)
EPS Pension Latest News: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) விதிகளில் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. இப்போது, ஒரு ஊழியர் ஆறு மாதங்களுக்கு முன்பே வேலையை விட்டு வெளியேறினாலும், அவரது ஓய்வூதிய பங்களிப்பை அவர் இழக்கமாட்டார். புதிய முறையின் கீழ், குறைந்தபட்சம் ஒரு மாதமாவது EPFO-வில் உறுப்பினராக இருந்த ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறும்போது தங்கள் EPS பங்களிப்பையும் திரும்பப் பெறலாம்.
முன்னதாக, EPS-ல் ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவைகாலம் இருந்த ஊழியர்கள் ஓய்வூதிய நிதியான இபிஎஸ் தொகையை எடுக்க முடியாது. ஆறு மாதங்களுக்கு குறைவான சேவை காலம் "பூஜ்ஜிய முழு ஆண்டு" என்று கருதப்பட்டது. அதாவது, 5 மாதங்கள் வேலை செய்த பின்னர் வேலையை விட்ட ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய பங்களிப்பை இழந்தனர். அவர்கள் தாங்கள் டெபாசிட் செய்த PF தொகை மற்றும் நிறுவனத்தால் தங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட PF தொகை ஆகியவற்றை மட்டுமே திரும்பப் பெற முடியும் என்ற நிலை இருந்தது.
ஏப்ரல்-மே 2024 இல் EPFO ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதன் படி, ஒரு மாத சேவையை முடித்த உறுப்பினர்களும் தங்கள் EPS பங்களிப்பை திரும்பப் பெறலாம். அதாவது, வேலையை முன்கூட்டியே விட்டுச் செல்லும் ஊழியர்களும் தங்கள் ஓய்வூதிய நிதியைப் பெறுவார்கள். அவர்கள் தங்கள் பணத்தை இழக்க வேண்டியதில்லை.
ஊழியர்கள் அடிக்கடி வேலைகளை மாற்றும் அல்லது குறுகிய காலத்திற்கு வேலை செய்யும் துறைகளுக்கு இந்த மாற்றம் மிகவும் உதவியாக இருக்கும். உதாரணமாக, சில்லறை விற்பனை, ஐடி நிறுவனங்கள், பிபிஓ, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான வேலைகளில் குறுகிய காலம் பணிபுரிந்து பின் வேறு வேலைக்கு மாறும், அல்லது வேலையிலிருந்து வெளியேறும் இளைஞர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இதனால் பயனடைவார்கள்.
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்:
- ஒரு ஊழியர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் என வைத்துக்கொள்வோம்.
- அவரது பிஎஃப் கணக்கு அந்த நிறுவனத்தில் தொடங்கப்படுகிறது.
- அவரது சம்பளத்திலிருந்து ரூ.3,600 கழிக்கப்பட்டது.
- நிறுவனம் இபிஎஸ் கணக்கில் ரூ.2,350 தொகையையும் இபிஎஃப் கணக்கில் ரூ.1,250 டெபாசிட் செய்தது.
- அவர் 5 மாதங்கள் பணியாற்றி பின்னர் ராஜினாமா செய்தார்.
முந்தைய விதியின் படி, அந்த ஊழியர் அவரது ஓய்வூதிய பங்களிப்பு ரூ.6,250 இழந்திருப்பார். ஆனால், இப்போது புதிய விதிகளின் கீழ், அவருக்கும் அது கிடைக்கும். ஒரு நபர் நிறுவனத்தில் சேர்ந்து 15 நாட்களுக்குள் ராஜினாமா செய்தால், இபிஎஸ் பணம் லேப்ஸ் ஆகிவிடும்.
- ஊழிய்ர் நிறுவனத்திலிருந்து 6 மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்து, அவரது பிஎஃப் பாஸ்புக்கில் இபிஎஸ் பணம் தெரியவில்லை என்றால், அவர் இபிஎஃப்ஓ -இடம் புகார் அளிக்கலாம்.
- படிவம் 10C ஐப் பயன்படுத்தி இபிஎஸ் தொகையை கோரலாம்.
- அவர் தனது பிஎஃப் பாஸ்புக்கின் ஸ்கிரீன்ஷாட் அல்லது PDF ஐ ஆதாரமாக சேவ் செய்து வைத்துக்கொள்வது நல்லது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ