ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) செயல்படுத்தி வரும் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS), இந்தியாவின் மிகப் பெரிய அளவிலான சமூக நலத் திட்டங்களில் ஒன்றாகும். 1995 நவம்பர் 16ம் தேதியன்று தொடங்கப்பட்ட EPS, ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தை வழங்க ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு தங்கள் சேவைக் காலம் மற்றும் பணியில் இருந்த போது பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும்.
ஓய்வுக்குப் பிறகு உத்தரவாத வருமானம்
EPS அதன் உறுப்பினர்களுக்கு வாழ்நாள் முழுவதும், ஓய்வுக்குப் பிறகு உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. உறுப்பினர் இறந்தால், இந்தத் திட்டம் குடும்பம் ஓய்வூதியப் பலன்கள் மூலம் சார்ந்துள்ள குடும்பத்திற்கும் பாதுகாப்பை வழங்குகிறது.
சூத்திரத்தை பயன்படுத்தி கணக்கிடப்படும் ஓய்வூதியம்
சம்பளம் வாங்கும் நபர் 10 ஆண்டுகள் EPFO கணக்கில் பங்களித்திருந்தால், ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆகிறார். எவ்வளவு ஓய்வூதியம் என்பது ஒரு சூத்திரத்தை பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. இதில், உங்கள் பணியின் மொத்த கால அளவும் கருத்தில் கொள்ளப்படுகிறது. இதில் அதிகபட்ச ஓய்வூதிய கணக்கீட்டிற்கான சேவை காலம் 35 ஆண்டுகள். ஒரு EPFO உறுப்பினர், ஓய்வுக்குப் பிறகு எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார் என்பதை தீர்மானிக்கக்கூடிய ஃபார்முலாவை அறிந்து கொள்ளலாம்.
ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான சூத்திரம்
EPFO ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான சூத்திரம் - EPS = சராசரி சம்பளம் x ஓய்வூதிய சேவை/ 70.
சராசரி சம்பளம் என்பது அடிப்படை சம்பளம் + DA. இது கடந்த 60 மாதங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஓய்வூதிய கணக்கிற்கான அதிகபட்ச சேவை காலம் 35 ஆண்டுகள். ஓய்வூதிய ஊதியம் அதிகபட்ச ரூ.15 ஆயிரம். இதன் காரணமாக, ஓய்வூதியத்தின் அதிகபட்ச பங்கு மாதத்திற்கு ரூ 15000x8.33= ரூ 1250 என்ற அளவில் இருக்கும்
EPFO குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஓய்வூதியம்
அதிகபட்ச பங்களிப்பு மற்றும் சேவையின் ஆண்டு அடிப்படையில் EPS ஓய்வூதிய கணக்கீட்டை நாம் புரிந்து கொண்டால்,
EPS = 15000 x35 / 70 = Rs 7,500 ( ஒரு மாத ஓய்வூதியம்). அதாவது, இபிஎஸ் மூலம் அதிகபட்சமாக ரூ.7,500 வரை ஓய்வூதியம் பெறலாம். அதேசமயம் குறைந்தபட்ச ஓய்வூதியம் 1,000 ரூபாய் வரை எடுக்கலாம். இந்த ஃபார்முலா மூலம் உங்கள் ஓய்வூதியத் தொகையையும் கணக்கிடலாம்.
EPS மற்றும் EPF கணக்கு
ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் EPF கணிக்கில் அடிப்படை + DA தொகையில் 12 சதவீதம் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்கு சமமான தொகை முதலாளி/நிறுவனத்தால் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால் முதலாளி/நிறுவனத்தின் பங்கு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதமும் 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS) மற்றும் 3.67% EPF கணக்கிற்கும் செல்கிறது.
EPFO விதிகள்
EPS விதிகளின்படி, ஒரு ஊழியர் 58 வயதில் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. இருப்பினும், அவர் விரும்பினால், அவர் 58 க்கு முன்பே ஓய்வூதியம் பெறலாம். இதற்கு, ஆரம்பகால ஓய்வூதியம் என்ற விருப்பமும் உள்ளது, இதன் கீழ், 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறலாம். ஆனால் அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் 58 வயதிற்கு முன் பணத்தை எடுத்தால், ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் 4 சதவீதம் குறைந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









