)
Ration Rice ; உணவு பாதுகாப்புத்துறை சார்பில் செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் செறிவூட்டப்பட்ட பொருட்கள் - சமுக நடத்தை மாற்ற தொடர்பு SBCC (Social Behaviour Change Communication) விழிப்புணர்வு தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சிகளும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் படி, நுண்ணூட்டச்சத்து குறைபாடு மறைந்த பசி (hidden hunger) பரவலாக உள்ளது. இரத்த சோகை 50% மகளிர் மற்றும் குழந்தைகளிடம் காணப்படுகிறது. இதனால் தனிநபரின் உற்பத்தி திறன் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் வரை குறைகிறது. அதன் அடிப்படையில் தான் செறிவூட்டி உணவு பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என சட்டம் சொல்கிறது. தற்போது உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசி, கோதுமை, பால், எண்ணெய் மற்றும் உப்பு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் குறைந்தபட்சம் ஒன்றுக்கும் மேற்பட்ட நுண்ணூட்டச் சத்துக்களை பாதுகாப்பான முறையில் சேர்க்கப்படுவதை நாம் செறிவூட்டல் என்கிறோம். அன்றாடம் உபயோகிக்கும் அரிசியில், நுண்ணூட்ட சத்துக்கள் அடங்கிய செறிவூட்டி அரிசி மணிகள் (Fortified Rice Kernel) முறையே 100 கிலோவிற்கு 1 கிலோ என கலப்பது ஆகும்.
சேர்க்கப்படும் நுண்ணூட்ட சத்துக்கள் முறையே இரும்புச்சத்து, இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது, போலிக் அமிலம் கருவின் வளர்ச்சி மற்றும் இரத்த உருவாக்கத்திற்கு உதவுகிறது. மேலும் வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாடுகளை ஆதரிக்கிறது. செறிவூட்டப்பட்ட அரிசியை தவறாமல் உட்கொள்வது சிறந்த ஊட்டச்சத்தையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது. " +F " சின்னம் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் அடையாளமாகும். செறிவூட்டப்பட்ட அரிசி அரசு ரேஷன் கடைகளில் கிடைக்கிறது. இது அங்கன்வாடி மையங்களில் துணை ஊட்டச்சத்தாக வழங்கப்படுகிறது மற்றும் பள்ளிகளில் காலை உணவு திட்டம், மதிய உணவில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் செறிவூட்டப்பட்ட பொருட்கள் சமுக நடத்தை மாற்ற தொடர்பு SBCC (Social Behaviour Change Communication) விழிப்புணர்வு வாகனத்தை மாவட்டம் முழுவதும் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ