)
EPFO Passbook Lite: இபிஎஃப் உறுப்பினர்களூக்கு முக்கியமான செய்தி. உங்களிடம் EPF கணக்கு இருந்தும், உங்கள் PF பங்களிப்புகள் குறித்த செய்திகள் வரவில்லை என்றால், உங்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கவுள்ளது. நாடு முழுவதும் உள்ள அதன் லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் அனைத்து EPFO பாஸ்புக் விவரங்களையும் ஒரே கிளிக்கில் அணுகலாம்.
பல இபிஎஃப் உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சனையை புரிந்துகொண்ட ஊழியர் வருங்கால் வைப்பு நிதி அமைப்பு, EPFO பாஸ்புக் லைட் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் பயனர்கள் தங்கள் EPF இருப்பை ஒரே கிளிக்கில் செக் செய்ய அனுமதிக்கிறது. இந்த அம்சத்தைப் பயன்படுத்துவது உங்கள் PF இருப்பை செக் செய்யும் செயல்முறையை மிகவும் எளிதாக்கும்.
'பாஸ்புக் லைட்' என்பது EPFO இணையதளத்தில் கிடைக்கும் ஒரு இடைமுகம். இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் இப்போது சிக்கலான லாக் இன் செயல்முறையை மேற்கொள்ளாமல் நேரடியாக தங்கள் PF இருப்பைக் காணலாம். முன்பு, PF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட வேண்டியிருந்தது. ஆனால் இப்போது செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் இப்போது தங்கள் UAN எண் மற்றும் OTP ஐ மட்டுமே உள்ளிட வேண்டும். அதன் பிறகு, அவர்கள் தங்கள் பாஸ்புக்கை நேரடியாக அணுகலாம்.
- இதற்கு முதலில், EPFO -வின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.epfindia.gov.in -க்குச் செல்லவும்.
- பின்னர், 'பாஸ்புக் லைட்' பகுதியைக் கிளிக் செய்யவும்.
- இப்போது, உங்கள் UAN எண்ணை உள்ளிடவும்.
- உங்கள் மொபைல் தொலைபேசிக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
- OTP ஐ உள்ளிட்டு 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்.
- பின்னர் உங்கள் PF பாஸ்புக் திரையில் காட்டப்படும்.
EPFO வலைத்தளத்தில் உங்கள் PF பாஸ்புக்கை அணுகுவது ஒரு காலத்தில் மிகவும் கடினமான பணியாக இருந்தது. இதில் லட்சக்கணக்கான பயனர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்த EPFO, பாஸ்புக் லைட்டை அறிமுகப்படுத்தியது. தொழில்நுட்ப அறிவு இல்லாமை அல்லது நெட்வொர்க் சிக்கல்கள் காரணமாக பலரால் தங்கள் PF தகவலை அணுக முடியாத நிலை ஏற்பட்டதாக EPFO கூறியது. இந்த அம்சம் இந்த பயனர்களுக்கு உதவுவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக EPFO மேலும் தெரிவித்துள்ளது.
- பரிமாற்ற விண்ணப்பங்களின் நிலையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்.
- இது முழு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது,
- உறுப்பினர்கள் தங்கள் PF பரிமாற்றங்களை எளிதாக செக் செய்யம்லா.
- புதிய கணக்கில் PF இருப்பு மற்றும் சேவை காலம் சரியாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை விரைவாக தெரிந்துகொள்ளலாம்.
- எதிர்கால குறிப்புக்காக நிரந்தர டிஜிட்டல் பதிவைப் பராமரிக்கலாம்.
- குறிப்பாக EPS நன்மை கணக்கீடுகளுக்கு இது மிக முக்கியமானது,
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ