பங்கு சந்தை சரிவினால் தயக்கமா... SIP முதலீட்டை அஞ்சாமல் தொடருங்க... நிபுணர்களின் அட்வைஸ்

பரஸ்பர நிதியம் என்னும் SIP முதலீடுகள் சாமான்யர்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கிறது. எனினும், பங்குச் சந்தையில் சரிவு ஏற்பாடுள்ளதால் பரஸ்பர நிதிய முதலீட்டாளர்கள் சற்று கலக்கம் அடைத்துள்ளனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 9, 2025, 10:46 AM IST
  • மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் சரிவு கடுமையாக உள்ளது.
  • சந்தை சரியாகும் போது, ​​முதலீட்டாளர்கள் சந்தையை விட அதிக வருமானம் பெறுவார்கள்.
  • சந்தை வீழ்ச்சியால் SIP முதலீட்டை நிறுத்துவது தவறு.
பங்கு சந்தை சரிவினால் தயக்கமா... SIP முதலீட்டை அஞ்சாமல் தொடருங்க... நிபுணர்களின் அட்வைஸ்

பரஸ்பர நிதியம் என்னும் SIP முதலீடுகள் சாமான்யர்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கிறது. எனினும், பங்குச் சந்தையில் சரிவு ஏற்பாடுள்ளதால் பரஸ்பர நிதிய முதலீட்டாளர்கள் சற்று கலக்கம் அடைத்துள்ளனர். செப்டம்பர் 27, 2024 முதல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சுமார் 15 சதவீதம் சரிந்துள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் பணத்தை முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், முதலீட்டைத் தொடர வேண்டுமா அல்லது நிறுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Add Zee News as a Preferred Source

கூட்டு வட்டியின் சக்தி (Power of Compounding)

சந்தை வீழ்ச்சியால் SIP முதலீட்டை நிறுத்துவது தவறு என்று நிபுணர்கள் நம்புகின்றனர். கூட்டு வட்டியின் சக்தியை நம்பும் முதலீட்டாளர்கள் சந்தை வீழ்ச்சியை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தைப் பெற தங்கள் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என குறிப்பிடுகின்றனர். அதே நேரத்தில், சந்தை வீழ்ச்சிகளுக்கு மத்தியில் நீங்கள் சரியான நிதியில் முதலீடு செய்திருக்கிறீர்களா என்பதை மதிப்பிடுவதும் முக்கியம், இது உங்கள் நிதி இலக்குகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

முதலீட்டாளர்கள் சந்தையை விட அதிக வருமானம் பெறுவார்கள் (More Income Than Stock Market)

சந்தை வீழ்ச்சியின் போது, ​​முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையிலான மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களைப் பெறுகிறார்கள், அதன் மூலம் அவர்களின் சராசரி செலவைக் குறைக்கிறார்கள். சந்தை சரியாகும் போது, ​​முதலீட்டாளர்கள் சந்தையை விட அதிக வருமானம் பெறுவார்கள். உதாரணம்... ஒரு முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000 எஸ்ஐபி செய்தால், 20 ஆண்டுகளில், 10% வருமானம் என்று வைத்துக் கொண்டால், அவருக்கு ரூ.76 லட்சத்துக்கு மேல் கார்பஸ் இருக்கும். சந்தை உயரும் போது வருமானம் 15 சதவீதமாக அதிகரித்தால், அதே மாத முதலீடு ரூ.10,000 என்ற தொகை 20 ஆண்டுகளில் ரூ.1.51 கோடிக்கும் அதிகமாக பெருகும்.

லார்ஜ் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான நேரம் (Investing in Large Cap Funds)

மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் சரிவு கடுமையாக உள்ளது. எனவே முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி போன்ற பெரிய கேப் நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு போன்ற உள்நாட்டு கருப்பொருள்கள் கவர்ச்சிகரமானவை. இந்த பகுதிகளில் ஏதேனும் சரிவு ஒரு முதலீட்டு வாய்ப்பாக இருக்கலாம். இந்த ஆண்டு இதுவரை மிட்கேப் பங்குகள் 16 சதவீதம் சரிந்துள்ளது, அதே சமயம் ஸ்மால் கேப்கள் 21 சதவீதம் சரிந்துள்ளன.

பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க |  SIP: மாதம் ரூ.9,000 முதலீட்டை... ரூ.6 கோடியாக பெருக்க எத்தனை ஆண்டு தொடர் முதலீடு தேவை?

மேலும் படிக்க | பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இத செஞ்சா போதும்.. உங்க வங்கி கணக்கில் ₹2500 செலுத்தப்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News