)
EPFO, Tamilnadu : மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் ஆகியவை இணைந்து மதுரை மண்டலத்துக்குட்பட்ட தேனி, சிவகங்கை. விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் குறை தீர்ப்பு முகாமினை இம்மாதம் 2025 ஜூன் 27 அன்று காலை 9.00 மணியளவில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்குப் பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப். டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்கும் இபிஎப்ஓ குறித்த குறைகளுக்கு தீர்வு காண t.ly/nPTt என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்த பின்னர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம்.
முகாம் நடைபெறும் இடங்கள்:
மதுரை - அதியபான சிபிஎஸ்இ பள்ளி, மதுரை திண்டுக்கல் நெடுஞ்சாலை, பரவை, மதுரை - 625402
சிவகங்கை - அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
ராமநாதபுரம் - டான் பாஸ்கோ ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ், 64/1, செவல்பட்டி சாலை, சாயல்குடி, ராமநாதபுரம் மாவட்டம் – 623120
தேனி - எஸ்கேஏ மேல்நிலைப் பள்ளி, மீனாட்சி சுந்தர தெரு, ஆண்டிப்பட்டி - 625531
விருதுநகர் - செயின்ட் பால் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, காமராஜ் நகர், ராஜபாளையம்- 626117
திண்டுக்கல் - ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 7-வது தெரு, ஆனந்தகிரி, கொடைக்கானல்
சந்தாதாரர்கள் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளுமாறு வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டல ஆணையர் திரு அமியகந்த் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த சிறப்புகுறைதீர் முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கான கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம். சீக்கிரம் தீர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ