EPFO Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நல்ல செய்தி! வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்திலிருந்து பயனடைய உங்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்துவதற்கும், உங்கள் ஆதாரை உங்கள் வங்கிக் கணக்குகளுடன் இணைப்பதற்குமான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இபிஎஃப்ஓ இந்த செய்தியை அளித்தது. இந்த பணியை செய்து முடிக்க உங்களுக்கு இப்போது மார்ச் 15, 2025 வரை அவகாசம் உள்ளது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு கிடைத்த முக்கிய செய்தி
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சமீபத்திய சுற்றறிக்கையின் மூலம் இந்த புதுப்பிப்பு அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய காலக்கெடு பிப்ரவரி 15, 2025 ஆக இருந்தது. ELI திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN ஐ செயல்படுத்தி தங்கள் வங்கிக் கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது அவசியமாகும்.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்கள் இதை செய்ய வேண்டியது அவசியம்
இபிஎஃப் சந்தாதாரர்கள் கண்டிப்பாக யுஏஎன் ஆக்டிவேஷன் மற்றும் ஆதார்-வங்கிக் கணக்கு இணைப்பை செய்து முடிக்க வேண்டும். UAN செயல்படுத்தப்படவில்லை என்றால், அதாவது ஆக்டிவேட் செய்யப்பட்வில்லை என்றால், ELI திட்டத்தின் பலன்களை உறுப்பினர்கள் பெற முடியாது.
Employment Linked Incentive scheme: வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம்
ELI திட்டம் என்றால் என்ன? அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 மில்லியன் வேலைகளை உருவாக்கும் நோக்கில், இந்திய அரசு 2024-25 பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் பணப் பலன்களைப் பெற, ஊழியர்கள் தங்கள் UAN-ஐ செயல்படுத்தி, அதை தங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் ஆதாருடன் இணைக்க வேண்டும்.
ELI scheme: இஎல்ஐ திட்டம்
ELI திட்டம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது: A, B, மற்றும் C. இவை அனைத்தும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கவும் புதிய ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளில், ரூ.2 லட்சம் கோடி பட்ஜெட்டில். 41 மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், திறன்களை வளர்த்தல் மற்றும் பிற வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை இதன் குறிக்கோளாகும். இரண்டு ஆண்டுகளில் 20 மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை உருவாக்குவதே இதன் இலக்கு.
அனைத்து EPFO சந்தாதாரர்களும் தங்கள் UAN-ஐ ஆதாருடன் இணைக்க வேண்டும். UAN-ஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும். உறுப்பினர் போர்ட்டலில் லாக் இன் செய்து இதை செய்யலாம். இதன் மூலம் ஒரே தளத்தில் இருந்து பல்வேறு சேவைகளை அணுக முடியும். இந்த முயற்சியின் கீழ், முதல் முறையாக பணிபுரியும் ஊழியர்கள் மூன்று தவணைகளில் ரூ.15,000 வரை சம்பளம் பெறுவார்கள். இது அவர்களின் ஆதார்-இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.
EPF Contribution: இபிஎஃப் பங்களிப்பு
முதலாளிகள் / நிறுவனங்கள் மற்றும் புதிய ஊழியர்கள் இரு தரப்பும் நான்கு ஆண்டுகளுக்கு EPFO பங்களிப்புகளில் ஊக்கத்தொகையைப் பெறுவார்கள். ஒவ்வொரு பணியாளரை புதிதாக சேர்க்கும் போதும், அரசாங்கம் முதலாளி / நிறுவனத்திற்கு மாதத்திற்கு ரூ.3,000 வழங்கும். இந்த ஆதரவு இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும்.
இது முதலாளிகள் / நிறுவனங்கள் தங்கள் பணியாளர் அளவை விரிவுபடுத்த ஊக்குவிக்கும். மேலும் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கும் ஊழியர்களும் இந்த நன்மையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
How to Activate Your UAN: உங்கள் UAN-ஐ செயல்படுத்துவது எப்படி? இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- முதலில் epfindia.gov.in இல் உள்ள EPFO வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- சேவைகள் பிரிவில் “For Employees” என்பதைக் கிளிக் செய்யவும்.
- சேவைகள் நெடுவரிசையில் இருந்து “Member UAN Online Service OCS OTCP” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- “Activate UAN" என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் 12 இலக்க UAN, ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
- கீழே உள்ள அறிவிப்புப் பெட்டியை செக் செய்யவும்.
- “Get Authorization Pin” பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- அதன் பின்னர் UAN பின்னர் செயல்படுத்தப்படும்.
உங்கள் KYC விவரங்களை UAN உடன் இணைக்க, EPF உறுப்பினர் போர்ட்டலில் லாக் இன் செய்து இந்த செயல்முறைகளைப் பின்பற்றவும்:
- முகப்புப் பக்கத்திலிருந்து “KYC” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் சேர்க்க விரும்பும் விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும் (PAN, வங்கிக் கணக்கு, ஆதார், முதலியன).
- தேவையான தகவல்களை நிரப்பி "சேமி" என்பதைக் கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க | UPS: ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம்.... 50% ஓய்வூதியம், அரசின் பம்பர் பரிசு
மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: 65 வயதிலேயே இனி 5%, 10%, 15% கூடுதல் ஓய்வூதியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









