EPFO Claim விதிகளில் முக்கிய மாற்றம்... இனி PF பணத்தை திரும்ப பெறுவது மிக எளிது

EPFO சந்தாதாரர்கள், தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெறும் க்ளெய்ம் செயல்முறையை எளிதாக்கும் வகையில், இரண்டு புதிய விதி மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 4, 2025, 10:09 AM IST
  • பிஎஃப் க்ளெய்ம் நிராகரிக்கப்படும் சிக்கலை நிவர்த்தி செய்ய நடவடிக்கை.
  • வங்கிக் கணக்கை UAN எண் உடன் இணைப்பது தொடர்பான விதியில் மாற்றம்.
  • பிஎஃப் க்ளெய்ம் செயல்முறைக்கு தேவையான ஆவணங்கள் தொடர்பான விதி.
EPFO Claim விதிகளில் முக்கிய மாற்றம்... இனி PF பணத்தை திரும்ப பெறுவது மிக எளிது

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள சந்தாதாரர்கள், தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெறும் க்ளெய்ம் செயல்முறையை எளிதாக்கும் வகையில், இரண்டு புதிய சீர்திருத்தங்களை அல்லது விதி மாற்றங்களை மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது க்ளெய்ம் செயல்முறையை எளிதாக்குவதோடு, கோரிக்கைகள் அடிக்கடி நிராகரிக்கபடுவது தொடர்பான புகார்களை நீக்கவும் உதவும். 

Add Zee News as a Preferred Source

PF க்ளெய்ம் செயல்முறைக்கு தேவையான ஆவணங்கள் தொடர்பான விதி

புதிய சீர்திருத்தங்களின் கீழ், பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க ஆன்லைன் க்ளெய்ம் கோரிக்கை தாக்கல் செய்யும் போது காசோலை அல்லது சான்றளிக்கப்பட்ட வங்கி பாஸ்புக்கின் புகைப்படத்தை, ஆவணமாக பதிவேற்ற வேண்டியது அவசியம் என்ற விதியை EPFO ​​நீக்கியுள்ளது. இது 7.7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு பயனளிக்கும்.

PF க்ளெய்ம் நிராகரிக்கப்படும் சிக்கலை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

சில சமயங்களில் பயனர்கள் பதிவேற்றும் ஆவணங்கள் தெளிவற்றதாக இருப்பதால், சிக்கல்கள் ஏற்படலாம். இந்நிலையில், விதிகளில் ஏற்படுத்தியுள்ள புதிய மாற்றம் தரமற்ற பதிவேற்றங்கள் காரணமாக, க்ளெய்ம் நிராகரிக்கப்படும் சிக்கலை நிவர்த்தி செய்வதோடு, க்ளெய்ம் தொடர்புடைய குறைகளையும் குறைக்கிறது.

வங்கிக் கணக்கை UAN உடன் இணைப்பது தொடர்பான விதியில் மாற்றம்

EPFO உறுப்பினர் வங்கிக் கணக்கை யுனிவர்சல் அக்கவுண்ட் எண்ணுடன் (UAN) இணைக்கும்போது, ​​கணக்கு வைத்திருப்பவரின் பெயர் EPFO ​​விவரங்களுடன் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுவிட்டதால், இந்தக் கூடுதல் ஆவணங்கள் இனி தேவையில்லை என்று அரசாங்கம் கூறியது. கூடுதலாக, UAN எண்ணுடன் வங்கிக் கணக்குகளை இணைக்கும் செயல்முறையை எளிதாக்க, EPFO ​​வங்கி சரிபார்ப்புக்குப் பிறகு முதலாளியின் ஒப்புதலுக்கான தேவையையும் நீக்கியுள்ளது.

முதலாளியின் ஒப்புதல் தொடர்பான விதிகளில் மாற்றம்

வங்கிக் கணக்கு விவரங்களை UAN உடன் இணைப்பதில் முதலாளியின் ஒப்புதலின் தேவையை நீக்குவதாகும். முன்னதாக, உறுப்பினர்கள் PF பணத்தை தடையின்றி திரும்பப் பெறுவதற்கு இணைக்க தங்கள் வங்கிக் கணக்குகளை வேண்டியிருந்தது. இதற்கு சரிபார்ப்புக்குப் பிறகு முதலாளியின் ஒப்புதல் தேவைப்பட்டது. 2024-25 நிதியாண்டில், 1.3 கோடி உறுப்பினர்கள் வங்கி கணக்கை UAN உடன் இணைக்க கோரிக்கைகளைச் சமர்ப்பித்தனர். எனினும், முதலாளியின் ஒப்புதல் செயல்முறை காரணமாக தாமதங்களை எதிர்கொண்டனர்.

வங்கிக் கணக்கில் எளிதாக வரவு வைக்க உதவும் புதிய விதி

தற்போது, ​​ஒவ்வொரு மாதமும் பங்களிக்கும் 7.74 கோடி உறுப்பினர்களில், 4.83 கோடி உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை UAN எண் உடன் இணைத்துள்ளனர். அதோடு சுமார் 14.95 லட்சம் ஒப்புதல்கள் முதலாளி மட்டத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் புதிய விதிகள், வங்கி கணக்கை UAN எண் உடன் இணைக்க பெரிதும் உதவும். ஏற்கனவே இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கை மாற்ற விரும்பும் உறுப்பினர்களுக்கும் இது உதவும். ஆதார் OTP மூலம் IFSC குறியீட்டுடன் புதிய வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிடுவதன் மூலம் இதனை எளிதாக்கலாம். பிஎஃப் உறுப்பினர்கள் தனது வங்கிக் கணக்கை UAN உடன் இணைப்பதன் மூலம், சந்தாதாரர் PF கணக்கை திரும்பப் பெறும் போது கணக்கில் எளிதாக வரவு வைக்கப்படும்.

முன்னோடி திட்ட வெற்றியைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவு

முன்னதாக, KYC அப்டேட் செய்த சில உறுப்பினர்களுக்கான முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 2024, மே 28ம் தேதி அன்று தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், இதுவரை 1.7 கோடி EPFO ​​உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர். முன்னோடி திட்டம் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த வசதி அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு RBI முக்கிய அப்டேட்: குடும்ப ஓய்வூதியம், டிஆர் முதல் ஆயுள் சான்றிதழ் வரை

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அடிப்படை ஆண்டில் மாற்றம், டிஏ கணக்கீடும் மாறுமா? முக்கிய அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News