EPS Pension Latest News: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணம் வழங்க தயாராகி வருகிறது. EPS -இன் (ஊழியர் ஓய்வூதியத் திட்டம்) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை மத்திய அரசு ரூ.1,000 -இலிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவை அடுத்த சில மாதங்களில் அரசு செயல்படுத்தலாம் என கூறப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Employee Pension Scheme: EPS என்றால் என்ன?
ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) என்பது EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) இன் கீழ் இயக்கப்படும் ஒரு அரசுத் திட்டமாகும். இதன் மூலம், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஊழியர்கள் வயதான காலத்தில் வழக்கமான வருமானத்தைப் பெறுகிறார்கள்.
EPF Contribution: இபிஃப் பங்களிப்பு எவ்வளவு?
ஊழியர்கள் மாதா மாதம் இபிஎஃப் கணக்கில், ஊதியத்தில் 12% தொகையை டெபாசிட் செய்கிறார்கள். இதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. ஊழியர்கள் அளிக்கும் தொகை முழுதாக இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% EPS-க்கும் 3.67% EPF-க்கும் செல்கிறது.
Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்
ஓய்வூதியத்தை அதிகரிப்பது ஏன் அவசியம்? இன்றைய காலகட்டத்தில் ரூ.1,000 மாத ஓய்வூதியத்தில் வாழ்வது கடினம். பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது - கடந்த 11 ஆண்டுகளில், பணவீக்க விகிதம் (CPI) 72% அதிகரித்துள்ளது. பல ஓய்வுபெற்ற ஊழியர்களும் அமைப்புகளும் நீண்ட காலமாக அரசாங்கத்திடம் ஓய்வூதியத்தை அதிகரிக்கக் கோரி வருகின்றன.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்குமா?
எத்தனை பேருக்கு இந்தப் பலன் கிடைக்கும்? தற்போது EPS இன் கீழ் 78.5 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களில், 36.6 லட்சம் பேர் குறைந்தபட்ச ஓய்வூதியமான வெறும் ரூ.1,000-ஐ சார்ந்துள்ளனர். இந்த ஓய்வூதிய தொகை அதிகரிக்கப்பட்டால், கோடிக்கணக்கான முதியவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
EPS Pensioners: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகள்
2020 ஆம் ஆண்டில், தொழிலாளர் அமைச்சகம் ரூ.2,000 ஓய்வூதியத்திற்கான பரிந்துரையை அனுப்பியிருந்தது. இது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. 2025 பட்ஜெட்டுக்கு முன்பு, EPS ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.7,500 கோரியிருந்தனர். ஆனால் அதற்கும் எந்த உறுதியான உத்தரவாதமும் பெறப்படவில்லை. ஓய்வூதிய சங்கங்கள் குறைந்தபட்சம் மாத ஓய்வூதியத்தை ரூ.5,000 ஆக உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், பெரும்பாலானவர்களின் கோரிக்கை ரூ.7,500 மாத ஓய்வூதியத்திற்காகவே உள்ளது.
Labour Ministry: தொழிலாளர் அமைச்சகம்
தொழிலாளர் அமைச்சகம் தற்போது இந்த திட்டத்தின் கூடுதல் செலவினங்களை பகுப்பாய்வு செய்து வருகிறது. FY24 இல், EPS குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்காக ரூ.1,223 கோடி செலவிடப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 26% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா?
ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறைந்த வருமானம் கொண்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும். பாஜக பொருளாதார நிபுணர் சந்தீப் வேம்படி கூறுகையில், “ILO (சர்வதேச தொழிலாளர் அமைப்பு) ஓய்வூதியத்தை பணவீக்கத்துடன் இணைக்க அறிவுறுத்துகிறது. அரசாங்கம் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை EPS ரூ. 3,000 ஆக மாற்றினால், அது லட்சக்கணக்கான வயதான ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். பணவீக்கம் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், இந்த முடிவு அவர்களுக்கு மரியாதைக்குரிய வாழ்க்கையை நடத்த உதவியாக இருக்கும்." என்றார். கூடிய வரையில் தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1,000 ஆக இருக்கும் மாத ஓய்வூதியம் ரூ.3,000-ரூ.7,5000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









