Atal Pension Yojana: பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் நிம்மதியாக நிதி நெருக்கடி இல்லாமல் வாழ அனைவரும் இள வயது முதலே அதற்காக திட்டமிட வேண்டியது மிக அவசியமாகும். பலர் பணி ஓய்வுக்கு பின் நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். வயோதிகத்தில் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு பல வித திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் அடல் ஓய்வூதியத் திட்டம்.
அடல் பென்ஷன் திட்டம்
மத்திய அரசு மூத்த குடிமக்களின் நன்மைக்காக அடல் ஓய்வூதியத் திட்டத்தை நடத்தி வருகின்றது. பயனாளிகள் 60 வயதை எட்டிய பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தை உறுதி செய்யும் ஒரு அரசு திட்டமாகும் இது. மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேருவதன் மூலம் மூத்த குடிமக்கள் மாதா மாதம் ஒரு நிலையான தொகையை ஓய்வூதியமாக பெறலாம்.
இதில் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், கணவன்-மனைவி இருவரும் கூட்டுக் கணக்குகளைத் திறக்கலாம். இதன் மூலம் கணவன்-மனைவி 60 வயதிலிருந்து எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 ஓய்வூதியத்தைப் பெறலாம். அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்பும் நபர்கள், முதலில் சில முக்கியமான நிபந்தனைகளை அறிந்திருக்க வேண்டும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
APY: அடல் ஓய்வூதியத் திட்டம் தொடர்பான முக்கியமான விஷயங்கள்
மத்திய அரசு 2015 இல் அடல் ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியது. இதில் சேர குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 40. பயனாளிகள் எந்த வங்கியை வேண்டுமானாலும் அணுகி இந்தத் திட்டத்தில் சேரலாம். 18 வயதில் இந்தத் திட்டத்திற்கான கணக்கைத் திறந்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.210 முதலீடு செய்ய வேண்டும். 60 வயது வரை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய வேண்டும். 60 வயதை எட்டிய பிறகு, ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 ஓய்வூதியம் கிடைக்கும்.
Monthly Pension: ரூ.10,000 மாத ஓய்வூதியம் பெறுவது எப்படி?
கணவன் மனைவி இருவரும் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் ஒன்றாக முதலீடு செய்யலாம். திட்டத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்து இருவரும் முதலீடு செய்தால், 60 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000, அதாவது இருவருக்குமஸ்ர்த்து ரூ.10,000 தொகை அவர்களுக்குக் கிடைக்கும். இந்தத் தொகை பணவீக்கத்தை சமாளிக்க ஒரு பெரிய ஊக்கத்தொகையாக இருக்கும்.
Senior Citizens: மூத்த குடிமக்கள் கணக்கை திறப்பது எப்படி?
அருகிலுள்ள வங்கிக்குச் சென்று அடல் ஓய்வூதியத் திட்டத்திற்கான கணக்கைத் திறக்கலாம். இந்தத் திட்டத்தில் சேரும்போது, உங்கள் ஆதார் அட்டையை கணக்குடன் இணைக்க வேண்டும். மக்கள் தங்கள் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்க உதவும் வகையில் பல திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அவற்றில் அடல் ஓய்வூதியத் திட்டம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
Atal Pension Yojana: தேவைப்படும் ஆவணங்கள்
- இந்திய குடியுரிமைச் சான்றிதழ்
- பிறப்புச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்ற வயதுச் சான்றுகள்.
- வங்கிக் கணக்கு எண் மற்றும் கிளை விவரங்கள்
- APY பதிவு படிவம்
- ஆதார் அட்டை
மேலும் படிக்க | கிராஜுவிடி விதிகளில் அதிரடி மாற்றம்: UPS முறையிலும் இனி OPS நன்மை கிடைக்கும்
மேலும் படிக்க | பணத்தை பன்மடங்காக்கும் PPF... மாதம் ரூ.4,585 முதலீட்டிலும் கோடீஸ்வர கனவை நனவாக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









