வேலை இழந்ததால் 10 வருட தொடர் சர்வீஸ் இல்லையா... EPFO பென்ஷன் விதிகள் கூறுவது என்ன?

EPFO Pension Rule: EPFO விதிகளின்படி, நிறுவனத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஒருவர், ஓய்வு பெற்ற பிறகு பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றவர் ஆகிறார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 3, 2025, 03:57 PM IST
  • புதிய வேலையில் சேரும் தேதியிலிருந்து உங்கள் சேவை கணக்கீடு தொடரும்.
  • EPF ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்.
  • உங்கள் மொத்த சேவை காலம் உங்கள் புதிய வேலையில் சேர்க்கப்படும்.
வேலை இழந்ததால் 10 வருட தொடர் சர்வீஸ் இல்லையா... EPFO பென்ஷன் விதிகள் கூறுவது என்ன?

EPFO விதிகளின்படி, நிறுவனத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஒருவர், ஓய்வு பெற்ற பிறகு பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றவர் ஆகிறார். ஆனால் ஒருவர் 4 ஆண்டுகள் பணிபுரிந்து, பின்னர் வேலையை இழந்து, புதிய வேலை கிடைக்க 2-3 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட நிலையில் பென்ஷன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? ஓய்வூதியத் தகுதிக்கு அவர்களின் மொத்த பணி ஆண்டுகள் எவ்வாறு கணக்கிடப்படும்?

Add Zee News as a Preferred Source

EPFO பென்ஷன் விதிகள்

உங்கள் பணி அனுபவம் புதிய வேலையில் இணைந்த நாளில் தொடங்குமா, அல்லது இடையில் உள்ள இடைவெளி காலத்தை கழித்து விட்டு, முந்தைய பணி காலம் புதிய வேலையில் சேர்க்கப்படுமா, என்பது ஊழியர்களிடையே எழும் ஒரு பொதுவான கேள்வி. எந்த குழப்பமும் ஏற்படாமல் இருக்க, விதிகளை தெளிவாகப் புரிந்துகொள்வோம்.

மொத்த சேவை கால கணக்கீடு

நீங்கள் ஒரு வேலையை விட்டு விலகிய நிலையில், புதிய வேலை கிடைக்க நீண்ட கால இடைவெளி இருந்தால், கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்கும் போதெல்லாம், உங்கள் முந்தைய நிறுவனத்தில், EPFO பங்களிப்பிற்காக நீங்கள் பெற்ற அதே UAN (யுனிவர்சல் கணக்கு எண்) எண் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம், உங்கள் புதிய முதலாளி EPF பங்களிப்புகளை அதே கணக்கிற்கு மாற்றுவார். மேலும், உங்கள் முந்தைய வேலையில் உங்கள் மொத்த சேவை காலம், உங்கள் புதிய வேலையுடன் சேர்க்கப்படும். எனவே, ஓய்வூதியத் தகுதிக்காக நீங்கள் மீண்டும் 10 ஆண்டுகள் தொடர்ந்து சர்வீஸில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

முந்தைய சேவை வீணாகாது

உதாரணமாக, நீங்கள் ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பின்னர் உங்கள் வேலையை இழந்து, ஒரு வருடம் கழித்து, நீங்கள் ஒரு புதிய வேலையில் சேர்ந்தால், உங்கள் முந்தைய சேவை வீணாகாது. உங்கள் புதிய வேலையில், பழைய நிறுவனத்தில் வழங்கப்பட்ட அதே UAN (யுனிவர்சல் கணக்கு எண்) எண்ணை பயன்படுத்தினால், ஒரு வருட இடைவெளி புறக்கணிக்கப்படுவதோடு, புதிய வேலையில் சேரும் தேதியிலிருந்து உங்கள் சேவை கணக்கீடு தொடரும். எனவே, நீங்கள் புதிய வேலையில் இன்னும் 5 ஆண்டுகள் நிறைவு செய்தால், உங்கள் மொத்த சேவை 10 ஆண்டுகளாகக் கணக்கிடப்படும். இது உங்களை வழக்கமான ஓய்வூதியத் திட்டத்திற்குத் தகுதியுடையவராக்கும்.

மேலும் படிக்க | EDLI Coverage: முக்கிய மாற்றங்களை செய்த EPFO, 20,000 குடும்பங்களுக்கு அதிகரித்த நன்மை

ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்

நீங்கள் 10 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்யவில்லை என்றால், மேலும் வேலை செய்யத் திட்டமிடவில்லை என்றால், ஓய்வு பெறும் வயதிற்கு முன்பே உங்கள் ஓய்வூதியக் கணக்கிலிருந்து தொகையை எடுக்கலாம். இருப்பினும், இந்தத் தொகைக்கு உங்களுக்கு எந்த வட்டியும் கிடைக்காது. அதற்கு பதிலாக, உங்கள் மொத்த சேவை ஆண்டுகள் மற்றும் நீங்கள் கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சூத்திரத்தைப் பயன்படுத்தி உங்கள் ஓய்வூதியப் பலன்கள் கணக்கிடப்படும். EPF ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்: மாதாந்திர ஓய்வூதியத் தொகை = (ஓய்வூதிய சம்பளம் x ஓய்வூதிய சேவை) / 70.

மேலும் படிக்க | பரஸ்பர நிதியம் SIP vs STP... பங்குச் சந்தை சரிவின் போது கை கொடுக்கும் திட்டம் எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News