EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, ஓய்வூதியத் திட்டத்தில் பெரிய சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது. இது குறித்து இபிஎஃப்ஓ சார்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பதிவில், இது தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்கள் மற்றும் தகவல்களைப் பற்றி காணலாம்.
EPF Account
EPFO இடம் பல விதமாத கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இபிஎப் கணக்கில் ஓய்வூதியம் பெறுபவர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணைவர் இறந்த பிறகு, ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை அவர்களது குழந்தைகளிடம் ஒப்படைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
EPF Members: ஊழியர்களுக்கு அரசாங்கம் விரைவில் இந்த பெரிய பரிசை வழங்கவுள்ளதா?
ஓய்வூதியத் திட்டத்தை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு தொழிலாளர் அமைச்சகம் பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன்மூலம் அதிகமான மக்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சேர்ந்து இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது குறித்தும் அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், கூடிய விரைவில் இதை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது.
மேலும் படிக்க | இந்திய ரயில்வேயில் அதிக கோடிகளை குவிக்கும் ரயில் எது தெரியுமா? வந்தே பாரத் கிடையாது!
Minimum Monthly Pension: ஊழியர்களின் நலனுக்காக இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது
நீண்ட காலம் பணியாற்றிய பின்னரும் ஓய்வூதியத் தொகை குறைவாக உள்ள இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகப்பட்ட பலன் வழங்கப்பட உள்ளது. தற்போதைய குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1000 ஆக உள்ளது. இதை உயர்த்தும் திட்டமும் இதில் அடங்கும். EPF இன் கீழ் சமூக பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த, தொழிலாளர் அமைச்சகம் ஓய்வூதிய நிதிக்கு அதிக பங்களிப்பை வழங்கவும் ஆலோசித்து வருகிறது.
EPFO Wage Ceiling Hike: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்
தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் ஒரு முன்மொழிவை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. அதில் ஓய்வூதியம் கணக்கிட தற்போதுள்ள ரூ.15,000 என்ற ஊதிய வரம்பை ரூ.21,000 ஆக உயர்த்த வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் ஓய்வூதியம் ரூ.15,000 -இன் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகின்றது. அதன் வரம்பை உயர்த்துவது குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. இது மிக விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பள வரம்பு ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டால், தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் இபிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கும்.
EPFO புதுப்பிப்பை சரிபார்க்கவும்
இந்த முன்மொழிவுகள பற்றிய அதிகாரப்போர்வ அறிவிப்பு இன்னும் எதுவும் வரவில்லை. எனினும், கூடிய விரைவில், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாற்றங்களுக்காக ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வாரியமும் இதைப் பற்றி விவாதிக்க ஒப்புக்கொண்டுள்ளது. விரைவில் அரசாங்கம் EPFO ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் படிக்க | குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்யணுமா? இந்த ட்ரிக் பாலோ பண்ணுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ