)
Essel குழுமத்தின் துணை நிறுவனமான Konti Infrapower and Multiventures, சில ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக கோட்டக் சொத்து மேலாண்மை நிறுவனத்திற்கு (AMC) எதிராக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை (NCLT) அணுகி இருக்கிறது.
Konti Infrapower and Multiventures நிறுவனத்திற்கு ரூ.12.99 கோடியை Kotak சொத்து மேலாண்மை நிறுவனம் நிலுவைத் தொகையாக வைத்துள்ளது. 2019ஆம் தேதி ஆண்டு ஏப்ரல் 6 என்ற தேதியிட்ட அந்த ஒப்பந்தத்தின் கீழ், அதன் நிதிக் கடமைகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று Essel குழும நிறுவனம் தெரிவித்துள்ளது.
Konti Infrapower போட்ட மனு
இதுகுறித்து Konti Infrapower and Multiventures நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் தொடர்ந்த மனுவில், கோட்டக் AMC 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று தேதியிட்ட ஒப்பந்தத்தின் கீழ், கொடுக்கப்பட்ட ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.
எனவே விண்ணப்பதாரர் கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதியிட்ட கோரிக்கை அறிவிப்பின் மூலம், தற்காலிக நடவடிக்கையாக நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு மீண்டும் ஒருமுறை கோட்டக் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தது. இன்றுவரை, பெரு நிறுவனங்களுக்கு நிதிக் கடன் வழங்குபவர் (Konti Infrapower and Multiventures) நிறுவனக் கடனாளியிடம் இருந்து (கோட்டக் AMC) பணம் பெறவில்லை," என குறிப்பிட்டுள்ளது.
என்ன விவகாரம்?
Essel குழுமத்தைச் சேர்ந்த Konti Infrapower and Multiventures என்ற நிறுவனம் 2019ஆம் ஆண்டு ஒரு நிதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டது. அந்த நேரத்தில், Essel குழும நிறுவனங்கள் ரூ.20 கோடி மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (NCD) வழங்கியது. NCD என்றால் முதலீட்டாளர்கள் வாங்கக்கூடிய ஒரு வகை கடன் ஆகும்.
இந்தக் கடன் பத்திரங்கள் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) பங்குகளால் ஆதரிக்கப்பட்டன. அதாவது, கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை மீட்டெடுக்க அந்தப் பங்குகளை விற்கலாம்.
அந்த வகையில், கோட்டக் சொத்து மேலாண்மை நிறுவனம் ஆரம்பத்தில் இந்தக் கடன் பத்திரங்களை வாங்கியது. பின்னர், 2019ஆம் ஆண்டில் கோட்டக் இந்த கடன் பத்திரங்களை மற்ற முதலீட்டாளர்களுக்கு விற்றது. இதற்கிடையில், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, Konti Infrapower நிறுவனம் ரூ.12.99 கோடியை கோட்டக் AMC நிறுவனத்திற்கு வழங்கியது.
2 நிபந்தனைகள்
கோட்டக் AMC ரூ.12.99 கோடியை Konti Infrapower நிறுவனத்திற்கு இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கடனை திருப்பித் தர ஒப்புக்கொண்டது. கோட்டக் AMC-ன் வழக்கமான ஆய்வை (2019–2020 நிதியாண்டுக்கு) செபி முடித்த பின்னரும், தங்களிடம் கடன் பத்திரங்களை வாங்கிய முதலீட்டாளர்களிடம் முழுமையாகத் திருப்பிக் கொடுத்த பின்னர், கடனை திருப்பி அளிப்பதாக கோட்டக் ஒப்பந்தம் போட்டிருந்தது.
2022ஆம் ஆண்டு ஜூலை 6 அன்று பணத்தை திரும்பக் கேட்டு கோட்டக்கிற்கு Konti கடிதம் எழுதியது. தொடர்ந்து, செபி இன்னும் அதன் ஆய்வை முடிக்கவில்லை என கோட்டக் 2022ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி பதிலளித்தது. 2023ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி அன்று செபி தனது ஆய்வை முடித்து அறிக்கையை வெளியிட்டது. இப்போது, கோட்டக் ஏஎம்சி அனைத்து முதலீட்டாளர்களுக்கும் கடன் பத்திரங்களில் இருந்து திருப்பிச் செலுத்தியுள்ளது.
ஜூலை 10இல் அடுத்த விசாரணை
எனவே, Konti Infrapower நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒப்பந்தத்தின் இரண்டு நிபந்தனைகளும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் கோட்டக் இன்னும் ரூ.12.99 கோடியைத் திருப்பித் தரவில்லை என தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை தற்போது Konti Infrapower and Multiventures அணுகி உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ