EPS Pension Calculator: EPS 1995 இல் தொடங்கப்பட்டது.இது ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு நிலையான ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்கிறது.

EPFO Pension Calculator: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். இது இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் பணி ஓய்வு மற்றும் எதிர்காலத்திற்காக சேமிக்க உதவுகிறது. EPS 1995 இல் தொடங்கப்பட்டது.இது ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு நிலையான ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்கிறது.
Employee Pension Scheme: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) என்றால் என்ன?
ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) என்பது ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும். இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members)தானாகவே EPS இன் அங்கமாக்கப்படுகிறார்கள். இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டமாகும். ஆகையால் இதில் உறுப்பினர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும்.
EPF Contribution: இபிஎஃப் பங்களிப்பு
ஊழியர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. நிறுவனம் டெபாசிட் செய்யும் தொகையில் 3.67% இபிஎஃப் கணக்கிற்கும் 8.33% இபிஎஸ் கணக்கிற்கும் செல்கிறது. இந்த தொகையிலிருந்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படுகின்றது.
EPS -க்கான தகுதி அளவுகோல்கள் என்ன?
- உறுப்பினர்கள் எர்ளி பென்ஷன் பெற 50 வயதையும் வழக்கமான ஓய்வூதியத்தை பெற 58 வயதையும் அடைந்திருக்க வேண்டும்.
- நீங்கள் EPFO உறுப்பினராக இருக்க வேண்டும்.
- 10 ஆண்டுகள் சேவையை முடித்திருக்க வேண்டும்.
EPS இன் நன்மைகள் என்ன?
- ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 58 வயதில் ஓய்வு பெற்ற பிறகு அல்லது 50 வயதில் முன்கூட்டியே ஓய்வு பெறும் போதும் நிலையான வருமானத்தை வழங்குகிறது.
- உறுப்பினர் 58 வயதுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு சேவையை விட்டு வெளியேறினால், 58 வயதில் முழுமையான ஓய்வூதியத் தொகையை பெற இது அனுமதிக்கிறது.
EPS Nomination
Eps நாமினேஷன் என்பது கணக்கு வைத்திருப்பவர் EPS இலிருந்து ஓய்வூதியப் பலன்களைப் பெற ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு முறையாகும். நாமினியாக பரிந்துரைக்கப்பட்டவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, வாழ்க்கைத் துணை, குழந்தைகள் அல்லது சார்புடைய பெற்றோர். உறுப்பினருக்கு குடும்பம் இல்லையென்றால், அவர்கள் வேறு யாரை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம்.
பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் மட்டுமே நிதியின் பயனாளிகளா?
EPS இன் நன்மை ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஆனால் அவர் இல்லாத போது, ஊழியரின் குடும்பத்தினருக்கு இந்த நன்மை கிடைக்கின்றது.
குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச EPS தொகை என்ன?
ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் கிடைக்கும்
- குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000,
- அதிகபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7,500.
EPS Calculation: இபிஎஸ் கணக்கீடு
EPS ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்:தற்போதைய வயது 28, ஓய்வூதியம் பெறக்கூடிய சேவை காலம் 30 ஆண்டுகள்
மாதாந்திர ஓய்வூதியத் தொகை = (ஓய்வூதிய சம்பளம் x ஓய்வூதிய சேவை) / 70.
நீங்கள் பெறும் மாதாந்திர ஓய்வூதியத் தொகை உங்கள் ஓய்வூதிய சம்பளம் மற்றும் சேவையைப் பொறுத்தது. சூத்திரத்தில் பயன்படுத்தப்படும் சராசரி சம்பளம் கடந்த 12 மாதங்களுக்கான உங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் சராசரி ஆகும்.
EPS Monthly Pension Calculation: இபிஎஸ் மாதாந்திர ஓய்வூதியக் கணக்கீடு
உங்கள் மாதாந்திர ஓய்வூதியம் என்னவாக இருக்கும்?
- தற்போதைய சம்பள உச்சவரம்பு ரூ.15,000 -இன் படி பங்களிப்பு கணக்கிடப்படுகின்றது.
- ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ.45,000 ஆக இருந்தாலும், அவர்களின் EPS ஓய்வூதியம் ரூ.15,000 சம்பளத்தில் கணக்கிடப்படும்.
- சேவை 30 ஆண்டுகள் என்றால் அந்த நபர் சுமார் ரூ.6,429 ஓய்வூதியமாகப் பெறலாம்.
- (ஓய்வூதிய சம்பளம் X ஓய்வூதிய சேவை)/70 = (15,000x30)/70 = ரூ.6,429.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ