)
Senior Citizens Latest News: மத்திய அரசு நாட்டு மக்களுக்கான பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. பல்வேறு வகையான மக்களுக்கு பிரத்யேகமான பல திட்டங்கள் உள்ளன. நாட்டில் உள்ள மூத்த குடிமக்களுக்கான பல வித திட்டங்கள் செயலில் உள்ளன. அவற்றில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் முக்கியமான மற்றும் பிரபலமான திட்டமாக உள்ளது.
ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டம் இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றது. இந்தத் திட்டத்திற்கு தகுதியுடையவராக இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.
- ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு இலவச சிகிச்சையின் பலன் வழங்கப்படுகிறது.
- இந்த பலனை பெற தகுதியுள்ளவர்களுக்கு ஆயுஷ்மான் அட்டைகள் முதலில் உருவாக்கப்படுகின்றன.
- இதற்கு விண்ணப்பிக்கும் போது சில ஆவணங்கள் தேவைப்படும்.
ஆயுஷ்மான் அட்டையை உருவாக்க தேவைப்படும் ஆவணங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
- ஆயுஷ்மான் அட்டையைப் பெறும் பயனாளிகள், இதன் மூலம் இலவச சிகிச்சையைப் பெறலாம்.
- இந்த அட்டையின் மூலம், அட்டைதாரர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறுவார்.
- பயனாளியின் இலவச சிகிச்சைக்கான செலவை அரசாங்கமே ஏற்கிறது.
- அதாவது பயனாளிகள் எந்த பணத்தையும் செலுத்தாமல் நன்மைகளை பெறலாம்.
- ஆயுஷ்மான் அட்டையைப் பெற தகுதியுடையவர்கள், அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmjay.gov.in/ -க்குச் சென்று அதற்கு விண்ணப்பிக்கலாம்.
- இது தவிர, திட்டத்தின் அதிகாரப்பூர்வ செயலியான ஆயுஷ்மான் செயலி மூலம் விண்ணப்பித்தும் உங்கள் ஆயுஷ்மான் அட்டையை பெறலாம்.
- ஆஃப்லைனில் ஆயுஷ்மான் அட்டையைப் பெற, பயனாளிகள் முதலில் தங்கள் அருகிலுள்ள CSC மையத்திற்குச் செல்ல வேண்டும்.
- இங்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியைச் சந்திக்க வேண்டும்.
- அவர் பயனாளிகளின் தகுதியைச் சரிபார்ப்பார்.
- பயனாளிகள் தகுதியுடையவராகக் கண்டறியப்பட்டால், உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
- அனைத்தும் சரியாக இருந்தால், ஆயுஷ்மான் அட்டைக்கான உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டு ஆயுஷ்மான் அட்டை உருவாக்கப்படும்.
- அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்கள் இலவச சிகிச்சையைப் பெறலாம்.
ஆயுஷ்மான் அட்டையை பெற கீழ்கண்ட ஆவணங்கள் தேவைப்படும்:
- ஆதார் அட்டை
- ரேஷன் கார்டு
- பிரதமர்/முதல்வர் தகுதி கடிதம்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- மொபைல் எண்
இந்த ஆவணங்கள் உங்களிடம் இல்லையென்றால், ஆயுஷ்மான் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.
ஆயுஷ்மான் அட்டை மூலம், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஒரு வருடத்தில் ரூ.5 லட்சம் வரையிலான சுகாதார சேவைகள் எந்த கட்டணமும் இல்லாமல் கிடைக்கும். ஆயுஷ்மான் திட்டத்தின் பயனாளிகளுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை கிடைக்கும். இந்த வசதி அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், திட்டத்துடன் தொடர்புடைய தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலே குறிப்பிட்டுள்ள எளிய முறையில் மூத்த குடிமக்கள் இந்த அட்டையை பெற முடியும்.
ஆயுஷ்மான் அட்டை: முக்கிய தகவல்கள் சுருக்கமாக...
- ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டம் இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றது.
- ஆயுஷ்மான் திட்டத்தின் பயனாளிகளுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை கிடைக்கும்.
- பயனாளிகளின் ஆயுஷ்மான் அட்டையின் வரம்பு ஒவ்வொரு ஆண்டும் தானாகவே புதுப்பிக்கப்படும்.
- எளிய முறையில் மூத்த குடிமக்கள் ஆயுஷ்மான் அட்டையைப் பெற முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ