)
Atal Pension Scheme: அனைத்து தரப்பு மக்களுக்காகவும் மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்காக பல வித திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. வயது மூப்பில் எந்த வித நிதி சிக்கல்களையும் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது. ஓய்வூதிய நன்மைகளை வழங்க அரசு தொடங்கியுள்ள ஓய்வூதிய திட்டங்களில் அடல் ஓய்வூதிய திட்டம் மிக பிரபலமான மற்றும் முக்கியமான திட்டமாகும்.
அடல் ஓய்வூதிய திட்டம்
- இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 ஓய்வூதியம் அளிக்கப்படுகின்றது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீடு முற்றிலும் பாதுகாப்பானது, எதிர்காலத்திற்கு லாபகரமானது.
- அடல் பென்ஷன் யோஜனாவில், கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஒரு கூட்டுக் கணக்கைத் திறந்தால், ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ரூ.10,000 பெறலாம். இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய நினைக்கும் பயனாளிகள், முதலில் சில முக்கியமான விஷயங்களைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.
APY திட்டம் தொடர்பான முக்கிய அம்சங்கள்
- அடல் ஓய்வூதிய திட்டத்தின் முக்கிய நோக்கம் மக்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதாகும்.
- இந்தத் திட்டம் குறிப்பாக ஏழைகள், நலிந்த பிரிவினர், அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் ஆகியோர் மீது கவனம் செலுத்துகிறது.
- அடல் ஓய்வூதிய திட்டத்தில் பங்கேற்பதற்கான தகுதி வயது 18 முதல் 40 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் உறுப்பினர் 60 வயது வரை தொடர்ந்து பங்களிக்க முடியும்.
- இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், 60 வயதிற்குப் பிறகு, மாதத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறலாம்.
- துரதிஷ்டவசமாக முதலீட்டாளர் இறந்தால், முழு ஓய்வூதியமும் வாழ்க்கைத் துணைக்கு வழங்கப்படும்.
- கணவன்-மனைவி இருவரும் ஏதேனும் காரணத்தால் இறந்தால், முழுத் தொகையும் பரிந்துரைக்கப்பட்ட நாமினிக்கு அளிக்கப்படும்.
- இந்தத் திட்டத்தில், குறைந்தபட்சம் 18 மற்றும் 40 வயதுடையவர்கள் மட்டுமே கணக்கைத் திறக்க முடியும்.
Atal Pension Scheme: திட்டத்தில் சேருவதற்கான முக்கியமான விஷயங்கள்
- நீங்கள் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர பதிவு செய்ய வேண்டுமானால், வங்கி அல்லது தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பது அவசியம்.
- உங்கள் ஆதார் அட்டை மற்றும் மொபைல் எண்ணை இணைப்பது மிகவும் முக்கியம்.
- இந்த திட்டத்தில் பங்களிப்புத் தொகை தானாகவே கணக்கிலிருந்து கழிக்கப்படுகிறது.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், இதுவரை இந்த நிதியாண்டில் 39 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் இணைந்துள்ளனர். இப்போது இந்தத் திட்டத்துடன் தொடர்புடையவர்களின் மொத்த எண்ணிக்கை 8 கோடியைத் தாண்டியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ