EPFO Pension Calculator: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஊழியர்களின் மேம்பாட்டிற்காக, இந்தியாவின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றான ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தையும் நடத்துகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் சேவைக் காலம் மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள்.
Employees Pension Scheme: ஊழியர் ஓய்வூதியத் திட்டம்
EPS நவம்பர் 16, 1995 அன்று தொடங்கப்பட்டது. ஓய்வுக்குப் பிறகு ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு வழக்கமான வருமானத்தை வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இது பணி ஓய்வுக்கு பிறகு ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பை அளிக்கின்றது.
EPS இன் முக்கிய அம்சங்கள்
இபிஎஸ் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச சேவை காலம் 10 ஆண்டுகள் ஆகும். அதாவது, ஊழியர்கள் ஒரு இபிஎஃப் உறுப்பினராக (EPF Member) இருந்து 10 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி பெறுகிறார்கள். இதில் கிடைக்கக்கூடிய அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் இதோ:
- Minimum monthly pension: குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் - ரூ. 1,000
- Maximum monthly pension: அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியம் - ரூ. 7,500
2014 ஆம் ஆண்டு முதல், மத்திய அரசு EPS-1995 இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1000 ஆக நிர்ணயித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இது தொடரும் நிலையில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.7500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
EPS Pension: இபிஎஸ் ஓய்வூதியத்திற்கான தகுதி வரம்புகள் என்ன?
இபிஎஸ் ஓய்வூதியத்தைப் பெற, சில தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்வது அவசியமாகும். உதாரணமாக, EPS ஓய்வூதியத்தைப் பெற, ஊழியர் குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். இது தவிர, ஊழியர் 58 வயதுக்குப் பிறகுதான் இந்தத் திட்டத்தின் பலனைப் பெற முடியும். மேலும், இபிஎஸ் ஓய்வூதியத்தை பெற, பணியாளர் EPFO-வில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினராக இருக்க வேண்டும். இது மட்டுமின்றி, அவர் தனது பணியின் போது EPS திட்டத்திற்கு தொடர்ந்து பங்களித்திருக்க வேண்டும் என்பதும் அவசியம்.
EPF Contribution: இபிஎஃப் பங்களிப்புகள்
இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) ஒவ்வொரு மாதமும் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 12% ஐ வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிக்கின்றனர். நிறுவனமும் அதே அளவு தொகையை ஊழியர்களின் PF கணக்கிற்கு பங்களிக்கிறது. ஊழியர்களின் பங்களிப்பு முழுவதும் இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% ஊழியரின் ஓய்வூதியத் திட்டத்திற்கும், 3.67% ஊழியரின் வருங்கால வைப்பு நிதிக்கும் செல்கிறது.
ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் பணிபுரிந்தால், அவருக்கு இபிஎஸ் ஓய்வூதியமாக எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
EPS Pension Calculation Formula: இபிஎஸ் ஓய்வூதிய கணக்கீட்டு சூத்திரம்
மாதாந்திர ஓய்வூதியத்தைக் கணக்கிட பின்வரும் சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது:
மாதாந்திர இபிஎஸ் ஓய்வூதியம் = (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் × ஓய்வூதிய பெறக்கூடிய சேவைக்காலம்) / 70
ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் = உங்கள் கடந்த 60 மாத சம்பளத்தின் சராசரி
ஓய்வூதியம் பெறக்கூடிய சேவைக்காலம்: சேவையின் போது EPS-க்கு பங்களித்த ஆண்டுகளின் எண்ணிக்கை.
ஒரு உதாரணத்தின் மூலம் இதை தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக, ஒரு ஊழியரின் ஓய்வூதிய சம்பளம் ரூ.15,000 என்றும், ஓய்வூதிய சேவை காலம் 10 ஆண்டுகள் என்றும் வைத்துக்கொள்வோம், அவரது மாதாந்திர ஓய்வூதியம்:
மாதாந்திர ஓய்வூதியம் = (ரூ. 15,000 × 10) / 70 = ரூ. 2,143
அதாவது ஒருவர் 10 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றி இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் வருங்கால வைப்பு நிதியில் அவர் பங்களித்திருந்தால், அவர் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெற அவருக்கு உரிமை உண்டு. எனினும், அதிக ஆண்டுகள் வேலை செய்வதன் மூலம் ஓய்வூதியத் தொகையை கணிசமாக அதிகரிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: இரட்டிப்பாகும் ஊதியம், ஓய்வூதியம்... அலவன்சுகளிலும் அதிரடி ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









