EPS Pension: ரூ.35,000 அடிப்படை ஊதியம், 30 ஆண்டு சர்வீஸ்... கார்ப்பஸ், மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

EPS Pension Calculator: ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ.35,000 ஆக இருந்து அவருக்கு வயது 25 ஆக இருந்தால், அவர் பணி ஓய்வு பெற்றவுடன் எவ்வளவு கார்ப்பஸ் உருவாகி இருக்கும்? இதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 5, 2025, 02:26 PM IST
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஊழியர் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?
  • இபிஎஸ் ஓய்வூதிய கணக்கீட்டு சூத்திரம் என்ன?
  • இபிஎஃப் உறுப்பினர்கள் கணக்கில் உள்ள தொகையை எப்போது எடுக்கலாம்?
EPS Pension: ரூ.35,000 அடிப்படை ஊதியம், 30 ஆண்டு சர்வீஸ்... கார்ப்பஸ், மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

EPFO Pension Calculator: பணி ஓய்வுக்குப் பிறகு அமைதியான வாழ்க்கைக்கு ஓய்வூதியம் அல்லது மாத வருமானம் மட்டும் போதாது. ஓய்வூதியதாரர்களுக்கு அந்த காலத்தில் வலுவான ஓய்வூதிய நிதியும் தேவைப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில், நிதி சிக்கல்கள் இல்லாமல் ஓய்வு காலத்தைக் கழிக்க குறைந்தபட்சம் ரூ.2 முதல் 2.5 கோடி வரை நிதி தேவை என்று நிபுணர்கள் நம்புகின்றனர். 

Add Zee News as a Preferred Source

Retirement Corpus

இவ்வளவு பெரிய பணி ஓய்வு நிதியை எப்படி சேர்ப்பது? ஓய்வூதிய நிதி மற்றும் மாத ஓய்வூதியம் இரண்டையும் அளிக்கும் திட்டம் உள்ளதா? இந்த கேள்விகளுக்கு இபிஎஃப் மற்றும் இபிஎஸ் கணக்குகள் விடையாக அமைகின்றன.  உங்கள் பணிக்காலத்தில் தவறாமல் மற்றும் ஒழுக்கமான முறையில் இதில் பங்களிப்பு செய்தால், ஓய்வு பெறும் நேரத்தில் இந்தக் கணக்கு ஒரு சிறந்த ஆதரவாக மாறும்.

EPF Account: இபிஎஃப் கணக்கு என்றால் என்ன?

EPF என்பது ஒரு ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். இது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) ​​நடத்தப்படுகிறது. இதில், ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 12% -ஐ ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்கிறார்கள். நிறுவனமும் அதே அளவு தொகையை டெபாசிட் செய்கிறது. இபிஎஃப் உறுப்பினர்கள் டெபாசிட் செய்யும் தொகை முழுவதும் இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. நிறுவனம் டெபாசிட் செய்யும் தொகையில் 8.33 சதவீதம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS) மீதமுள்ள 3.67 சதவீதம் EPF திட்டத்திற்கும் செல்கின்றன. இதில் தற்போது 8.25% வருடாந்திர வட்டி கிடைக்கிறது. இபிஎஃப் கணக்கு நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய ஓய்வூதிய கார்பஸ் நிதியை திரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்கள் கணக்கில் உள்ள தொகையை எப்போது எடுக்கலாம்?

பொதுவாக பணி ஓய்வுக்கு பின்னரே இபிஎஃப் கணக்கில் உள்ள தொகை எடுக்கப்படுகிறது. எனினும், சில சந்தர்பங்களில் பகுதியளவு தொகையை எடுக்க அனுமதி அளிக்கப்படுகின்றது. நோய் சிகிச்சை, திருமணம், கல்விச்செலவு, வீடு வாங்குவது ஆகியவை இதில் அடங்கும்.

EPS Calculation: இபிஎஸ் கணக்கீடு

ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ.25,000 ஆக இருந்து அவருக்கு வயது 25 ஆக இருந்தால், அவர் பணி ஓய்வு பெற்றவுடன் எவ்வளவு கார்ப்பஸ் உருவாகி இருக்கும்? இதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.

EPF Calculator: இபிஎஃப் கணக்கீடு

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒருவரது வயது 25 என்றும், அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ ரூ. 25,000 என்றும் வைத்துக்கொள்வோம்.

ஓய்வு பெறும் வயது: 58 ஆண்டுகள்

அடிப்படை சம்பளம் + டிஏ: ரூ. 25,000

பணியாளரின் பங்களிப்பு: 12%

நிறுவனத்தின் பங்களிப்பு: 3.67%

வருடாந்திர அதிகரிப்பு - 10%

PF மீதான வட்டி: ஆண்டுக்கு 8.25%.

மொத்த பங்களிப்பு: ரூ.1,15,39,861 அதாவது சுமார் ரூ.1.15 கோடி (பணியாளர் பங்களிப்பு- 88.37 லட்சம் மற்றும் நிறுவன பங்களிப்பு 27.02 லட்சம்)

ஓய்வூதிய நிதி: சுமார் ரூ.3.12 கோடி நிதி

(மொத்த பங்களிப்பு: ரூ.1.15 கோடி, ஆனால் வட்டியைச் சேர்த்த பிறகு ஓய்வூதிய நிதி ரூ.3.12 கோடியாக மாறும்)

25 வயதில் அடிப்படை ஊதியம் மற்றும் டிஏ ரூ.35,000 ஆக இருந்தால்

ஓய்வு பெறும் வயது: 58 ஆண்டுகள்

அடிப்படை சம்பளம் + டிஏ: ரூ.35,000

பணியாளரின் பங்களிப்பு: 12%

நிறுவனத்தின் பங்களிப்பு: 3.67%

வருடாந்திர அதிகரிப்பு - 10%

PF மீதான வட்டி: ஆண்டுக்கு 8.25%.

மொத்த பங்களிப்பு: ரூ.1,61,55,808 அதாவது சுமார் ரூ.1.61 கோடி.

ஓய்வூதிய நிதி: ரூ.4,37,14,662 (சுமார் ரூ.4.37 கோடி)

நீங்கள் தற்போது 25 வயதுடையவராக இருந்து, EPF-இல் தொடர்ந்து முதலீடு செய்தால், எந்த கூடுதல் முயற்சியோ அல்லது ஆபத்தோ இல்லாமல், ஓய்வு பெறும் போது கோடிகளில் கார்ப்பஸை பெறலாம். ஆகையால், அடுத்த முறை உங்கள் சம்பள சீட்டில் PF கழிப்பைப் பார்க்கும்போது, ​​கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து பிஎஃப் -க்கான தொகை பிடித்தம் செய்யப்படுவது உங்கள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான தொடக்கமாகும். இது வயதான காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும்.

EPS Pension Calculation: இபிஎஸ் ஓய்வூதிய கணக்கீடு

ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ.35,000 ஆக இருந்து அவருக்கு 30 ஆண்டு சேவை இருந்தால், அவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இதற்கான கணக்கீட்டை இங்கே பார்க்கலாம்.

மாதாந்திர ஓய்வூதியத் தொகை = (ஓய்வூதிய சம்பளம் x ஓய்வூதிய சேவை) / 70

மாத ஓய்வூதியம் = (15,000x30)/70 = ரூ.6,429.

மேலும் படிக்க | வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு தங்கத்தை வரி இல்லாமல் கொண்டு வர முடியும்?

மேலும் படிக்க | இனி இவர்களுக்கும் UPS, 50% ஓய்வூதியம்: நிதிச் சேவைகள் செயலாளர் மாஸ் அப்டேட், யாருக்கெல்லாம் கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News