)
EPS Pension Calculation: தனியார் துறை ஊழியர்கள் அனைவரும் பெரும்பாலும் இபிஎஃப் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அப்படி இபிஎஃப் உறுப்பினர்களாக இருக்கும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. இந்த ஓய்வூதியம் EPFO-வின் EPS-ன் கீழ் வழங்கப்படுகிறது.
தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை இபிஎஃப் பங்களிப்பிற்காக கழிக்கப்படுகின்றது. ஊழியர்கள் பங்களிக்கும் அதே அளவு தொகையை நிறுவனமும் அளிக்கிறது. ஊழியர்கள் டெபாசிட் செய்யும் தொகை முழுமையாக இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. நிறுவனம் டெபாசிட் செய்யும் தொகையில் ஒரு சதவிகிதம் இபிஎஃப் கணக்கிற்கும், ஒரு சதவிகிதம் இபிஎஸ் கணக்கிற்கும் செல்கிறது. ஊழியர்கள் 58 வயதிற்குப் பிறகு, இந்த இபிஎஸ் நிதியிலிருந்து ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவீர்கள்.
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) -யின் EPS திட்டம், ஓய்வு பெற்ற பிறகு தனியார் துறை ஊழியர்களுக்கு வழக்கமான மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16, 1995 அன்று தொடங்கப்பட்ட "ஊழியர் ஓய்வூதியத் திட்டம்" என்பது இந்திய அரசின் ஒரு சமூகப் பாதுகாப்பு முயற்சியாகும். இது ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஏற்பாடுகள் சட்டம், 1952 இன் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு, ஊனமுற்றால் அல்லது இறந்தவுடன் அவர்களது குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.
இந்த ஓய்வூதியத் திட்டம் EPFO உறுப்பினர்களாக இருக்கும், இபிஎஃப் கணக்கில் பங்களித்த ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்குகிறது. ஊழியரின் மரணத்திற்குப் பிறகு, ஓய்வூதியம் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்ட நாமினிக்கு அளிக்கப்படுகின்றது. ஊழியர்கள் EPS கணக்கில் பங்களிப்பதில்லை. இதில் நிறுவனத்தின் பங்களிப்பாக ஊழியரின் சம்பளத்தில் 8.33% (அடிப்படை + அகவிலைப்படி) செல்கிறது. 58 வயதிற்குப் பிறகு இந்தத் திட்டத்தின் கீழ் ஊழியர் ஓய்வூதியம் பெறுகிறார்.
15 ஆண்டுகள் பணிபுரிந்த ஒருவருக்கு 58 வயதிற்கு பிறகு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என ஒரு கணக்கீட்டின் மூலம் இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம்.
15 வருட சேவைக்கான EPF ஓய்வூதியம் இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது:
மாதாந்திர ஓய்வூதியம் = (ஓய்வூதிய சம்பளம் × ஓய்வூதிய சேவை) / 70.
அதிகபட்ச ஓய்வூதிய சம்பளம் மாதத்திற்கு ரூ.15,000 என்றும், சேவை காலம் 15 ஆண்டுகள் என்றும் வைத்துக் கொண்டால், கணக்கீடு பின்வருமாறு இருக்கும்.
ஓய்வூதிய சம்பளம் = ரூ.15,000
ஓய்வூதிய சேவை ஆண்டுகள் = 15 ஆண்டுகள்
மாதாந்திர ஓய்வூதியம் = (ரூ.15,000 × 15) / 70
மாதாந்திர ஓய்வூதியம் = ரூ.225,000 / 70 = மாதத்திற்கு ₹3,214
ஒரு ஊழியரின் சேவை காலம் அதிகமாக இருந்தால், அவரது ஓய்வுதியமும் அதிகமாக இருக்கும். ஊழியர்கள் தங்கள் சேவை காலம் மற்றும் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் இதை கணக்கிடலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ