)
EPS Pension Calculation: தமியார் துறை, பொதுத்துறை என எதுவாக இருந்தாலும், ஊழியர்கள் ஊதியத்திற்கு கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை பணி ஓய்வுக்கு பிறகான நிதி பாதுகாப்பிற்கும் அளிக்கிறார்கள். பணி ஓய்வுக்கு பிறகு மாத வருமானம் என்பது சவாலாகி விடுகிறது. ஆகையால், இள வயதிலேயே ஒய்வூதிய நிதிக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது மிக அவசியமாகும்.
பணி ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டியது மிக அவசியமாகும். இதில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஊழியர் ஓய்வுதிய நிதி மிக உதவியாக இருக்கும். EPS எனப்படும் ஊழியர் ஓய்வுதிய நிதி அமைப்பு EPFO ஆல் நிர்வகிக்கப்படுகின்றது.
EPS அதாவது ஊழியர் ஓய்வூதியத் திட்டம் என்பது ஒரு அரசு ஓய்வூதியத் திட்டமாகும். இது ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. EPS மூலம் ஓய்வூதியம் பெற. EPFO கணக்கு வைத்திருப்பது அவசியமாகும். இபிஎஃப் கணக்கில், ஊழியரும் நிறுவனமும் அடிப்படை சம்பளத்தில் 12% டெபாசிட் செய்றார்கள். உறுப்பினர்களின் பங்களிப்பு முழுதும் இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33 சதவீதம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS), 3.67 சதவீதம் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கும் (EPF) செல்கிறது. இந்த நிதியிலிருந்து பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
- 10 வருட சேவையை முடித்த பிறகு, அனைத்து ஊழியர்களும் EPS கீழ் ஓய்வூதியம் பெற தகுதி பெருகிறார்கள்.
- 50 வயதை எட்டியவர்கள் பணி ஓய்வுக்கு முன்னரே கிடைக்கும் எர்ளி பென்ஷனுக்கு தகுதிபெறுகிறார்கள்.
- வழக்கமான ஓய்வூதியத்தைப் பெற 58 வயதை எட்டியவர்கள் தகுதிபெறுகிறார்கள்.
EPS இல் ஓய்வூதியக் கணக்கீடு ஒரு சூத்திரத்தின்படி செய்யப்படுகிறது. மேலும் அதில் ஒரு வரம்பும் உள்ளது. இதன் கீழ், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ₹ 50,000 ஆக இருந்தாலும், ₹ 60,000 ஆக இருந்தாலும், EPS இல் கணக்கீடு ₹ 15,000 -இல் தான் செய்யப்படுகிறது.
- EPS ஓய்வூதியம் (ஓய்வூதிய சம்பளம் × சேவை காலம்) ÷ 70 என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.
- இங்கு ஓய்வூதிய சம்பளம் என்பது கடந்த 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி (அதிகபட்சம் ரூ.15,000 கருதப்படுகிறது).
- சேவை காலம் என்பது ஊழியர்கள் எத்தனை ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்கள் என்பதைக் குறிக்கிறது.
ஊழியர்களுக்கு இபிஎஸ் ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.50,000 என வைத்துக்கொள்வோம். 20, 25 மற்றும் 30 ஆண்டுகள் சேவை காலத்திற்கு பிறகு அவருக்கு எவ்வளவு EPS ஓய்வூதியம் கிடைக்கும்?
ஊழியரின் அடிப்படை சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் என்றாலும், வரம்பு காரணமாக, அவரது ஓய்வூதிய கணக்கீடு ரூ.15000 -இல் தான் செய்யப்படும்.
20 ஆண்டு சேவைக்கான இபிஎஸ் ஓய்வூதியம்: (15,000 x 20)/70 = மாதத்திற்கு ரூ.4,285
25 ஆண்டுகள் சேவைக்கான இபிஎஸ் ஓய்வூதியம்: (15,000 x 25)/70 = மாதத்திற்கு ரூ.5,357
30 ஆண்டுகள் சேவைக்கான இபிஎஸ் ஓய்வூதியம்: (15,000 x 35)/70 = மாதத்திற்கு ரூ.7,500
இபிஎஸ் ஓய்வூதியம்: முக்கிய அம்சங்கள் சுருக்கமாக....
- இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பணி ஓய்வின் போது மொத்த தொகையாக இபிஎஃப் தொகை கிடைக்கிறது.
- இபிஎஸ் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகை ஓய்வூதிய நன்மையை அளிக்கின்றது.
- EPS இன் கீழ் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உள்ளது.
- குறைந்தபட்ச ஓய்வூதுயம் மாதத்திற்கு ரூ.1,000 ஆகும்.
- ஊழியர் இறந்தால், EPS நாமினி ஓய்வூதியத்தைப் பெறுகிறார்.
- ஊழியர்கள் தங்கள் மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோரை நாமினியாக நியமிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ