)
EPS Pension Calculation: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்கள் இபிஎஃப் கணக்கு தொடர்பான சில பயனுள்ள விஷயங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பணி ஓய்வுக்கு பின் ஓய்வூதிய நன்மைகள்
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பணி ஓய்வின் போது மொத்த தொகையாக இபிஎஃப் தொகை கிடைப்பது போல, இபிஎஸ் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகை ஓய்வூதிய நன்மையை அளிக்கின்றது. ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படுகின்றது.
இபிஎஸ் திட்டத்தில் ஊழியர்கள் 58 வயதிற்குப் பிறகு அவர்களின் சேவை ஆண்டுகளின் அடிப்படையில் ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள். ஊழியர்களுக்கு 50 வயதில் முன்கூட்டியே ஓய்வூதியம் பெறும் வசதியும் உள்ளது. EPS ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான குறிப்பிடத்தக்க தேவை குறைந்தது 10 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்வதாகும்.
- இபிஎஃப் கணக்கில் ஊழியர், நிறுவனம் என இரு தரப்பின் பங்களிப்பும் இடம்பெறும். இரு தரப்பும் 12% பங்களிப்பை அளிக்கும்.
- இபிஎஃப் உறுப்பினர்களின் பங்களிப்பு முழுதும் இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது.
- நிறுவனத்தின் 12% -இல், 8.33 சதவீதம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) பங்களிக்கப்படுகிறது. 3.67 சதவீதம் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) பங்களிக்கப்படுகிறது.
- பணி ஓய்வுக்கு முன்னரே கிடைக்கும் எர்ளி பென்ஷனுக்கு 50 வயதை எட்டியவர்கள் தகுதிபெறுகிறார்கள்.
- வழக்கமான ஓய்வூதியத்தைப் பெற 58 வயதை எட்டியவர்கள் தகுதிபெறுகிறார்கள்.
- இபிஎஸ் ஓய்வூதியம் பெற EPFO உறுப்பினராக இருக்க வேண்டியது அவசியம்.
- நீங்கள் குறைந்தது 10 ஆண்டுகள் சேவையை முடித்திருக்க வேண்டும்.
பின்வரும் நபர்களில் யார் வேண்டுமானாலும் இபிஎஸ் ஓய்வூதியத்தை கோரலாம்
- இபிஎஃப் உறுப்பினர்
- இறந்த உறுப்பினரின் கணவன்
- இறந்த உறுப்பினரின் மனைவி
- குழந்தைகள்
- பாதுகாவலர்
- பரிந்துரைக்கப்பட்ட நாமினி அல்லது
- சார்ந்திருக்கும் பெற்றோர்.
- தற்போதுள்ள விதியின் படி, இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000
- அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.7,500.
EPS ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்:
(ஓய்வூதிய சம்பளம் x ஓய்வூதிய சேவை) / 70.
EPS Pension Calculation: இபிஎஸ் ஓய்வூதியக் கணக்கீடு
இபிஎஸ் கணக்கீட்டில் தற்போதைய ஊதிய உச்சவரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. அதாவது, ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ.60,000 ஆக இருந்தாலும், அவர்களின் EPS ஓய்வூதியம் ரூ.15,000 ஆகத்தான் கணக்கிடப்படும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் படி, அதிகபட்ச ஓய்வூதிய சம்பளம் மாதத்திற்கு பதினைந்தாயிரம் ரூபாயாக மட்டுமே இருக்கும். ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
ஒரு ஊழியரின் சேவை காலம் 11 ஆண்டுகள் என்றும் அவரது மாத சம்பளம் ரூ.60,000 என்றும் வைத்துக்கொள்வோம்.
மாத ஓய்வூதியம் = (ஓய்வூதிய சம்பளம் X ஓய்வூதிய சேவை)/70 = (15,000x11)/70 = ரூ. 2,357.
அந்த நபர் 11 வருட சேவை காலத்திற்கு மாத ஓய்வூதியமாக சுமார் ரூ. 3,642 பெறுவார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ