EPFO Pension Calculator: பொதுத்துறையாக இருந்தாலும் சரி, தனியார் துறையாக இருந்தாலும் சரி, மாத சம்பளம் வாங்கும் அனைவருக்கும் ஊதியம் ஒரு முக்கிய அம்சம் என்றால், பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்கக்கூடிய ஓய்வூதியமும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. ஓய்வு பெற்ற பிறகு மாதா மாதம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இது வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருக்குமா? இப்படி பல கேள்விகள் பெரும்பாலும் அனைவருக்கும் இருப்பதுண்டு.
இந்த பதிவில் ஒரு உதாரணத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் பற்றி புரிந்துகொள்ளலாம். ஒருவரது அடிப்படை சம்பளம் மாதம் ரூ.50,000 என்று வைத்துக்கொள்வோம். EPS-ன் கீழ் 20, 25 மற்றும் 30 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு அவர் எவ்வளவு ஓய்வூதியம் பெற முடியும் என்பதை இங்கே காணலாம். முதலில் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
Employee Pension Scheme: EPS என்றால் என்ன?
EPS அதாவது ஊழியர் ஓய்வூதியத் திட்டம் என்பது ஒரு அரசாங்கத் திட்டமாகும். இது ஓய்வுக்குப் பிறகு ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு வழக்கமான வருமானத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. இதற்கு, EPFO கணக்கு இருப்பது அவசியம். இபிஎஃப் கணக்கில் ஊழியர்கள் மாதா மாதம் தங்கள் ஊதுயத்தில் 12% தொகையை டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. ஊழியர் டெபாசிட் செய்யும் தொகையில் ஒரு பகுதி இபிஎஃப் கணக்கிற்கும் ஒரு பகுதி இபிஎஸ் கணக்கிற்கும் செல்கிறது. இந்த நிதியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
EPF Members: இபிஎஃப் உறூப்பினர்களுக்கு எப்போது ஓய்வூதியம் கிடைக்கும்?
அனைத்து ஊழியர்களும் 10 வருட சேவையை முடித்த பிறகு, EPS இன் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி பெறுகிறார்கள். இது தவிர, 50 வயதில் முன்கூட்டியே ஓய்வு பெற்றாலும், அப்போதும் ஓய்வூதியம் பெறலாம். ஆனால் இதில் ஓய்வூதியத் தொகை குறையும். வழக்கமான ஓய்வூதியத்திற்கு 58 வயது தேவை.
EPS எப்படி வேலை செய்கிறது?
ஊழியர்களும் நிறுவனமும் தலா 12 சதவீதத்தை EPFO நிதிக்கு பங்களிக்கிறார்கள். முதலாளி / நிறுவனத்தால் வழங்கப்படும் 12 சதவீதம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும். 8.33 சதவீதம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS) 3.67 சதவீதம் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கும் (EPF) செல்கிறது. இந்த EPS நிதியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
EPS Calculation: இபிஎஸ் கணக்கீடு
EPS-ல், ஓய்வூதியம் ஒரு குறிப்பிட்ட சூத்திரத்தின்படி கணக்கிடப்படுகிறது. அதற்கு ஒரு வரம்பு உள்ளது. இதன் கீழ், உங்கள் அடிப்படை சம்பளம் ரூ.50,000 ஆக இருந்தாலும், EPS இல் கணக்கீடு அதிகபட்ச சம்பளம் ரூ.15,000 இல் மட்டுமே செய்யப்படுகிறது. அதாவது உங்கள் அடிப்படை சம்பளம் ரூ.60,000 ஆக இருந்தாலும், ஓய்வூதிய கணக்கீடு ரூ.15,000 இல்தான் செய்யப்படும். இந்த ஊதிய உச்சவரம்பை ரூ.21,000 ஆக உயர்த்த கோரிக்கை உள்ளது.
EPS Pension: இபிஸ் ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
- EPS ஓய்வூதியம் (ஓய்வூதிய சம்பளம் × சேவை காலம்) ÷ 70 என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.
- இங்கு ஓய்வூதிய சம்பளம் என்பது கடந்த 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி (அதிகபட்சம் ரூ.15,000 கருதப்படுகிறது)
- சேவை காலம் என்பது நீங்கள் பணிபுரிந்த ஆண்டுகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
EPS Pension Calculation: இபிஎஸ் ஓய்வூதிய கணக்கீடு
50,000 அடிப்படை சம்பளத்தில் 20, 25 மற்றும் 30 ஆண்டுகள் பணிபுரிந்த ஒரு ஊழியருக்கு எவ்வளவு EPS ஓய்வூதியம் கிடைக்கும்?
உங்கள் அடிப்படை சம்பளம் ரூ.50,000 என்றாலும், வரம்பு காரணமாக, உங்கள் ஓய்வூதிய கணக்கீடு ரூ.15,000 ஆக இருக்கும். அதனால்
20 வருட சேவைக்கான ஓய்வூதியம்: (15,000 x 20)/70 = மாதத்திற்கு ரூ. 4,285
25 வருட சேவைக்கான ஓய்வூதியம்: (15,000 x 25)/70 = மாதத்திற்கு ரூ. 5,357
30 வருட சேவைக்கான ஓய்வூதியம்: (15,000 x 30)/70 = மாதத்திற்கு ரூ. 6,428
Minimum Monthly Pension / Maximum Monthly Pension: குறைந்தபட்ச / அதிகபட்ச மாத ஓய்வூதியம்
இது தவிர, EPS இன் கீழ் அதிகபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7,500 ஆகவும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000 ஆகவும் உள்ளது.
EPS Pensioners: இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள்
துரதிஷ்டவசமாக ஒரு ஊழியர் இறந்தால், EPS நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்கும். ஊழியர்கள் தங்கள் மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோரை நாமினிகளாக நியமிக்கலாம். குடும்பம் இல்லையென்றால், எந்தவொரு நம்பகமான நபரையும் நாமினியாக நியமிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









