)
EPFO New Rules: தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சமீபத்தில் பல முக்கிய செய்திகள் கிடைத்துள்ளன. இவர்களுக்கு இபிஎஃப் தொகையை எடுப்பது ஒரு சவாலான செயல்முறையாக இருந்துவந்தது. இந்த சவாலை சரி செய்ய, சமீபத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) PF நிதியை ஆன்லைனில் திரும்பப் பெறும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது. புதிய விதிகளுக்கு பிறகு, இப்போது ஊழியர்கள் அனைவரும் தங்கள் PF நிதியை எளிதாக எடுக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதை செயல்படுத்த EPFO தயாராகி வருகிறது. EPFO 3.0 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, PF உறுப்பினர்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது போல, ATM -கள் அல்லது UPI மூலம் தங்கள் கணக்குகளில் இருந்து நேரடியாக நிதியை எடுக்க முடியும். ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் கோரிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இருப்பினும், இந்த அம்சம் இன்னும் தொடங்கப்படவில்லை.
இபிஎஃப் நிதியை எப்படி எடுப்பது என்ற குழப்பம் உங்களுக்கு இருந்தால், கவலை வேண்டாம். PF நிதியை எளிதாகவும், எந்த நேரத்திலும் எடுக்க உதவும் ஐந்து எளிய வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO அதன் விதிகளில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, ஊழியர்கள் தங்கள் தகுதியான PF தொகையை வருடத்திற்கு இரண்டு முறை வரை எடுக்கலாம், அதற்கான காரணம் அவசரநிலை, திருமணம், கல்வி அல்லது நோய் சிகிச்சை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
PF கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் செயல்முறை மிகவும் எளிதாகவும் வேகமாகவும் மாறிவிட்டது. இப்போது நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு உங்கள் UAN செயலில் இருக்க வேண்டும். மேலும், உங்கள் வங்கிக் கணக்கு உங்கள் PF கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் ஆதார் மற்றும் PAN அட்டை தகவல்களும் உங்கள் PF கணக்கில் புதுப்பிக்கப்பட வேண்டும். இதற்குப் பிறகு, ஆன்லைன் படிவத்தை நிரப்பி பணம் எடுக்கும் செயல்முறையை எளிதாக முடித்து, உங்கள் PF நிதியை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம்.
ஸ்டெப் 1: பிஎஃப் பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
முதலில், உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லுடன் EPFO உறுப்பினர் போர்ட்டலில் லாக் இன் செய்யவும். பின்னர், 'Online Services'என்பதற்குச் சென்று '(படிவம்-31, 19, 10C, 10D)' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைச் சரிபார்த்து, 'Proceed For Online Claim' என்பதைக் கிளிக் செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பவும். இந்த செயல்முறைக்குப் பிறகு, உங்கள் PF தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
ஸ்டெப் 2: 'PF Advance (Form 31)' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
இங்கே, 'I Want To Apply For' என்பதன் கீழ் PF Advance (Form 31) என்பதைத் தேர்ந்தெடுத்து பணத்தை எடுப்பதற்கான காரணத்தைக் குறிப்பிடவும் (எ.கா., மருத்துவ அவசரநிலை, திருமணம், வீடு வாங்குதல், குழந்தைகளின் கல்வி போன்றவை). உங்களுக்குத் தேவையான தொகையை உள்ளிடவும்.
ஸ்டெப் 3: தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, OTP மூலம் சரிபார்க்கவும்
இப்போது உங்கள் வங்கிக் கணக்கின் காசோலை புத்தகம் அல்லது பாஸ்புக்கின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை நீங்கள் பதிவேற்ற வேண்டும். அனைத்து தகவல்களையும் நிரப்பிய பிறகு, 'Get Aadhaar OTP'என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
ஸ்டெப் 4: 3-7 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்
உங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, EPFO உங்கள் விண்ணப்பத்தைச் சரிபார்க்கும். எல்லாம் சரியாக இருப்பது கண்டறியப்பட்டால், பணம் வழக்கமாக 3 முதல் 7 வேலை நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஸ்டெப் 5: வங்கி ATM மூலம் பணம் எடுக்க முடியும்
உங்கள் வங்கிக் கணக்கில் PF நிதி வரவு வைக்கப்பட்டவுடன், உங்கள் வங்கியின் ATM அட்டையைப் பயன்படுத்தி அவற்றை எடுக்கலாம். தற்போது, ATM -களில் இருந்து PF நிதியை நேரடியாக எடுக்க முடியாது. இன்னும் சில மாதங்களில் இந்த வசதி தொடங்கப்படலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ