EPFO Pension Calculator: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (Employee Pension Scheme) இந்தியாவில் உள்ள ஒரு பிரபலமான ஓய்வூதியத் திட்டம். இது ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் பங்களிப்புகள் மற்றும் சேவை ஆண்டுகளின் அடிப்படையில் ஓய்வூதியத்தை வழங்குகிறது. EPS திட்டம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஊழியர்கள் மற்றும் முதலாளி / நிறுவனம் என இரு தரப்பும் பங்களிக்கின்றனர். ஊழியர்களின் பங்களிப்பு முழுதும் இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. ஆனால், நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33 சதவீதம் EPS கணக்கிற்கும் 3.67 சதவீதம் EPF கணக்கிற்கும் செல்கிறது.
EPS Pension: இபிஎஸ் ஓய்வூதியம் பெற யாருக்கெல்லாம் தகுதி உண்டு?
ஓய்வூதியம் பெற,
- ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 50 வயது (முன்கூட்டிய ஓய்வூதியத்திற்கு) அல்லது 58 வயது (வழக்கமான ஓய்வூதியத்திற்கு) இருக்க வேண்டும்.
- EPFO உறுப்பினராக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஊழியர் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?
EPS ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான வருமானத்தை வழங்குகிறது. வழக்கமான பணி ஓய்வுக்கு, 58 வயது முதலும், முன்கூட்டியே பணி ஓய்வு பெறுபவர்களுக்கு 50 வயது முதலும் ஓய்வூதியம் கிடைக்கிறது. 58 வயதில் உங்கள் முழு ஓய்வூதியத் தொகையையும் திரும்பப் பெறலாம். அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறி இருந்தாலும் இந்த வசதி கிடைக்கும். பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.1,000 மற்றும் அதிகபட்ச ஓய்வூதியத் தொகையாக ரூ. 7,500 கிடைக்கின்றன.
EPS nomination: இபிஎஸ் நாமினேஷன் செய்வது எப்படி?
இபிஎஸ் கணக்கு வைத்திருப்பவர் EPS இலிருந்து ஓய்வூதிய சலுகைகளைப் பெற ஒரு நபரையோ அல்லது நபர்களையோ தேர்வு செய்து பரிந்துரைப்பது EPS நாமினேஷன் எனப்படும். இபிஎஃஸ் உறுப்பினர்கள் தனது நாமினியாக, கணவன் / மனைவி, குழந்தைகள் அல்லது சார்ந்திருக்கும் பெற்றோர் போன்ற குடும்ப உறுப்பினர்கள் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். உறுப்பினருக்கு குடும்பம் இல்லையென்றால், அவர்கள் வேறு யாரை வேண்டுமானாலும் நாமினியாக பரிந்துரைக்கலாம்.
EPS Calculation: இபிஎஸ் கணக்கீடு
ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ.35,000 ஆக இருந்து அவர் 30 ஆண்டு சேவையை முடித்திருந்தால், அவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
EPS Pension Calculation Formula: இபிஎஸ் ஓய்வூதிய கணக்கீட்டு சூத்திரம்
மாதாந்திர ஓய்வூதியத் தொகை = (ஓய்வூதிய சம்பளம் x ஓய்வூதிய சேவை) / 70.
ஒரு ஊழியர் பெறும் மாதாந்திர ஓய்வூதியத் தொகை அவரது ஓய்வூதிய சம்பளம் மற்றும் சேவை காலத்தைப் பொறுத்தது.இந்த சூத்திரத்தில் பயன்படுத்தப்படும் சராசரி சம்பளம், கடந்த 12 மாதங்களுக்கான உங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் (DA) சராசரியாகும்.
EPS Pension: மாதாந்திர ஓய்வூதியம் என்னவாக இருக்கும்?
தற்போது, ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ.35,000 ஆக இருந்தாலும், அவர்களது இபிஎஸ் ஓய்வூதியம் ரூ.15,000 சம்பளத்தில்தான் கணக்கிடப்படும்.
அடிப்படை சம்பளம் - ரூ.35,000
சேவை ஆண்டுகள் - 30
மாத ஓய்வூதியம் = (ஓய்வூதிய சம்பளம் X ஓய்வூதிய சேவை காலம்)/70
மாத ஓய்வூதியம் = (15,000x30)/70 = ரூ.6,429.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









