)
Government Pension Scheme: வயதாகும் போது அனைவருக்கும் ஆதரவு தேவைப்படுகிறது. குறிப்பாக, வயதான காலத்தில் பிறரை அதிகம் சாராமல் இருக்க, நிதி நிலை நன்றாக இருக்க வேண்டியது மிக அவசியம். மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு நிம்மதியான வாழ்வை அளிக்க பல வித ஓய்வூதியத் திட்டங்களை நடத்தி வருகிறது.
வயதான காலத்தில் உங்களை யார் ஆதரிப்பார் என்ற கலக்கம் உள்ளதா? கவலைப்படத் தேவையில்லை. உங்கள் சிறிய முயற்சி மற்றும் அரசாங்கத்தின் உதவியுடன், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ₹3000 ஓய்வூதியம் பெறலாம். வயதான காலத்தில் நிதி உதவியை உறுதி செய்யும் ஒரு சிறப்புத் திட்டத்தை அரசாங்கம் நடத்தி வருகின்றது. 60 வயதுக்கு பிறகு நிதி உதவி அளித்து ஓய்வூதிய நன்மையை அளிக்கும் அத்தகைய ஒரு அரசாங்க ஓய்வூதியத் திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana
- மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில், இந்திய அரசு பிப்ரவரி 2019 இல் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனாவைத் தொடங்கியது.
- இந்தத் திட்டம் தெரு வியாபாரிகள், ஓட்டுநர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மக்களுக்கானது.
- இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலும் முதுமையில் வேலை செய்வதை நிறுத்தும்போது நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
- இதுவரை, 46 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா: இந்த திட்டத்தில் யார் விண்ணப்பிக்கலாம்?
- 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ₹15,000 அல்லது அதற்கும் குறைவான மாத வருமானம் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
- வயதுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை செலுத்த வேண்டும்.
18 வயதில்: ₹55/மாதம்
29 வயதில்: ₹100/மாதம்
40 வயதில்: ₹200/மாதம்
- அரசாங்கமும் அதே தொகையை செலுத்தும்.
- 60 வயது ஆகும் வரை பயனாளிகள் பங்களிப்புகளை செலுத்த வேண்டும்.
- அதன் பிறகு, உங்களுக்கு மாதத்திற்கு ₹3000 ஓய்வூதியமாக கிடைக்கும்.
- மாதத்திற்கு ₹15,000க்கு மேல் வருமானம் ஈட்டும் அல்லது வருமான வரி செலுத்தும் நபர்கள் அல்லது EPFO, NPS அல்லது ESIC உறுப்பினர்கள் இதற்கு தகுதியற்றவர்கள்.
Unorganized Sector: அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் சேருவது எப்படி?
- நீங்கள் உங்கள் அருகிலுள்ள CSC மையம் அல்லது ஆன்லைன் முறையில் திட்டத்தில் சேரலாம்.
- இதற்கு உங்களுக்கு ஆதார் அட்டை மற்றும் சேமிப்பு வங்கி கணக்கு மட்டுமே தேவை.
- பதிவுசெய்த பிறகு, உங்களுக்கு ஷ்ரம் யோகி அட்டை மற்றும் கணக்கு எண் கிடைக்கும்.
- பயனாளி இறந்தால், கணவன் அல்லது மனைவிக்கு 50% ஓய்வூதியம் கிடைக்கும்.
- 10 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது திட்டத்தை விட்டு வெளியேறினால், சேமிப்புக் கணக்கு வட்டியுடன் பணம் திருப்பித் தரப்படும்.
PM-SYM: இந்த திட்டத்தை யார் நிர்வகிக்கிறார்கள்?
- இந்தத் திட்டம் LIC மற்றும் CSC ஆல் நிர்வகிக்கப்படுகிறது.
- இந்தத் திட்டம் குறித்த அதிக தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்: https://maandhan.in
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ