)
EPS Pension Latest News: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழு சமீபத்தில் பல மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. இவை, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவையை முடித்த பிறகு 58 வயதில் கிடைக்கும் ஓய்வூதிய உரிமையைப் பாதிக்காது.
பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் ஓய்வூதியம் பெற ஊழியர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவையில் இருக்க வேண்டும், மேலும் குறைந்தபட்சம் 58 வயதுடையவராகவும் இருக்க வேண்டும். இருப்பினும், ஒருவர் வேலையை இழந்து EPS இன் கீழ் தொடர விரும்பவில்லை என்றால், அவர் 10 ஆண்டுகள் சேவையை முடிக்காவிட்டாலும், தனது ஓய்வூதியக் கணக்கிலிருந்து முழுத் தொகையையும் எடுக்க அனுமதிக்கப்படுவார்.
ஒரு ஊழியருக்கு வேலை இழப்பு ஏற்பட்டால், EPS கணக்கின் இறுதி தீர்வு முன்பு அனுமதிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பதிலாக இப்போது 36 மாதங்களுக்குப் பிறகு செய்யப்படும். புதிய ஏற்பாடு, இந்த 36 மாதங்களில் மீண்டும் பணியமர்த்தப்படக்கூடிய உறுப்பினர்களுக்கு சேவையின் தொடர்ச்சியையும் ஓய்வூதியத் தகுதியையும் உறுதி செய்யும்.
"58 வயதில் ஓய்வூதிய உரிமை முன்மொழியப்பட்ட மாற்றங்களால் முற்றிலும் பாதிக்கப்படாது. இந்த 10 ஆண்டுகளில் எந்த நேரத்திலும் ஒரு உறுப்பினர் 10 வருட சேவையை முடிப்பதற்கு முன்பு ஓய்வூதியக் கணக்கில் குவிந்துள்ள தொகையை திரும்பப் பெறலாம்" என்று EPFO கூறுகிறது.
- தற்போது குறைந்த ஊதியத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு EPS ஓய்வூதியம் பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு நல்ல நிதி உதவியாக இருக்கலாம்.
- அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப விரும்பவில்லை என்றால் அல்லது ஏற்கனவே தங்கள் ஓய்வுக்குப் பிந்தைய நிதிகளை திட்டமிட்டிருந்தால், பணத்தை எடுக்கலாம்.
- எப்படியிருந்தாலும், பின்வரும் அம்சங்களின் அடிப்படையில் நீங்கள் உங்கள் முடிவை எடுக்க வேண்டும்:
- ஒரு ஊழியர் 10 ஆண்டுகளுக்கு முன்பு EPS-லிருந்து பணத்தை எடுத்தால், அவர் இபிஎஸ் ஓய்வூதியத்திற்கு தகுதி பெற மாட்டார்.
- ஓய்வு பெறும்போது ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஒரு உறுப்பினர் குறைந்தது 10 வருட இபிஎஸ் மெம்பர்ஷிப்பை முடித்திருக்க வேண்டும் என இபிஎஃப்ஓ தெளிவாக கூறுகிறது.
சுமார் 75% ஓய்வூதிய உறுப்பினர்கள் தங்கள் முழு ஓய்வூதியத் தொகையையும் நான்கு ஆண்டுகளுக்குள் திரும்பப் பெறுகிறார்கள் என்று EPFO தெரிவித்துள்ளது. இருப்பினும், அவர்கள் 10 ஆண்டுகளுக்குள் தங்கள் உறுப்பினர் பதவியை முடித்தால், எதிர்கால ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்களுக்குத் தகுதியற்றவர்களாகிவிடுகிறார்கள்.
ஓய்வூதிய நிதி திரும்பப் பெறப்படாவிட்டால், உறுப்பினரின் மரணம் ஏற்பட்டால் பங்களிப்புகள் நிறுத்தப்பட்ட பிறகும், உறுப்பினரின் குடும்பம் மூன்று ஆண்டுகள் வரை ஓய்வூதியப் பலன்களுக்குத் தகுதியுடையதாக இருக்கும். இருப்பினும், EPS ஓய்வூதியத்திலிருந்து தொகை திரும்பப் பெறப்பட்டால் இந்தப் பலன் கிடைக்காது.
"உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான 10 ஆண்டு தகுதியைப் பூர்த்தி செய்ய ஊக்குவிப்பதற்காகவும், அவர்/அவள் இறந்தால் அவரது குடும்பத்தினர் சலுகைகளுக்குத் தகுதி பெற அனுமதிக்கவும், முன்மொழியப்பட்ட விதி உறுப்பினர் 2 மாதங்களுக்குப் பதிலாக 36 மாதங்களுக்குப் பிறகு ஓய்வூதியத் தொகையை எடுக்க அனுமதிக்கிறது. இது உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதிய வடிவில் நீண்டகால சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும்" என்று EPFO கூறுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ