EPFO New Rules: PF கணக்கில் தனிப்பட்ட தகவல்களை திருத்தலாம்... எளிய வழிமுறை இதோ

EPFO New Rules: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் அது தொடர்பான தகவல்களை, மாற்றும், திருத்தும் அல்லது அப்டேட் செய்யும் செயல்முறையை எளிதாக்கவும் விதிகளை மாற்றியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 14, 2025, 05:11 PM IST
  • ஊழியர்கள் தங்கள் கணக்குடன் தொடர்புடைய பல விவரங்களை தாங்களாகவே புதுப்பிக்க முடியும்.
  • PF கணக்கில் உள்ள தகவல்களை மாற்றங்களைச் செய்வதற்கான வழிமுறை.
  • லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் புதிய விதி.
EPFO New Rules: PF கணக்கில் தனிப்பட்ட தகவல்களை திருத்தலாம்... எளிய வழிமுறை இதோ

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு, வசதிகளை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு புதிய விதிகளை அவ்வப்போது கொண்டு வரும். அந்த அகையில் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் அது தொடர்பான தகவல்களை, மாற்றும், திருத்தும் அல்லது அப்டேட் செய்யும் செயல்முறையை எளிதாக்கவும் விதிகளை மாற்றியுள்ளது.

Add Zee News as a Preferred Source

பல முக்கியமான விவரங்களை இப்போது எளிதாக மாற்றலாம் 

புதிய விதிகள் மூலம், உங்கள் முதலாளியின் ஒப்புதல் இல்லாமல் உங்கள் EPF பணியாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணியில் சேர்ந்த தேதி உட்பட பல முக்கியமான விவரங்களை இப்போது மாற்றலாம் அல்லது திருத்தங்கள் செய்யலாம். EPFO ​​என்னும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது போர்ட்டலில் அத்தகைய வசதியை வழங்கியுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் கணக்குடன் தொடர்புடைய பல விவரங்களை தாங்களாகவே புதுப்பிக்க முடியும்.

ஒப்புதல் வழங்காமல் திருத்தங்கள் செய்வது இயலாது என்ற நிலை

இதுவரை, EPF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் சுயவிவரத்தில் ஏதேனும் பெரிய மாற்றங்களைச் செய்ய தங்கள் நிறுவனம், முதலாளி அல்லது அமைப்பின் உதவியை நாட வேண்டியிருந்தது. அவர்கள் ஒப்புதல் வழங்காமல் திருத்தங்கள் செய்வது இயலாது என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது EPFO வழங்கும் புதிய வசதியின் மூலம், வேலையில் சேர்ந்த தேதி, பெயர், தந்தை அல்லது கணவரின் பெயர், ஓய்வு பெறும் தேதி போன்ற விவரங்களை நீங்களே எளிதாகவும் எந்தத் சிக்கலும் இல்லாமல், திருத்தங்கள் செய்யலாம், மாற்றலாம் அல்லது புதுப்பிக்கலாம்.

பதிவுகளில் சரியான தகவல்கள் இருப்பது மிகவும் முக்கியம்

வருங்கால வைப்பு நிதி பதிவுகளில் சரியான தகவல்கள் இருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இந்தத் தகவல்கள் எதிர்காலத்தில் ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி கோரிக்கை, பணத்தை க்ளெய்ம் செய்தல் உள்ளிட்ட விஷயங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். தனிப்பிட்ட விபரங்களுடன், பணியில் சேரும் தேதியில் ஏற்படும் பிழை உங்கள் சர்வீஸ் வரலாற்றைப் பாதிக்கலாம். எதிர்காலத்தில் உங்கள் ஓய்வூதியம் தவறாக மதிப்பிடுவதற்கும் இது வழிவகுக்கும்.

EPF தரவுத்தளத்தில் PF கணக்கில் உள்ள தகவல்களை மாற்றங்களைச் செய்வதற்கான வழிமுறை

1. முதலில், EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.

2. பின்னர், உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும். 

3. இதற்கு, நீங்கள் OTP சரிபார்ப்பையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கு, EPFO அனுப்பும் OTP-யைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை ஆக்டிவ் ஆக வைத்திருங்கள்.

4. உள்நுழைந்த பிறகு, மேலே உள்ள 'Manage' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

5. உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது பாலினம், நீங்கள் பணியில் சேர்ந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களை திருத்த அல்லது புதுப்பிக்க வேண்டுமானால், 'Modify Basic Details' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

6. தேவையான தகவல்களை சரியாக நிரப்பவும் அதற்கான ஆவணங்களை பதிவாற்றவும். பெயர் அல்லது பிறந்த தேதி உள்ளிட்ட மாற்றங்களுக்கு, EPF மற்றும் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் துணை ஆவணங்களை (ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது பிறப்புச் சான்றிதழ் போன்றவை) பதிவேற்றவும்.

லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் புதிய விதி

EPFO அமைப்பின் இந்த முயற்சி மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு ஒரு நேர்மறையான மாற்றமாகும். உங்கள் கணக்கில் ஏதேனும் தகவல் தவறாக உள்ளிடப்பட்டிருந்தால், இப்போது தாமதிக்க வேண்டாம். எதிர்காலத்தில் ஏற்படும் எந்த இடையூறுகளையும் தவிர்க்க, EPFO அதிகாரப்பூர்வ வலைத்தளமான epfindia.gov.in என்ற வலைதளத்தை பார்வையிட்டு உங்கள் விவரங்களை உடனடியாகப் புதுப்பிக்கவும். தவறான தரவு உள்ளீடு அல்லது முதலாளிகள் ஒப்புதல் அளிக்க தாமதம் செய்வதன் காரணமாக அடிக்கடி சிக்கல்களை எதிர்கொண்ட லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு இந்த வசதி நிவாரணம் அளித்துள்ளதாக EPFO ​​தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Gpay, Paytm பயனர்கள் ஷாக்... பணப் பரிவர்த்தனையில் சிக்கல் - என்ன தான் ஆச்சு?

மேலும் படிக்க | தட்கல் புக்கிங் செய்ய சரியான நேரம் எது தெரியுமா? இந்த தவறுகளை பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News