)
Pensioners Latest News: அரசு பணிகளில் பணிபுரிந்து ஒய்வுபெற்ற ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் அரசாங்க ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DoPPW), மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள், 2021 தொடர்பாக இரண்டு முக்கியமான தெளிவுபடுத்தல்களை வெளியிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற பிறகு காலமான அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தின் மேம்படுத்தப்பட்ட விகிதம் குறித்து DoPPW ஒரு தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது. ஓய்வு பெறும் வயது 60 வயதைத் தாண்டிய வழக்குகளில் வழிகாட்டுதலைக் கோரும் பல குறிப்புகள் மற்றும் RTI விண்ணப்பங்களைத் தொடர்ந்து இந்த தெளிவுபடுத்தல் வந்துள்ளது.
அதிகாரப்பூர்வ அலுவலக குறிப்பாணையில் (எண். 1/1(90)/2024-P&PW(E)-பகுதி(1)/10344), DoPPW, “ஓய்வு பெற்ற பிறகு அரசு ஊழியர் இறந்தால், குடும்ப ஓய்வூதியம் ஏழு ஆண்டுகளுக்கு அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயிரோடு இருந்திருந்தால் அறுபத்தேழு வயதை எட்டியிருக்கும் தேதி வரை, எது குறைவாக உள்ளதோ, அது வரை வழங்கப்படும்.” என்று கூறியுள்ளது.
65 வயதில் ஓய்வு பெறும் மத்திய சுகாதார சேவை மருத்துவர்கள் போன்ற, 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதிய வயதுடைய ஊழியர்கள் தொடர்பான கவலைகளுக்கும் இந்த குறிப்பாணையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
“உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதிய விகிதம் ஏழு ஆண்டுகளுக்கு அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அறுபத்தேழு வயதை அடையும் வரை, எது குறைவாக உள்ளதோ அது வரை செலுத்தப்படும். ஓய்வூதிய வயது 60 அல்லது 65 வயது என எதுவாக இருந்தாலும், இது பொருந்தும்" என்று DoPPW தெரிவித்துள்ளது.
இந்த தெளிவுபடுத்தல் அதிகாரப்பூர்வ அதிகாரியின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டு, அனைத்து ஓய்வூதிய வழக்குகளிலும் ஓய்வூதிய விதிகளில் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது என்று DoPPW குறிப்பிட்டது.
இறந்த அரசு ஊழியருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால், அந்த சூழ்நிலையில், குடும்ப ஓய்வூதியத்திற்கான விதிகள் என்ன அன்பதையும் DoPPW தெளிவுபடுத்தியுள்ளது.
CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021 இன் விதி 50(6) இன் படி, ஓய்வூதியம் பின்வரும் வரிசையில் வழங்கப்படுகிறது:
- கணவனை இழந்த மனைவி / மனைவியை இழந்த கணவன்,
- குழந்தைகள் (தத்தெடுக்கப்பட்ட/மாற்றாந்தாய் குழந்தைகள் உட்பட),
- சார்புடைய பெற்றோர் மற்றும்
- குறைபாடுகள் உள்ள சார்புடைய உடன்பிறப்புகள்.
இறந்த ஊழியருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் / வாழ்க்கைத் துணைவர்கள் இருந்தால், ஓய்வூதியம் சமமாகப் பகிரப்படுகிறது. ஊழியரின் விதவை இறந்த அவரது பங்கு குழந்தைகளுக்குச் செல்கிறது.
முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது மனைவி இருப்பது இந்து திருமணச் சட்டம், 1955 ஐ மீறுவதாகவும் என DoPPW குறிப்பிட்டது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஓய்வூதியங்களை வழங்கும் முன் சட்ட விவகாரத் துறையை அணுகுமாறு அமைச்சகங்களுக்கு DoPPW அறிவுறுத்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ