Reserve Bank of India News In Tamil: கடந்த சில நாட்களாக முகநூல் (Facebook) போன்ற தளங்களில் ரூ.350 நோட்டுகள் சந்தையில் நுழைந்து விட்டன என்று பரவிய புகைப்படம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த தகவல் முற்றிலும் தவறானது என பிடிஐ (PTI) உண்மை சரிபார்ப்புக் குழு உறுதிப்படுத்தி உள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படங்களை பகிர்ந்த சில பயனர்கள், இந்த ரூ.350 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து வெளியிடப்பட்டதாகவும், தற்போது இவை சந்தையில் பரவியுள்ளதாகவும் பதிவிட்டுருந்தனர்.
இது உண்மையாக தான் இருக்கும் என நம்பி பலர் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்தனர். ஆனால் ரூ.350 நோட்டு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை என்பதைக் கண்டறிந்த பிடிஐ குழு இந்த தகவலின் பொய்யான தன்மையை வெளிக்கொண்டு வந்தது.
எனினும் இந்த பொய்யான தகவல் பின்னணியில் ஒரு விசித்திரமான திருப்பத்தைக் கொண்டுள்ளது. அதாவது ஒரு சில சமூக ஊடகப் பயனர்கள் இந்த ரூ.350 நோட்டின் புகைப்படத்தை உண்மையாக காட்ட உத்தரவாதமாக உருவாக்கப்பட்ட புகைப்பட கலைப்பயிற்சி அல்லது மோசடி முயற்சியாக பயன்படுத்தியுள்ளனர்.
வதந்தி பரப்புவோரின் நோக்கம் மக்களை குழப்பி சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை உருவாக்குவதுதான் என தெரிய வந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியை பொறுத்த வரை தற்போது ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 மற்றும் ரூ. 2000 நோட்டுகளை மட்டுமே புழக்கத்தில் விட்டுள்ளது. எந்த புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்துவதற்கு முன் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதாக உறுதிப்படுத்தி உள்ளது.
இதனால் ரூ.350 நோட்டு பற்றிய தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என ரிசர்வ் வங்கி மற்றும் பிடிஐ உறுதிப்படுத்தி உள்ளது. எனவே சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி போன்ற பொய்யான தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்.
மேலும் படிக்க - நகை கடன் வாங்க போறீங்களா? ஆர்பிஐயின் புதிய விதிகளை தெரிஞ்சுக்கோங்க!
மேலும் படிக்க - புதிய 50 ரூபாய் நோட்டை வெளியிடும் RBI .. இனி பழைய 50 ரூபாய் நோட்டு செல்லுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









