)
EPFO Wage Ceiling Hike: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் கட்டாய கவரேஜுக்கான ஊதிய வரம்பு அதிகரிக்கபடக்கூடும். இந்த வரம்பை மாதத்திற்கு ரூ.15,000 -இலிருந்து ரூ.25,000 ஆக அதிகரிக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, இபிஎஃப் திட்டத்தில் அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.15,000 வரை சம்பாதிக்கும் ஊழியர்கள் மட்டுமே இந்தத் திட்டங்களின் கீழ் கட்டாயமாக சேர்க்கப்படுகிறார்கள். அந்தத் தொகைக்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்கள் திட்டத்தில் தொடர்வதும், அதிலிருந்து விலகுவதும் அவர்களது தேர்வாக உள்ளது. மேலும் அவர்களது நிறுவனங்களுக்கும் அவர்களை EPF அல்லது EPS இன் கீழ் பதிவு செய்ய சட்டப்பூர்வ நிர்பந்தம் கிடையாது. இது முற்றிலும் இந்த ஊழியர்களின் விருப்பம் சார்ந்தது.
டிசம்பர் அல்லது ஜனவரியில் அடுத்த EPFO மத்திய அறங்காவலர் குழு கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கூட்டத்தில் ஊதிய உச்சவரம்பை அதிகரிப்பதற்கான திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இபிஎஃப் சம்பள உச்சவரம்பில் ரூ.10,000 அதிகரிக்கப்பட்டால், அது சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களை கட்டாய சமூகப் பாதுகாப்பு சலுகைகளின் கீழ் கொண்டு வரக்கூடும்.
- தொழிலாளர் சங்கங்கள் நீண்ட காலமாக இந்த மாற்றத்திற்கான கோரிக்கையை வைத்து வருகின்றன.
- நகரங்களில் உள்ள பல குறைந்த மற்றும் நடுத்தர திறமையான தொழிலாளர்கள் இப்போது ரூ.10,000 க்கு மேல் சம்பாதிக்கிறார்கள். ஆகையால் இந்த வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்பது அவர்களது வாதமாக உள்ளது.
தற்போதைய விதிகளின் கீழ், ஊழியர்களும் நிறுவனங்களும் ஒவ்வொரு மாதமும் பணியாளரின் அடிப்படை சம்பளத்தில் தலா 12 சதவீதத்தை இபிஎஃப் கணக்கில் பங்களிக்கின்றனர். பணியாளரின் 12 சதவீதம் முழுவதும் EPF கணக்கிற்கு செல்கிறது, நிறுவனத்தின் 12% பங்கில் 3.67 சதவீதம் இபிஎஃப் கணக்கிற்கும், 8.33 சதவீதம் இபிஎஸ் கணக்கிற்கும் செல்கிறது.
- EPF ஊதிய உச்சவரம்பை மாதத்திற்கு ரூ.25,000 ஆக உயர்த்தும் திட்டம் ஒரு நேர்மறையான நடவடிக்கையாக இருக்கும்.
- சம்பள வரம்பு உயர்த்தப்படால், அது EPF மற்றும் EPS இல் உள்ள மொத்த நிதியை அதிகரிக்கும்.
- தொழிலாளர்கள் அதிக வட்டி சம்பாதிக்கவும், ஓய்வுக்குப் பிறகு அதிக ஓய்வூதியத்தைப் பெறவும் இது உதவும்.
- இது அதிகமான தொழிலாளர்களை சமூகப் பாதுகாப்பு அமைப்பின் கீழ் கொண்டு வர உதவு.
- இந்த நடவடிக்கை இந்தியாவின் பணியாளர்களில் பலர் நீண்டகால நிதி பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய சலுகைகளை அணுக உதவும்.
இபிஎஃப் ஊதிய உச்சவரம்பு சுருக்கமாக....
- இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்.
- EPFO ஊதிய உச்சவரம்பு தற்போது மாதம் ரூ.15,000 ஆக உள்ளது.
- இந்த வரம்பை மாதம் ரூ.25,000 ஆக மாற்ற வேண்டும் என கோரிக்கை உள்ளது.
- இந்த வரம்பு அதிகரிக்கப்பட்டால், அது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ