குறித்த முழு விபரம்

தற்போது உள்ள புதிய விதிகளின் படி, பணியில் இருக்கும் பகுதிக்கன மூல அலுவலகத்தில் பரிமாற்றக் க்ளெய்ம் அங்கீகரிக்கப்பட்டவுடன், முந்தைய கணக்கு தானாகவே அடுத்த அலுவலகத்தில் உள்ள உறுப்பினரின் நடப்புக் கணக்கிற்கு மாற்றப்படும். இதன் மூலம் EPFO ​​உறுப்பினர்களின் வேலை மிக எளிதாகும். இந்த திருத்தப்பட்ட விதி, PF கணக்கில் உள்ள வரி விதிக்கக்கூடிய மற்றும் வரி விதிக்கப்படாத கூறுகளைப் பிரிப்பதற்கும் வழிவகுக்கின்றது., இதன் மூலம் வரி விதிக்கக்கூடிய PF வட்டியின் மீதான TDS (மூலத்தில் வரி விலக்கு) துல்லியமான கணக்கீட்டை எளிதாக்குகிறது.

சுமார் 1.25 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு பலனளிக்கும் நடவடிக்கை

புதிய விதிகள் சுமார் 1.25 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.90,000 கோடி மதிப்பிலான கணக்குகளை எளிதில் பரிமாற்றம் செய்ய முடியும், ஏனெனில் முழு பரிமாற்ற செயல்முறையும் துரிதப்படுத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், உறுப்பினர் ஐடி மற்றும் கிடைக்கக்கூடிய பிற உறுப்பினர் தகவல்களின் அடிப்படையில் பல UAN எண்களை ஒரே நேரத்தில் உருவாக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் உறுப்பினர் கணக்குகளில் உடனடியாக நிதி வரவு வைக்கப்படும்.

மேலும் படிக்க | EPF Claim நிராகரிக்கப்படுவதற்கான சில முக்கிய காரணங்களும்... தீர்வுகளும்

மேலும் படிக்க | உங்கள் EPF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது? தெரிந்துகொள்ள ஈசியான 5 வழிகள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News