)
EPFO Wage Ceiling Hike: நாடு முழுவதும் உள்ள இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இன்னும் சில நாட்களில் நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. வருங்கால வைப்பு நிதி (PF) பங்களிப்புகளுக்கான கட்டாய ஊதிய உச்சவரம்பை தற்போதைய ரூ.15,000 இலிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனியார் துறை ஊழியர்கள், தொழிலாளர் சங்கங்கள் ஆகியோர் இதற்காக நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த திட்டம் தற்போது தீவிரமாக பரிசீலனையில் உள்ளதாகவும், டிசம்பர் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் இதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வரலாம் என்றும் மணிகண்ட்ரோல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதி செயல்படுத்தப்பட்டால், அதிகமான ஊழியர்களை EPF மற்றும் EPS (ஊழியர் ஓய்வூதியத் திட்டம்) காப்பீட்டின் கீழ் கொண்டு வர முடியும். இதன் மூலம் அதிகமான ஊழியர்களுக்கு அதிக நிதிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய சலுகைகள் கிடைக்கும்.
தற்போது, மாதத்திற்கு ரூ.15,000 வரை அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்கள் கட்டாயமாக EPF திட்டத்தின் கீழ் சேர்க்கபடுகின்றனர். நிறுவனம் மற்றும் ஊழியர்கள் இருவரும் ஒவ்வொரு மாதமும் அடிப்படை சம்பளத்தில் 12% -ஐ இபிஎஃப் நிதிக்கு பங்களிக்கின்றனர். பணியாளரின் முழு பங்களிப்பும் EPFக்குச் செல்கிறது, நிறுவனத்தின் பங்களிப்பில் EPF -க்கு ஒரு பங்கும் EPS க்கு ஒரு பங்கும் செலுத்தப்படுகின்றன.
இபிஎஃப் ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக திருத்தப்பட்டால், லட்சக்கணக்கான கூடுதல் தொழிலாளர்கள் - குறிப்பாக பெருநகரங்கள் மற்றும் தொழில்துறை பகுதிகளில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் - EPFO இன் சமூகப் பாதுகாப்பு சலுகைகளுக்கு தானாகவே தகுதி பெறுவார்கள்.
உச்சவரம்பை அதிகரிப்பது, ஒழுங்கமைக்கப்பட்ட துறை முழுவதும் கிட்டத்தட்ட 1 கோடி ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்தக்கூடும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் உள் மதிப்பீடு கூறுகிறது. தொழிற்சங்கங்கள் இந்த மாற்றத்தை பல ஆண்டுகளாக கோரி வருகின்றன. ரூ.15,000 என்ற ஊதிய உச்சவரம்பு இனி தற்போதைய ஊதிய அமைப்பைப் பிரதிபலிக்காது என்பது அவர்களது வாதமாக இருந்து வருகின்றது.
டிசம்பர் அல்லது ஜனவரியில் நடைபெறவுள்ள EPFO இன் மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) அடுத்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தால், அது நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்படும். இதன் தாக்கம் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரு தரப்பினருக்கும் இருக்கும்.
ஊழியர்களின் பங்களிப்புகள்:
ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்படால், அதிகமான தொழிலாளர்கள் EPF, EPS மற்றும் காப்பீட்டு சலுகைகளை அணுக முடியும். இது நீண்டகால நிதி பாதுகாப்பு மற்றும் நிலையான ஓய்வூதிய வருமானத்தை உறுதி செய்யும்.
நிறுவனங்களின் பங்களிப்பு:
ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரு தரப்பும் அடிப்படை ஊதியத்தில் தலா 12% பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குவார்கள். ரூ.25,000 சம்பாதிப்பவர்களுக்கு, பங்களிப்பு மாதத்திற்கு ரூ.1,800 இலிருந்து ரூ.3,000 ஆக உயரக்கூடும்.
அதிக ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய்:
பங்களிப்புகளின் அதிகரிப்பு EPF கார்பஸின் அளவை அதிகரிக்கும். இது பெரிய வட்டி திரட்டல்களுக்கும் மேம்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கும் வழிவகுக்கும்.
தற்போது, EPFO சுமார் ரூ.26 லட்சம் கோடி மதிப்புடைய ஒரு பெரிய கார்பஸை நிர்வகிக்கிறது. கிட்டத்தட்ட 7.6 கோடி செயலில் உள்ள உறுப்பினர்கள் இதில் உள்ளனர். சம்பள உச்சவரம்பில் முன்மொழியப்பட்ட அதிகரிப்பு உறுப்பினர்களை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், நீண்டகால சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் இந்தியாவின் அமைப்புசார்ந்த பணியாளர்களின் ஒட்டுமொத்த கவரேஜையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
EPFO ஊதிய உச்சவரம்பு ஏற்றம் சுருக்கமாக.....
- தற்போதைய EPFO ஊதிய உச்சவரம்பு: ₹15,000/மாதம்
- முன்மொழியப்பட்ட புதிய வரம்பு: ₹25,000/மாதம்
- டிசம்பர்–ஜனவரி மாதன்களில், அடுத்த CBT கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ