Atal Pension Yojana: பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்களுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை தீட்டி வருகின்றது. இவற்றில் அடல் ஓய்வூதியத் திட்டம் முக்கியமான மற்றும் பிரபலமான ஒரு திட்டமாக பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் பலர் தங்கள் எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பை செய்துகொள்கிறார்கள்.
Senior Citizens:மூத்த குடிமக்களுக்கான முக்கிய திட்டம்
முதுமையில் மூத்த குடிமக்களுக்கு பணத்திற்கான தேவை அதிகமாகின்றது. அந்த தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த திட்டம் அமைந்துள்ளது. இதன் உதவியுடன் பயனாளிகள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். எதிர்காலத்தில் சம்பாதிக்க எந்த ஆதாரமும் இல்லாதவர்கள், தங்கள் முதுமையை மகிழ்ச்சியுடன் கழிக்க விரும்பும் நபர்கள், தாமதிக்காமல் அடல் பென்ஷன் யோஜனாவில் சேர்வது நல்லது. இந்த திட்டம் இவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
Atal Pension Scheme
அடல் ஓய்வூதியத் திட்டம் மூலம், பயனாளிகள் மாதா மாதம் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறுவார்கள். அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்பும் நபர்கள், முதலில் சில முக்கியமான விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் திட்ட பலன்களை பெற முடியும். மிக எளிய முறையில் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர முடியும். அதன் பிறகு முதலீட்டு செயல்முறை தொடங்கும். அடல் ஓய்வூதியத் திட்டம் தொடர்பான முக்கியமான விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், முதலில் சில முக்கியமான குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும்.
அடல் ஓய்வூதியத் திட்டம்: கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்
- அடல் ஓய்வூதியத் திட்டம் 2015 ஆம் ஆண்டு மோடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.
- இந்தத் திட்டம் இந்திய குடிமக்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளாகவும், அதிகபட்ச வயது 60 ஆண்டுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் மாதத்திற்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியம் பெற வழிவகை உள்ளது.
- இந்தத் திட்டத்தில், முதலீட்டாளர் மாதத்திற்கு ரூ.42 முதல் அதிகபட்சம் ரூ.210 வரை எளிதாக முதலீடு செய்யலாம்,
- முதலீட்டாளர் 60 வயதை எட்டும்போதுதான் ஓய்வூதியப் பலன்களைப் பெறத் தொடங்குவார்கள்.
- ஒருவர் 40 வயதில் இந்தத் திட்டத்தில் சேர்ந்தால், மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.291 முதல் ரூ.1,454 வரை முதலீடு செய்ய வேண்டும்.
APY: வங்கியில் இந்த கணக்கை திறப்பது எப்படி?
- இதற்கு, முதலில் நீங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று ஒரு கணக்கைத் திறக்க வேண்டும்.
- பின்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும்.
- அங்கே APY படிவத்தை நிரப்ப வேண்டும்.
- இதற்குப் பிறகு, படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும்.
- இதன் பிறகு ஆதார் அட்டையின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- படிவத்தை சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு செய்தி வரும்.
மேலும் படிக்க |7 மடங்குக்கு மேல் அதிகரிக்கவுள்ளதா மாத ஓய்வூதியம்? திக்குமுக்காட வைக்கும் அப்டேட்!!
மேலும் படிக்க | இந்தியர்கள் அனைவருக்கும் பென்ஷன்: ரெடியாகும் மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









