EPFO புதிய வட்டி விகிதம் வெளியானது: வந்தது முக்கிய அறிவிப்பு... அதிக வட்டி கிடைக்குமா?

EPFO Update: 2024-25 ஆம் ஆண்டிற்கான EPF வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது தற்போதுள்ள 8.25 சதவீதமாகவே தொடரப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 28, 2025, 12:51 PM IST
  • EPFO சந்தாதாரர்களுக்கு முக்கிய செய்தி.
  • இபிஎஃப்ஓ புதிய வட்டி விகிதம் என்ன?
  • வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளதா?
EPFO புதிய வட்டி விகிதம் வெளியானது: வந்தது முக்கிய அறிவிப்பு... அதிக வட்டி கிடைக்குமா?

EPFO Interest Rate: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி! வெள்ளிக்கிழமை, 2024-25 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவித்தது.

Add Zee News as a Preferred Source

Central Board of Trustees: மத்திய அறங்காவலர் குழு

மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) ஒரு முக்கியமான கூட்டம் இன்று நடந்தது. இதில், 2024-25 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை தற்போதுள்ள 8.25 சதவீதமாகவே தொடர ஒழுங்குமுறை அமைப்பு முடிவு செய்துள்ளது. CBT -யின் முடிவிற்குப் பிறகு, 2024-25 ஆம் ஆண்டிற்கான EPF வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதம் நிதி அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

EPF Amount: இபிஎஃப் தொகைக்கான வட்டி விகிதம்

அரசாங்கத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, 2024-25 ஆம் ஆண்டிற்கான EPF தொகைக்கான வட்டி விகிதம் EPFO ​​இன் ஏழு கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

பிப்ரவரி 2024 இல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2023-24 ஆம் ஆண்டிற்கான EPF மீதான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்தியது. இது 2022-23 இல் 8.15 சதவீதமாக இருந்தது. மார்ச் 2022 இல், EPFO ​​அதன் ஏழு கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களுக்கு 2021-22 ஆம் ஆண்டிற்கான EPF வட்டியை நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு 8.1 சதவீதமாகக் குறைத்தது. இது 2020-21 இல் 8.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு வட்டி தொகை எப்போது கிடைக்கும்?

நிதி அமைச்சகம் மூலம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே EPFO ​​வட்டியை உறுப்பினர்களுக்கு வழங்குகிறது. 

EPFO Interest Rate: இபிஎஃப்ஓ வட்டி விகிதங்களில் ஏற்ற இறக்கங்கள்

மார்ச் 2020 இல், EPFO ​​2019-20 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.5 சதவீதமாகக் குறைத்தது. இது 2018-19 ஆம் ஆண்டில் 8.65 சதவீதமாக இருந்தது. EPFO தனது சந்தாதாரர்களுக்கு 2016-17 ஆம் ஆண்டில் 8.65 சதவீத வட்டி விகிதத்தையும், 2017-18 ஆம் ஆண்டில் 8.55 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்கியது. 2015-16 ஆம் ஆண்டில் வட்டி விகிதம் சற்று அதிகமாக 8.8 சதவீதமாக இருந்தது. ஓய்வூதிய நிதி அமைப்பு 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டுகளில் 8.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்கியது. இது 2012-13 ஆம் ஆண்டிற்கான 8.5 சதவீதத்தை விட அதிகமாகும். 2011-12 ஆம் ஆண்டில் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக இருந்தது.

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்கள் வட்டித் தொகையை செக் செய்வது எப்படி?

இன்னும் சில நாட்களில் வட்டி கணக்கில் வரவு வைக்கப்படும். அதன் பிறகு சந்தாதாரர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) எவ்வளவு பணம் உள்ளது என்பதை சில எளிய வழிகளின் மூலம் வீட்டில் இருந்தபடியே தெரிந்துகொள்ளலாம்.

EPF Balance: இபிஎஃப் இருப்புத்தொகையை செக் செய்ய உதவும் 4 வழிகள்:

- எஸ்எம்எஸ்
- மிஸ்டு கால்
- இபிஎஃப்ஓ வலைத்தளம்
- உமங் செயலி

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு மாஸ் திட்டம்: மாதம் ரூ.20,500 வருமானம், அரசின் உத்தரவாதம்

மேலும் படிக்க | மார்ச் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: எல்பிஜி சிலிண்டர், அகவிலைப்படி, UPI, FD விதிகள்.... முழு லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News