)
Post Office FD vs RD: தபால் நிலையம் பல வித சேமிப்பு திட்டங்களை நடத்தி வருகின்றது. இவை பாதுகாப்பான முதலீடுகளாக கருதப்படுகின்றன. ஆபத்து இல்லாமல் முதலீட்டின் மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட விரும்பும் முதலீட்டாளர்களுக்கு தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் சிறந்ததாக இருக்கும்.
கால வைப்புத்தொகை (Time Deposit) என்று பிரபலமாக அழைக்கப்படும் தபால் அலுவலக நிலையான வைப்புத்தொகை (Post Office FD) மற்றும் தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை (Recurring Deposit) ஆகியவை குறிப்பிடத்தக்க தபால் நிலைய முதலீட்டு திட்டங்களாக உள்ளன. இந்தத் திட்டங்கள் சந்தையுடன் இணைக்கப்படவில்லை. மேலும் இதில் வருமானத்திற்கு உத்தரவாதம் கிடைக்கிறது.
FD மற்றும் RD, இந்த இரண்டில் எது சிறந்தது? 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் முதலீட்டில் எந்த முதலீட்டு திட்டம் சிறந்த வருமானத்தைத் தரும்? இதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீட்டாளர் ஒரே நேரத்தில் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்யலாம். எனினும் தொடர் வைப்புத்தொகையில், முதலீட்டாளர்கள் மாதந்தோறும் டெபாசிட் செய்யலாம். இரண்டும் சிறந்த திட்டங்கள், ஆனால் காலப்போக்கில், எந்தத் திட்டம் சிறந்த வருமானத்தைத் தரக்கூடும் என்பதுதான் கேள்வி. இதற்கான கணக்கிட்டை இங்கே காணலாம்.
தபால் அலுவலக நிலையான வைப்புத்தொகை (FD) என்றால் என்ன?
- TD (Post Office time deposit) என்று பிரபலமாக அறியப்படும் தபால் அலுவலக நிலையான வைப்புத்தொகை, இந்திய தபால் துறையால் வழங்கப்படும் ஒரு சேமிப்புத் திட்டமாகும்.
- இதில் தனிநபர்கள் ஒரு நிலையான காலத்திற்கு ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்யலாம்.
- அதற்கு ஈடாக, அவர்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விகிதத்தில் அந்தத் தொகைக்கு வட்டியைப் பெறுவார்கள்.
நிலையான வைப்புத்தொகை கணக்குகளில் நான்கு வகைகள் உள்ளன:
- 1 ஆண்டு FD,
- 2 ஆண்டு FD,
- 3 ஆண்டு FD மற்றும்
- 5 ஆண்டு FD.
Post Office FD: தபால் அலுவலக நிலையான வைப்புத்தொகை கணக்கைத் திறக்க குறைந்தபட்ச வைப்புத்தொகை என்ன?
குறைந்தபட்சம் ரூ.1000 உடன் ஒரு FD கணக்கைத் திறக்கலாம். மேலும் முதலீட்டிற்கு அதிகபட்ச வரம்பு இல்லை.
Post Office FD: தபால் அலுவலக நிலையான வைப்புத்தொகையின் வட்டி விகிதங்கள் என்ன?
01.01.2024 முதல் 31.03.2024 வரையிலான வட்டி விகிதங்கள்
- 1 வருட TD கணக்கு: வட்டி விகிதம் - 6.9 சதவீதம்
- 2 வருட TD கணக்கு: வட்டி விகிதம் - 7.0 சதவீதம்
- 3 வருட TD கணக்கு: வட்டி விகிதம் - 7.1 சதவீதம்
- 5 வருட TD கணக்கு: வட்டி விகிதம் - 7.5 சதவீதம்.
தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை (RD) என்றால் என்ன?
- தபால் அலுவலக RD என்பது இந்திய அஞ்சல் துறை வழங்கும் ஒரு சேமிப்புத் திட்டமாகும்.
- இதில் முதலீட்டாளர்கள் 1 முதல் 5 ஆண்டுகள் வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான மாதாந்திர வைப்புத்தொகையை டெபாசிட் செய்யலாம்.
- இது ஒரு ஒழுங்கான சேமிப்பு முறையாகும்.
- இதில் முதலீட்டாலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம்.
- அதற்கு ஈடாக, அவர்கள் தங்கள் மொத்த இருப்புக்கு வட்டியைப் பெறுவார்கள்.
Post Office RD: தபால் அலுவலக RD வைப்புத்தொகை காலம்
- கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகள் (60 மாதாந்திர வைப்புத்தொகை).
- சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தில் விண்ணப்பித்து கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
- டெபாசிட் இல்லாமல் முதிர்வு தேதியிலிருந்து 5 ஆண்டுகள் வரை RD கணக்கைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
Post Office RD: தபால் அலுவலக RD கணக்கைத் திறக்க குறைந்தபட்ச வைப்புத்தொகை என்ன?
குறைந்தபட்சம் ரூ.100 உடன் ஒரு RD கணக்கைத் திறக்கலாம். மேலும் முதலீட்டிற்கு அதிகபட்ச வரம்பு இல்லை.
Post Office RD: தபால் அலுவலக RD -இன் வட்டி விகிதம் என்ன?
தற்போது, தபால் அலுவலக RD திட்டத்தில் ஆண்டுக்கு 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
ரூ.5 லட்சம் ஒரு முறை முதலீட்டில், 5 ஆண்டுகளில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
கால அளவு: 5 ஆண்டுகள்
மொத்த௳அக முதலீடு செய்யப்பட்ட தொகை: ரூ.5,00,000
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.5 சதவீதம்
முதிர்ச்சியில் மொத்த மதிப்பு: ரூ.7,24,974
மொத்த வட்டி தொகை: ரூ.2,24,974
ரூ.8,333 மாதாந்திர முதலீட்டில், 5 ஆண்டுகளில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
கால அளவு: 5 ஆண்டுகள்
மாதாந்திர முதலீடு: ரூ.8,333
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 6.7 சதவீதம்
முதிர்வுத் தொகை: ரூ.5,95,279
மொத்த வட்டித் தொகை: ரூ.95,299
குறிப்பு: RD என்பது நீங்கள் மாதந்தோறும் டெபாசிட் செய்வதைக் குறிக்கும், இது மொத்தத் தொகையை அல்ல.
5 ஆண்டுகளில் (60 மாதங்கள்) ரூ. 5,00,000 (மொத்த முதலீடு) முதலீடு செய்ய = ரூ. 5,00,000 ÷ 60 = மாதத்திற்கு ரூ. 8,333 முதலீடு செய்ய வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ