ரூ.55 டெபாசிட், மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம்: மத்திய அரசின் மாஸ் திட்டம்

Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana: நாட்டில் உள்ள பலருக்கு முதுமைக்கான எந்த ஆதரவும் இல்லை. அத்தகையவர்களுக்கு, அரசாங்கம் மிகவும் மலிவு விலையில் ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 13, 2025, 03:19 PM IST
  • பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா.
  • அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
  • இந்த திட்டத்தில் பங்களிப்பு எவ்வாறு செய்யப்படுகிறது?
ரூ.55 டெபாசிட், மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம்: மத்திய அரசின் மாஸ் திட்டம்

Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana: மத்திய அரசு நாட்டு மக்களுக்காக பல வித நலத்திட்டங்களை தீட்டி வருகின்றது. பல வித பிரிவுகளை சேர்ந்த மக்களுக்காக பல விதமான பிரத்யேக திட்டங்கள் உள்ளன. இவற்றின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைகிறார்கள். 

Add Zee News as a Preferred Source

Central Government Schemes: மத்திய அரசு திட்டங்கள்

பல்வேறு பிரிவுகளின் தேவைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்தத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. ஒருபுறம், மக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான திட்டங்களை அரசாங்கம் நடத்துகிறது, மறுபுறம், ஓய்வூதிய திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

Pension Schemes: ஓய்வூதியத் திட்டங்கள்

நாட்டில் உள்ள பலருக்கு முதுமைக்கான எந்த ஆதரவும் இல்லை. அத்தகையவர்களுக்கு, அரசாங்கம் மிகவும் மலிவு விலையில் ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில், பயனாளிகள் வெறும் ரூ.55 டெபாசிட் செய்து ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டம் பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா

இந்திய அரசு நாட்டின் குடிமக்களின் நன்மைக்காக தொடங்கியுள்ள பல்வேறு வகையான திட்டங்களில் முக்கியமான மற்றும் பிரபலமான ஓய்வூதியத் திட்டமாக இருப்பது பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டம். இந்தத் திட்டம் குறிப்பாக நாட்டின் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் அமைப்புசாரா துறையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுறிகிறார்கள். இப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு முதுமைக்கு எந்த ஆதரவும் இருப்பதில்லை. இந்தத் திட்டத்தில், மாதந்தோறும் ரூ.55 மட்டுமே செலுத்தி ஒவ்வொரு மாதமும் ரூ.3000 வரை ஓய்வூதியம் பெறலாம்.

Unorganized Sector: அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

இந்திய அரசின் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டம் நாட்டின் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கானது. இந்தத் திட்டத்தின் கீழ், துப்புறவு தொழில் செய்பவர்கள், சலவை செய்பவர்கள், ரிக்‌ஷா இழுப்பவர்கள், தோல் தயாரிப்பாளர்கள், செங்கல் சூளைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் கூலி வேலை செய்பவர்கள் போன்ற தொழிலாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

PM-SYM: இந்த திட்டத்தில் பங்களிப்பு எவ்வாறு செய்யப்படுகிறது?

இந்தத் திட்டத்தில் சேரும் பயனாளிகள் டெபாசிட் செய்யும் அதே அளவு தொகையை அரசாங்கமும் டெபசிட் செய்கிறது. அதாவது, ஒருவர் ரூ.200 டெபாசிட் செய்தால், அரசாங்கமும் அவரது கணக்கில் ரூ.200 டெபாசிட் செய்கிறது. அந்த வகையில் பயனாணிகள், அரசு என இரு தரப்பின் பங்களிப்பும் இந்த திட்டத்தில் இருக்கும்.

PM-SYM: இந்த திட்டத்தில் யார் சேர முடியும்?

18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த திட்டத்தின் கீழ் சலுகைகளை பெறலாம். பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டத்தில் 18 வயதிலிருந்தே முதலீடு செய்யத் தொடங்கலாம். 18 வயதிலிருந்தே ஒருவர் அதில் முதலீடு செய்தால், அவர் மாதந்தோறும் ரூ.55 டெபாசிட் செய்ய வேண்டும். 29 வயதில், ரூ.100 டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது வயது அதிகரித்து முதலீட்டை தொடங்கினால், முதலீட்டு அளவும் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | SIP Vs Top-Up SIP: 20 ஆண்டுகளில் ரூ.1 கோடி பணம் சேர்க்க... எது பெஸ்ட் முதலீடு?

மேலும் படிக்க | EPFO Update: தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு, அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News