ஊழியர் வருங்கால ஓய்வூதிய அமைப்பான EPFO, உறுப்பினர்களின் செயல்முறைகளை எளிதாக்கும் வகையில், விதிகளில் அவ்வப்போது மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் EPFO சுயவிவரப் புதுப்பிப்பு விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. புதிய விதி மாற்றத்தின் மூலம், இப்போது EPF உறுப்பினர்கள் தங்கள் ஆதார் இணைக்கப்பட்ட யூனிவர்ஸல் கணக்கு எண்ணை (UAN) உதவியுடன் எந்த ஆவணத்தையும் பதிவேற்றாமல் தனிப்பட்ட விவரங்களை புதுப்பிக்கலாம்.
EPF உறுப்பினர்கள் சுயவிவரங்களில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம், தந்தை அல்லது தாயின் பெயர், திருமண நிலை, மனைவியின் பெயர், பணியில் சேர்ந்த தேதி மற்றும் பணியில் இருந்து விலகிய தேதி போன்ற தகவல்களை எந்த ஆவணத்தையும் பதிவேற்றாமல் தங்கள் புதுப்பிக்கலாம். முன்னதாக, EPF உறுப்பினர்கள் தங்கள் சுயவிவரத்தைப் புதுப்பிக்க தங்கள் முதலாளியிடம் ஒப்புதல் பெற வேண்டும், அதற்கு சுமார் 28 நாட்கள் ஆனது.
PFO வெளியிட்ட அறிக்கையில், 2024-25 நிதியாண்டில் EPF உறுப்பினர்கள் வைத்த மொத்தம் 8 லட்சம் திருத்தக் கோரிக்கைகளில் எந்தவொரு முதலாளி அல்லது நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமல் 45 சதவிகிதம் அங்கீகரிக்கரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், UAN அக்டோபர் 1, 2017 க்கு முன் வழங்கப்பட்டிருந்தால், சுயவிவரத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய அல்லது புதுப்பிக்க முதலாளியின் ஒப்புதல் தேவைப்படும். மேலும், இந்த வசதியை பய்னபடுத்திக் கொள்ள உங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை EPF கணக்குடன் இணைக்க வேண்டும்.
EPF சுயவிவரத்தை எவ்வாறு அப்டேட் செய்வது அல்லது மாற்றங்கள் செய்வது?
1. EPF அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.epfindia.gov.in என்ற போர்ட்டலுக்குச் செல்லவும்.
2. UAN எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா போன்ற விவரங்களை நிரப்புவதன் மூலம் உறுப்பினர் போர்ட்டலில் உள்நுழைக.
3. அதன் பிறகு, மெனுவிற்குச் சென்று, மேலே கொடுக்கப்பட்டுள்ள 'Manage' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
4. அதன் பிறகு, ‘Modify Basic Details’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
5. அதன் பிறகு உங்கள் தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
6. இப்போது இறுதியாக 'Track Request' விருப்பத்தைப் பயன்படுத்தி சுயவிவர புதுப்பிப்பு செயல்முறையை கண்காணிக்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









