EPF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்...நாடாளுமன்ற குழு பரிந்துரை

EPFO Update: இபிஎஸ் ஓய்வூதியத்தை அதிகரிப்பது தொடர்பாக, ஒரு நாடாளுமன்ற நிலைக்குழு தொழிலாளர் அமைச்சகத்திடம் பரிந்துரைகளை அளித்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 21, 2025, 04:53 PM IST
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி
  • இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு.
  • நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை என்ன?
EPF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்...நாடாளுமன்ற குழு பரிந்துரை

EPS Pension Latest News: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க தொழிற்சங்கங்களும் பல்வேறு ஓய்வூதியதாரர்களின் சங்கங்களும் நீண்ட காலமாகக் கோரி வருகின்றன. 2014 ஆம் ஆண்டில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு பங்களிக்கும் EPFO ​​உறுப்பினர்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியத்தை ரூ.1,000 ஆக நிர்ணயித்தது. 

Add Zee News as a Preferred Source

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி

இருப்பினும், அதன் பிறகு தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர் பிரதிநிதி அமைப்புகளின் கோரிக்கைகள் இருந்தபோதிலும், EPS இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையில் அரசாங்கம் எந்தத் திருத்தத்தையும் செய்யவில்லை. ஆனால் இப்போது ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. இதற்கு காரணம் தற்போது வந்துள்ள ஒரு அப்டேட். மூன்று தசாப்தங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட EPS-95 என்றும் அழைக்கப்படும் EPS, மூன்றாம் தரப்பினரால் அதாவது வெளிப்புற நிபுணர்களால் முதல் முறையாக ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Parliamentary Panel Recommendation: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

இபிஎஸ் ஓய்வூதியத்தை அதிகரிப்பது தொடர்பாக, ஒரு நாடாளுமன்ற நிலைக்குழு தொழிலாளர் அமைச்சகத்திடம், EPS இன் மூன்றாம் தரப்பு மதிப்பீட்டை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பசவராஜ் பொம்மை தலைமையிலான குழு, மதிப்பீட்டு செயல்முறையை 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த குழு தொழிலாளர் அமைச்சகத்திடம், EPS இன் கீழ் தற்போதுள்ள ரூ.1,000 குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கப்படுவதை "அவசர உணர்வுடன்" எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் வாழ்க்கைச் செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது, அதாவது பணவீக்கம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் ஓய்வூதியத் தொகை அப்படியே உள்ளது என்று குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

EPS 1995 இல் தொடங்கப்பட்டது. ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்களுக்கு நிரந்தர வருமானத்தை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். குழு தனது அறிக்கையில், "திட்டம் தொடங்க்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு பிறகு, இதன் மூன்றாம் தரப்பு மதிப்பீடு நடத்தப்படுவதைக் கவனித்து, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தப் பயிற்சியை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்று குழு கடுமையாக பரிந்துரைக்கிறது" என்று கூறியுள்ளது.

இந்த முதல் மூன்றாம் தரப்பு மதிப்பாய்வுக்கான செயல்முறை முன்மொழிவு கோரிக்கை (RFP) மூலம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சகம் குழுவிடம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற மறுஆய்வு எதுவும் செய்யப்படவில்லை என்றும் குழுவிடம் கூறப்பட்டது.

2014 உடன் ஒப்பிடும்போது 2024 இல் வாழ்க்கைச் செலவுகளில் பல வித மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் குறைந்தபட்ச மாத ஓய்வ்தியத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆகையால், இதை உடனடியாக அதிகரிப்பது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும். 

EPS Pensioners: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு

2020 இல், குறைந்தபட்ச EPS ஓய்வூதியத்தை ரூ.2000 ஆக உயர்த்துவதற்கான திட்டம் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் அது அங்கீகரிக்கப்படவில்லை என்று அமைச்சகம் குழுவிடம் கூறியது. பின்னர் இந்த திட்டம் 2024-25 பட்ஜெட்டுக்கு முன் விவாதத்தின் ஒரு பகுதியாக மாறியது.

இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்னதாக, EPS-95 ஓய்வுபெற்ற ஊழியர்களின் குழு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து EPS ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.7,500 ஆக உயர்த்துவதற்கான கோரிக்கையை முன்வைத்தது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு EPS-95 தேசிய போராட்டக் குழு, அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் என்று நிதியமைச்சர் உறுதியளித்ததாகக் கூறியது.

கடந்த பல ஆண்டுகளாக, ஊழியர் சங்கங்கள் EPFO ​​உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கக் கோரி வருகின்றன. இந்தத் தொகையை ரூ.7,500 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றும், அதிகரித்து வரும் பணவீக்கத்தை ஈடுசெய்ய அகவிலைப்படி சலுகையையும் வழங்க வேண்டும் என்றும் கொரிக்கைகள் உள்ளன்.

மேலும் படிக்க | தட்கல் டிக்கெட் புக்கிங்: எளிதாக முன்பதிவு செய்வது எப்படி?

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு அதிர்ச்சி: இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது! விதிகளில் அரசு செய்த மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News