EPFO Latest News: EPFO -வின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அரசு அதிகரிக்கும் என்று இபிஎஃப் உறுப்பினர்கள் ஆவலுடன் கத்திருக்கிறார்கள். இது குறித்து பல முறை பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட் உள்ளது. கூடிய விரைவில் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய செய்தி கிடைக்கவுள்ளது. சமீபத்தில் 2024-25 நிதியாண்டிற்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொடர ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 70 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள். இதைத் தொடர்ந்து மற்றொரு முக்கிய செய்தியை ஊழியர்கள் பெறக்கூடும்.
Minimun Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா?
EPFO -வின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அரசு அதிகரிக்கும் என்று இபிஎஃப் உறுப்பினர்கள் ஆவலுடன் கத்திருக்கிறார்கள். இது குறித்து பல முறை பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்குமா?
சில காலமாக, தனியார் துறையில் உள்ள ஊழியர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரி வருகின்றனர். செப்டம்பர் 2014 இல், அரசாங்கம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 ஆக நிர்ணயித்தது. ஓய்வூதியதாரர்கள் குழுக்கள் இப்போது இந்தத் தொகையை மாதத்திற்கு ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கைகள்
2014 முதல் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் மாற்றப்படாமல் ர்.1,000 -இலேயே உள்ளது. ஆனால் அதன் பின், பணவீக்கம், வாழ்க்கைச் செலவுகள் என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு அரசாங்கம் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை அதிகரிக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Pensioners: ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் கோரிக்கை நிதியமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
- குறிப்பிடத்தக்க வகையில், ஜனவரி 10 அன்று, EPS-95 ஓய்வூதியதாரர்களின் குழு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து, குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.7,500, அகவிலைப்படி அதிகரிப்பு (DA), ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணை இருவருக்கும் இலவச மருத்துவ சேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைப் பற்றி விவாதித்தது.
- கூட்டத்தின் போது, கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 ஆக நிர்ணயிக்க அரசாங்கம் 2014 இல் உறுதியளித்த போதிலும், 3.66 மில்லியனுக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் இன்னும் இந்தத் தொகையை விடக் குறைவாகவே பெறுகிறார்கள் என்பதை குழு எடுத்துரைத்தது.
- ஓய்வூதியதாரர்களின் கூட்டமைப்பான EPS-95 ஆந்தோலன் சமிதி, மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியாவும் EPS 95 இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் உட்பட அவர்களின் கோரிக்கைகள் குறித்து சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகக் குறிப்பிட்டது.
EPS Pension:இபிஎஸ் ஓய்வூதியம்
EPF இரண்டு வகையான கணக்குகளைக் கொண்டுள்ளது: ஒன்று ஓய்வு பெறும்போது மொத்தமாக பணம் எடுப்பதற்கு, மற்றொன்று மாதாந்திர ஓய்வூதிய விநியோகங்களுக்கு. நிறுவனத்தின் 12% பங்களிப்பிலிருந்து, 8.33% ஓய்வூதியங்களுக்கான EPS-க்கு செல்கிறது. மீதமுள்ள 3.67% EPF-க்கு செல்கிறது. கூடுதலாக, அரசாங்கம் இந்த நிதிக்கு 1.16% பங்களிக்கிறது.
EPFO Interest Rate: இபிஎஃப்ஓ வட்டி விகிதம்
பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுவின் சமீபத்திய கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டபடி, ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான (EPF) வட்டி விகிதம் 2024-25 ஆண்டுக்கு 8.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. CBT இந்த முடிவை எடுத்தவுடன், வட்டி விகிதம் நிதி அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அதன் பிறகு, வட்டி விகிதம் 70 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
ஊழியர் அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று அரசு இபிஎஸ் ஓய்வூதித்தை 7 மடங்குக்கு மேல் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், அது ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ