)
EPFO Pension Rules: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். பொதுவாக இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இதன் செயல்முறைகள் குறித்து பல கேள்விகள் இருக்கும். குறிப்பாக இபிஎஃப் மூலம் கிடைக்கும் ஓய்வூதியம் குறித்து அதிக கேள்விகள் எழுகின்றன.
Employee Pension Scheme: ஊழியர் ஓய்வூதியத் திட்டம்
ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? ஓய்வூதியத்திற்கு எத்தனை ஆண்டுகள் சேவை அவசியம்? ஓய்வூதியத் தொகையை எப்போது பெறலாம்? ஓய்வு பெறுவதற்கு முன்பு ஓய்வூதியம் பெற என்ன செய்ய வேண்டும்? இவற்றை பற்றி இங்கே காணலாம்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வூதியம் கிடைக்கும்
ஒரு பணியாளர் 10 ஆண்டுகள் பணியாற்றினால், அவர் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவராகிறார். EPFO விதிகளின்படி, EPF-க்கு பங்களிக்கும் பணியாளர் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அவர் ஓய்வூதியம் பெற உரிமை பெறுகிறார். இருப்பினும், 58 வயதை நிறைவு செய்த பிறகு அவருக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
10 வருட சேவையை முடிக்காவிட்டால் என்ன நடக்கும்?
10 வருட சேவையை முடிக்காவிட்டாலும் ஓய்வூதிய நிதியை எடுக்கலாம். இது தொடர்பாக EPFO க்கு அதன் சொந்த விதிகள் உள்ளன. அதாவது, உங்கள் சேவை 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டதாக மாறியவுடன், EPS இன் முழுத் தொகையையும் திரும்பப் பெற முடியாது. இப்போது நீங்கள் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு உரிமையுடையவராகிவிடுவீர்கள். இது 58 வயது முடிந்ததும் கிடைக்கத் தொடங்குகிறது.
58 வயதுக்கு முன் ஓய்வூதியம் எவ்வாறு கிடைக்கும்?
EPFO உறுப்பினர்கள் 50 வயதை அடையும் போது ஓய்வூதியம் பெறலாம். ஆனால் வயது 58 வயதுக்கு ஒரு வருடம் குறைவாக இருந்தால், ஓய்வூதியத்தில் 4 சதவீதம் குறைக்கப்படும். குறையும் ஒவ்வொரு வருடத்திற்கும் 4 சதவீதம் குறைந்துகொண்டே இருக்கும். ஒரு ஊழியர் 55 வயதில் ஓய்வூதியம் பெற விரும்பினால், இந்த விலக்கு 12 சதவீதமாகவும், 52 வயதில் அதைப் பெற விரும்பினால், 24 சதவீதமாகவும் இருக்கும். நீங்கள் 50 வயதுக்குக் கீழே இருந்தால், உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது.
50 வயதுக்கு முன் ஒருவர் தன் வேலையை விட்டுவிட்டால் என்ன செய்வது?
50 வயதுக்கு முன் ஒருவர் தனது வேலையை விட்டுவிட்டால், அவருக்கு உடனடியாக ஓய்வூதியம் கிடைக்காது. அவர் 58 வயது ஆன பிறகுதான் ஓய்வூதியம் பெறத் தொடங்குவார். அதாவது, அவரது ஓய்வூதிய நிதியில் உள்ள பணம் வீணாகாது.
EPS Pension: இபிஎஸ் ஓய்வூதியம் தானாகவே தொடங்காது, இதைச் செய்வது அவசியம்
இபிஎஃப் உறுப்பினர்கள் படிவம் 10C மற்றும் கூட்டு உரிமைகோரல் படிவத்தை (ஆதார் அல்லது ஆதார் அல்லாத) நிரப்ப வேண்டும். மேலும், ஓய்வூதியத் திட்டச் சான்றிதழைப் பெற வேண்டும். எதிர்காலத்தில் வேலை மாறும்போது ஓய்வூதியத்தை மாற்ற இந்தச் சான்றிதழ் உதவுகிறது.
ஓய்வு பெற்ற உடனேயே ஓய்வூதியம் வேண்டுமா? படிவம் 10D அவசியம்
ஓய்வு பெற்ற உடனேயே ஓய்வூதியத்தைத் தொடங்க விரும்பினால், படிவம் 10D ஐ நிரப்ப வேண்டும். இந்தப் படிவத்தை ஆன்லைனில் நிரப்ப முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் அருகிலுள்ள EPFO அலுவலகத்திற்குச் சென்று அதை நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும். செயல்பாட்டில் எந்த தாமதமும் ஏற்படாமல் இருக்க அனைத்து ஆவணங்களையும் முன்கூட்டியே தயாராக வைத்திருங்கள்.
Pension Certificate: ஓய்வூதியச் சான்றிதழைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
ஒரு ஊழியர் 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டு வெளியேறினால் மற்றொரு வழியும் உள்ளது. எதிர்காலத்தில் மீண்டும் வேலை செய்ய விரும்பினால், ஓய்வூதியத் திட்டச் சான்றிதழை மறக்காமல் பெறுவது அவசியம். ஊழியர் ஒரு புதிய வேலையில் சேரும் போது, இந்தச் சான்றிதழ் மூலம் முந்தைய ஓய்வூதியக் கணக்கை புதிய வேலையுடன் இணைக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ