)
EPFO Pension Calculator: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) என்பது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு பிரபலமான ஓய்வூதியத் திட்டமாகும். இது ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் பணி ஓய்வு காலத்திற்காக பணத்தை சேமிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்தத் திட்டம் 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு வழக்கமான ஓய்வூதியத்தை வழங்குவதாகும்.
Employee Pension Scheme: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
EPS என்பது ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும். இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) அனைவரும் தானாகவே EPS இல் உறுப்பினராகிவிடுகிறார்கள். இந்தத் திட்டம் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது. ஆகையால், இதில் டெபாசிட் செய்யப்படும் பணம் பாதுகாப்பாக இருக்கும். இபிஎஃப் -இல் ஊழியர்களுக்கு ஓய்வூதிய உத்தரவாதமும் கிடைக்கும்.
EPS: இதற்கான தகுதி நிபந்தனைகள் என்ன?
50 வயதில் முன்கூட்டியே ஓய்வூதியம், அதாவது எர்ளி பென்ஷன் பெற விரும்பினாலோ. அல்லது 58 வயதில் வழக்கமான ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவராக இருந்தாலோ, நீங்கள் EPFO-வில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் குறைந்தது 10 வருட சேவையை முடித்திருக்க வேண்டும்.
EPF Contribution: இபிஎஃப் பங்களிப்பு
ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஊதியம் + அகவிலைப்படியில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை முதலாளி / நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. நிறுவனம் டெபாசிட் செய்யும் தொகையில் 3.67% இபிஎஃப் கணக்கிற்கும் 8.33% இபிஎஸ் கணக்கிற்கும் செல்கிறது. இந்த தொகையிலிருந்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படுகின்றது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
இபிஎஸ் திட்டம் 58 வயதில் ஓய்வு பெற்ற பிறகு அல்லது 50 வயதில் முன்கூட்டியே ஓய்வு பெற்ற பிறகு வழக்கமான வருமானத்தை வழங்குகிறது. உறுப்பினர் 58 வயதிற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டு வெளியேறினால், அவர் 58 வயதில் முழு ஓய்வூதியத் தொகையையும் திரும்பப் பெறலாம்.
EPS Nomination: இபிஎஸ் நாமினேஷன்
- இபிஎஸ் நாமினேஷன் என்பது இபிஎஃப் உறுப்பினர் தனது குடும்ப உறுப்பினரை (மனைவி, குழந்தைகள் அல்லது சார்ந்திருக்கும் பெற்றோர் போன்றவர்கள்) ஓய்வூதியத்தின் பயனாளியாக பரிந்துரைக்கக்கூடிய ஒரு செயல்முறையாகும்.
- உறுப்பினருக்கு குடும்பம் இல்லையென்றால், அவர் எந்த நபரை வேண்டுமானாலும் நாமினியாக தேர்ந்தெடுக்கலாம்.
EPS Pensioners: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச EPS தொகை என்ன?
EPS திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம்: ரூ.1,000
EPS திட்டத்தின் கீழ் அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியம்: ரூ.7,500
EPS Calculation: இபிஎஸ் கணக்கீடு
EPS ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்:
மாதாந்திர ஓய்வூதியத் தொகை = (ஓய்வூதிய சம்பளம் x ஓய்வூதிய சேவை) / 70
உங்கள் அடிப்படை சம்பளம் ரூ.55,000 ஆக இருந்து, 30 வருட சேவையை முடித்திருந்தால், உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
30 வருட சேவைக்கான மாதாந்திர ஓய்வூதியத்தைக் கணக்கீடு
உங்கள் மாதாந்திர ஓய்வூதியத் தொகை உங்கள் ஓய்வூதிய சம்பளம் மற்றும் சேவை காலத்தைப் பொறுத்தது. இந்த சூத்திரத்தில் பயன்படுத்தப்படும் சராசரி சம்பளம், கடந்த 12 மாதங்களுக்கான உங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் (DA) சராசரியாகும். இருப்பினும், EPS ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான அதிகபட்ச சம்பள வரம்பு ரூ.15,000. அதாவது, உங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ.55,000 ஆக இருந்தாலும், ஓய்வூதியம் ரூ.15,000 ஆக கணக்கிடப்படும்.
உதாரணமாக:
உங்கள் ஓய்வூதிய சேவை 30 ஆண்டுகள் என்றால், உங்கள் மாதாந்திர ஓய்வூதியம்:
(15,000 x 30) / 70 = ரூ. 6,429.
இந்த வழியில், ரூ.55,000 அடிப்படை சம்பளம் மற்றும் 30 ஆண்டுகள் சேவையுடைய ஒரு ஊழியருக்கு, மாத ஓய்வூதியமாக சுமார் ரூ.6,429 கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ