)
EPS Pension Latest News: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் செயல்படும் EPS-95 ஓய்வூதியத் திட்டம் குறித்து ஒரு பெரிய செய்தி வெளிவந்துள்ளது. இது பல வாதங்கலை தொடக்கியுள்ளது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
- உழியர்களின் மாத ஓய்வுதியம் குறித்த ஒரு தரவு வெளியிடப்படுள்ளது.
- மார்ச் 31, 2025 வரையிலான தரவுகளின்படி, இரண்டு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு ஓய்வூதியதாரர் மாதத்திற்கு ரூ.1500க்கும் குறைவான ஓய்வூதியத்தைப் பெறுகிறார்.
- இந்த விவரத்தை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் அளித்தது.
- இதன் மூலம் ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகள் இன்னும் தெளிவாகிவிட்டன.
- பணவீக்கம் மிகவும் அதிகமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், இவ்வளவு குறைந்த ஓய்வூதியத்துடன் வாழ்வது மிகவும் கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தரவு வெளிவந்ததைத் தொடர்ந்து, இப்போதாவது அரசு மாத ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறித்து சிந்திக்குமா என மக்கள் கெள்வி எழுப்பி வருகிறார்கள்.
தனியார் துறை ஊழியர்களின் நிலை: மாநிலங்களவையில் கிடைத்த தகவல்
- ரூ.1500க்கும் குறைவான ஓய்வூதியத்தைப் பெறும் தனியார் துறை ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருக்க, மறுபுறம், 0.65% ஓய்வூதியதாரர்கள் மட்டுமே ரூ.6000க்கு மேல் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இது மிகவும் குறைவு.
- தொழிலாளர் துறை இணையமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே இந்த தகவல்களை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதில் மூலம் தெரிவித்தார்.
இபிஎஸ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா?
- தற்போது இபிஎஸ் மூலம் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.1000 அளிக்கப்படுகின்றது.
- இது திருத்தப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.
- அதன் பிறகு விலைவாசி, பணவீக்கம் என அனைத்திலும் மாற்றங்கள் வந்தாலும், இபிஎஸ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் மட்டும் மாற்றப்படாமல் அப்படியே உள்ளது.
- குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தொழிற்சங்கங்களும் முன்வைத்துள்ளன.
- ரூ.3,000, ரூ.7,500 மற்றும் ரூ.9,000 என குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்திற்கான பல கோரிக்கைகள் உள்ளன.
இபிஎஸ் ஓய்வூதியதாரர்களும் அவர்கள் பெறும் ஓய்வூதியமும்
- மொத்தம் 81,48,490 ஓய்வூதியதாரர்கள் இபிஎஸ் -இல் இணைந்துள்ளனர்.
- 49,15,416 பேர், அதாவது பாதிக்கும் மேற்பட்டவர்கள் ரூ.1500 -க்கும் குறைவான ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள்.
- 53,541 பேர் மட்டுமே (0.65%) ரூ.6,000 -க்கும் அதிகமான ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள்.
- 78,69,560 ஓய்வூதியதாரர்கள் ரூ.4,000 -க்கும் குறைவாகப் பெறுகிறார்கள்.
தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் என்ன?
- தொழிற்சங்கங்கள் மாதத்திற்கு ரூ.9,000 குறைந்தபட்ச ஓய்வூதியத்தைக் கோரியுள்ளன.
- இந்தக் கோரிக்கை தொழிலாளர் அமைச்சகத்திடம் 17 அம்சப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.
- 2023-24 ஆம் ஆண்டில், ரூ.23,027.93 கோடி ஓய்வூதியத்திற்காக வழங்கப்பட்டது.
- ரூ.10,898.07 கோடி செயலற்ற கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
பணவீக்கம் காரணமாக, ரூ.9,000 கோரிக்கை நியாயமானதாகத் தெரிகிறது. ஆனால், தற்போது இபிஎஸ் -இல் உள்ள அதிகபட்ச ஓய்வுதியமே ரூ.7,500 ஆக உள்ளது. அந்த நிலையில், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆகவோ அல்லது ரூ.9,000 ஆகவோ அதிகரிக்கப்பட வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருதுகிறார்கள். எனினும், அரசாங்கம் நினைத்தால், அதிகபட்ச ஓய்வூதியத்தையும் அதிகரித்து பின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்கலாம். ஆனால், தற்போது ரூ.1,000 ஆக உள்ள குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,000 ஆக அதிகரிக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரசாங்கம் இது குறித்து ஆலோசித்து வருகிறது. கூடிய விரைவில் இதில் நல்ல முடிவு எதிபார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ