Follow This Rule To Become Billionaire : இந்தியாவை பொருத்தவரை, நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு இருக்கும் பெரிய ஆசையாக இருப்பது, ‘சொந்தமாக ஒரு வீடு, சின்னதாக ஒரு காரு’ என்பதுதான். ஆனால், அதைத்தாண்டி, வெகு சிலருக்குதான் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்றும், அதிக சொத்துகள் சேர்க்க வேண்டும் என்றும் தோன்றும். இதற்கு பலர் எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என்று யோசிப்பர். அந்த முதலீடு மூலமாக, நாம் கோடீஸ்வரர் ஆக முடியுமா என்று கேட்டால், முடியும் என்கின்றனர் நிதி நிபுணர்கள்.
முதலீடு:
ஒரு கோடி ரூபாயை, நம்மால் 10 ஆண்டுகளூக்குள் சம்பாதிக்க முடியுமா? என்கிற கேள்விக்கு, நிபுணர்கள் ஆம் என்று பதில் சொல்கின்றனர். இதற்கான கணக்குதிரட்டை எப்படி உருவாக்குவது, தங்கத்திலோ அல்லது கடன் பத்திரங்களிலோ எவ்வளவு முதலீடு செய்வது என்பது குறித்த கேள்விகளுக்கு பிரபல ஃபண்ட் மேலாளர் ஆர்கிட் தோசி பதிலளிக்கிறார்.
நாம், ஒரு கோடி ரூபாயை 10 ஆண்டுகளில் பெற, அதற்கான சிறந்த போர்ட்ஃபோலியோ வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டுமாம். இதற்காக, நாம் முக்கியமாக மூன்று விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டுமாம்.
கடைப்பிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்:
இதற்கு அடித்தளமாக, பல்வகைப்படுத்தப்பட்ட பங்கு மியூச்சுவல் ஃபண்ட்கள் விளங்குகின்றன. போர்ட்ஃபோலியோவில் 75 சதவீதம் இந்த பங்கு குறித்தான விவரங்கள் இருக்க வேண்டுமாம். இதற்கான மியூச்சுவல் ஃபண்ட்கள், மிட் கேப் நிறுவனங்களை நோக்கி இருக்க வேண்டுமாம். 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனால், ஸ்மால் கேப் நிறுவனங்களின் பங்குகள் வேகமாக வளரும். இதில்,, பலதரப்பட்ட துறைகளில் இருக்கும் முதலீடுகள் உங்களுக்கு வேகமான வளர்ச்சியை தரலாம்.
இதில், டெட் ஃபண்ட்கள், 10% ஆக இருக்க வேண்டுமாம். இது உங்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்வதோடு அவசர காலத்தில் பணப்புழக்கம் தேவைப்பட்டாலும் உதவுகிறது. சந்தைகள் ஏதோ ஒரு காரணத்தால் வீழ்ச்சி அடைந்தாலும், குறிப்பிட்ட உங்களின் நிதி பாதுகாக்கப்படும்.
மூன்றாவதாக, தங்கத்தில் 15 சதவீதம் முதலீடு செய்திருத்தல் வேண்டும். இதற்கு முந்தைய வரலாற்றை எடுத்து பார்த்தோமேயானால், தங்கத்தில் இருக்கும் முதலீடானது, டெட் ஃபண்ட்களை விட தேவைப்படும் நேரத்தில் சைரியாக கைக்கொடுக்கும். இதற்கும் மேலாக, பங்குகள் உடனான அதன் குறைந்த தொடர்பானது, உங்களின் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவின் ஏற்ற இறக்கத்தையும், நிதி அபாயத்தையும் கணிசமாக குறைக்கிறது.
எனவே, இந்த 75-10-15 சதவிகிதங்களில் கலந்து நீங்கள் முதலீடு செய்யும் போது நீங்கள், உங்களின் ஒரு கோடி ரூபாய் கனவை சரியான திட்டத்துடன் நிறைவேற்றலாம். இருப்பினும், இதில் நீங்கள் சரியான லாபத்தை பெற, நிதானமும் அவசியமும் தேவை.
உதாரணம்:
உங்கள் மாதத்தின் பட்ஜெட், ரூ.100 என்று வைத்துக்கொண்டால், அதில் ரூ.75-ஐ மல்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் பல்வேறு துறை சார்ந்து இருக்க வேண்டும்.
அடுத்த ரூ.10-ஐ உடனடி தேவைகளுக்காக, டெட் ஃபண்ட்களில் (Debt Instrument) முதலீடு செய்ய வேண்டும். இதனை தமிழில் கடன் கருவி என்பர்.
அடுத்ததாக, ரூ.15-ஐ தங்கம் அல்லது தங்கம் சார்ந்த சிலவற்றில் முதலீடு செய்யலாம்.
சிறிய நிறுவனங்கள்:
இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து விட்டாலும், இன்னும் பல துறைகளில் வளர்ச்சி அடைய வேண்டிய நாடாக இருக்கிறது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் கவனம் செலுத்துவது, நிதி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இந்தியாவின் பொருளாதார ரீதியிலான வளர்ச்சி, சிறிய நிறுவனங்கலையும் வேகமாக வளர வைக்கும் என்பது நிதி நிபுணர்களின் கூற்றாக இருக்கிறது.
மேலும் படிக்க | ரூ 1 கோடி அதிர்ஷ்டம் யாருக்கு? கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி குலுக்கல் SS-497 பட்டியல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









