தனியார் துறை ஊழியர்களுக்கு விரைவில் ஓய்வூதிய உயர்வு: தீவிரம் காட்டும் அரசு

EPFO Update: EPFO ​​ஊழியர்கள், 2014 முதல் மாதத்திற்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.1,000 -ஐ பெற்று வருகிறார்கள். இதை உயர்த்த வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை உள்ளது. இது குறித்து ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 7, 2025, 11:02 AM IST
  • இபிஎஸ் சந்தாதாரர்களுக்கான முக்கிய முடிவு.
  • இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு.
  • தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதியம் இதற்கு முன் எப்போது அதிகரிக்கப்பட்டது?
தனியார் துறை ஊழியர்களுக்கு விரைவில் ஓய்வூதிய உயர்வு: தீவிரம் காட்டும் அரசு

EPS Pension Latest News: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இபிஎஃப் உறுப்பினர்கள் நீண்ட காலமாக இபிஎஸ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகிறார்கள். சமீபத்திய வாரங்களில் இதற்கான போராட்டங்களும் கோரிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன. 

Add Zee News as a Preferred Source

மகாராஷ்டிராவில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாசிக் மாவட்ட EPFO ​​ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவர் ராஜு தேசலே போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். மேலும், ஓய்வூதியத் தொகையை முந்தைய தொகையிலிருந்து ரூ.9,000 ஆக உயர்த்துவதற்கான தங்கள் கோரிக்கையை EPFO ​​ஓய்வூதியதாரர்கள் வலியுறுத்தினர்.

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

இபிஎஸ் ஓய்வூதியத் தொகையை ரூ.1,000 லிருந்து ரூ.9,000 ஆக உயர்த்தக் கோரி EPFO ​​ஓய்வூதியதாரர்கள் போராட்டம் நடத்தினர். அதிகரித்து வரும் பணவீக்கத்தை ஈடுகட்ட, ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க வேண்டியது மிக அவசியம் என்றும், ஓய்வூதியத்தை அதிகரிப்பதே பல ஆண்டுகளாக அவர்கள் அளித்த பங்களிப்புகளை சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்றும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். 

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் அளிக்கப்படுகின்றது? 

- EPFO ​​ஊழியர்கள், 2014 முதல் மாதத்திற்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.1,000 -ஐ பெற்று வருகிறார்கள்.
- இதை உயர்த்த வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை உள்ளது.
- ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.
- ஒரு சாரார், ரூ.7,500 என்ற தொகையும் போதுமானதாக இருக்காது என்றும், இந்த தொகையை ரூ.9,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
- இது தவிர, ஓய்வு பெற்றவர்களுக்கும் அவர்களது வாழ்க்கைத் துணைக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கோரி கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகின்றன. 

வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிக்கின்றனர். நிறுவனமும் இதே அளவு தொகையை அளிக்கின்றது. நிறுவனத்தின் பங்கிலிருந்து, 8.33 சதவீதம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) ஒதுக்கப்படுகிறது. 3.67 சதவீதம் EPF திட்டத்திற்கு செல்கிறது.

EPS Pensioners: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டால், அது இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இது தவிர, அன்றாடம் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை சமளிக்க, அகவிலைப்படி கொடுப்பனவு, இலவச அரசு மருத்துவ சேவைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் சேர்ப்பது உள்ளிட்ட அத்தியாவசிய ஆதரவையும் இபிஎஃப் உறுப்பினர்கள் கோரியுள்ளனர். 

Private Sector Employees: தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதியம் இதற்கு முன் எப்போது அதிகரிக்கப்பட்டது?

தனியார் துறை ஊழியர்களுக்கு, இபிஎஃப்ஓ -ன் கீழ் கிடைக்கும் இபிஎஸ் ஓய்வூதியம் இதற்கு முன் 2014 ஆம் ஆண்டில் ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு, வாழ்க்கைச் செலவுகள், பணவீக்கம் மற்றும் பல அம்சங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டாலும். இபிஎஸ் மாத ஓய்வூதியம் மட்டும் மாறாமல் அப்படியே உள்ளது.

EPF Subscribers: இபிஎஸ் சந்தாதாரர்களுக்கான முக்கிய முடிவு

கூடிய விரைவில், இபிஎஸ் சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசாங்கம் மும்முரமாக பரிசீலித்து வருவதாகவும், இன்னும் சில நாட்களில் இது குறித்து தொடர்புடைய தரப்புகளுக்கு இடையில் முழுமையான விவாதங்கள் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் பிறகு இபிஎஃப்ஓ, சிபிடி மற்றும் மத்திய அரசு இணைந்து இறுதி முடிவை எடுக்கும்.

மேலும் படிக்க | ஆயிரங்களை கோடிகளாக்குவது எளிது தான்... உங்களுக்கு கை கொடுக்கும் 7 ஃபார்முலாக்கள்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: சம்பள உயர்வுக்கு முக்கியமான ஃபிட்மெண்ட் ஃபாக்டர்.... கணக்கிடப்படுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News