8வது சம்பள கமிஷன் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Eighth Pay Commission Latest Update: எட்டாவது சம்பள கமிஷன் குறித்த கேள்விகளுக்கு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அப்டேட் ஒன்றை அளித்துள்ளார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 20, 2025, 01:30 PM IST
  • எட்டாவது சம்பள கமிஷன்.
  • அகவிலைப்படி பூஜ்ஜியமாக நிர்ணயிக்கப்படும்.
  • அகவிலை படி உயர்வு 50%? அல்லது 61%?
8வது சம்பள கமிஷன் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Eighth Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டு தொடங்கியதுடன் எட்டாவது சம்பள கமிஷன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இந்த கமிஷன் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை பணவீக்கத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க உள்ளது. எனவே சம்பள கமிஷன் தொடர்பான இறுதி அறிவிப்பு விரைவில் வர உள்ளது. 

Add Zee News as a Preferred Source

எட்டாவது சம்பள கமிஷன் 

இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி கங்கனா ராணுவோத் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜனதா அகமது ஆகியோர் மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது சம்பள கமிஷன் அறிக்கையை சமர்ப்பணம் செய்வதற்கு ஏதேனும் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதா? என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினர். 

அதற்கு பதிலளித்திருக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மற்றும் பரிந்துரை விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார். 

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

மேலும் எட்டாவது சம்பள கமிஷன் இடம்பெற்றிருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள நிர்மலா சீதாராமன், "தோராயமாக 2025 மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி மத்திய ஊழியர்களின் எண்ணிக்கை 36.57 லட்சம் என்றும், அதுவே 2024 டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை 33. 91 லட்சம் என்றும் தெரிவித்துள்ளார். 

எட்டாவது சம்பள கமிஷன் நிதி தாக்கம்

எட்டாவது சம்பள கமிஷனால் ஏற்படும் நிதி தாக்கங்கள் குறித்து அரசு ஏதேனும் ஆய்வுகளை மேற்கொண்டதா அல்லது ஊழியர்கள் சங்கங்களோடு ஆலோசனை நடத்தியதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் விதிமுறைகள் குறித்து பரிந்துரைகள் கூறப்பட்டு உள்ளதாக கூறினார். 

அகவிலைப்படி பூஜ்ஜியமாக நிர்ணயிக்கப்படும் 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவு  திருத்தம் குறித்து பரிந்துரைகளை செயல்படுத்துவது முக்கியமானது. மேலும் மிக முக்கியமான மாற்றம் அகவிலையின் படியில் இருக்கும். அதாவது மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி பூஜ்ஜியமாக மீட்டமைக்கப்படும். 

இதன் பொருள் புதிய சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்தவுடன் அகவிலைப்படி கணக்கீடு பூஜ்ஜியத்திலிருந்து புதிதாக தொடங்கும். எதிர்காலத்தில் ஜனவரி 2026க்குள் அகவிலைப்படி 61% எட்டக்கூடும் என்று வைக்கப்பட்டு உள்ளது. 

விதிகளின்படி புதிய ஊதிய குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும்போது ஊழியர்களுக்கான அகவிலைப்படி பூஜ்ஜியமாக நிர்ணயிக்கப்பட்டு, அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். இந்த ஊதிய குழுவிலும் இதுவே நடக்கும். 

அகவிலைப்படி உயர்வு 50%? அல்லது 61%? 

அதேநேரம் அகவிலையின் படியில் 50% மட்டுமே அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்படலாம். மீதமுள்ள 11% இணைப்பிலிருந்து வெளியேற்றலாம் என்ம் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை. மேலும் எட்டாவது சம்பள கமிஷன் மாற்றம் குறித்து மத்திய அரசாங்கம் எந்த உறுதியான கருத்தையும் இன்னும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - 8வது ஊதியக்குழு: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக உயர்ந்தாலும், சம்பளம் அவ்வளவு உயராது!! காரணம் இதுதான்

மேலும் படிக்க - 8வது ஊதியக்குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகும், ஊதியம், ஓய்வூதியம் அதிரடியாய் உயரும்

மேலும் படிக்க - எட்டாவது ஊதியக் குழுவால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! வெளியான முக்கியத் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News