Gold Price 2026: கடந்த 2025-ம் ஆண்டு இந்திய முதலீட்டாளர்களுக்கு ஒரு பொற்காலமாக அமைந்தது. தங்கம் சுமார் 72% முதல் 75% வரையிலான அசுர லாபத்தை வாரி வழங்கியது. ஆனால், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாம் இருக்கும் சூழலில், மீண்டும் அதே போன்ற ஒரு லாபம் கிடைக்குமா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. 2026 இறுதிக்குள் தங்கம் எங்கே செல்லும்? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
2026-ல் தங்கம் எவ்வளவு லாபம் கொடுக்கும்?
நிபுணர்களின் கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டு தங்கத்தில் 20% முதல் 30% வரையிலான லாபத்தை எதிர்பார்க்கலாம். 2025-ல் கிடைத்தது போன்ற 70 விழுக்காட்டுக்கு மேல் லாபம் இந்த ஆண்டு கிடைப்பது கடினம். இருப்பினும், பங்குச்சந்தையின் தற்போதைய ஏற்ற இறக்கத்தோடு ஒப்பிடும்போது, இது மிகவும் பாதுகாப்பான மற்றும் கௌரவமான லாபமாகும்.
2026 ஆண்டு இறுதியில் தங்கம் விலை எவ்வளவு இருக்கும்?
தற்போது மார்ச் 2026-ல் 10 கிராம் தங்கம் ரூ.1,60,000 முதல் ரூ.1,80,000 நிலைகளில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பதாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவதாலும், 2026 டிசம்பர் மாதத்திற்குள் 10 கிராம் தங்கம் ரூ.2,10,000 முதல் ரூ.2,25,000 என்ற புதிய உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக Goldman Sachs மற்றும் Bank of America போன்ற நிறுவனங்கள் கணித்துள்ளன.
லாபம் குறைய வாய்ப்புள்ளதா?
தங்கத்தின் மூலம் கிடைக்கும் லாப விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று குறையவே வாய்ப்புள்ளது. ஏனென்றால், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் வேகம் மந்தமடைந்துள்ளது. இது முதலீட்டாளர்களை மற்ற கடன் பத்திரங்களை நோக்கித் திருப்பும். ஏற்கனவே தங்கம் மிக உயர்ந்த விலையில் இருப்பதால், அங்கிருந்து மேலும் 75% உயர்வது பொருளாதார ரீதியாக பார்த்தால் சாத்தியம் குறைவாகவே இருக்கிறது. மேலும், 2026-ல் இந்தியப் பங்குச்சந்தை மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து பணத்தை எடுத்து பங்குகளில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.
கோல்டு இடிஎஃப் முதலீடு அப்டேட்
தங்கத்தை நகையாகவோ, நாணயமாகவோ வாங்கி லாக்கரில் வைக்கும் காலம் மறைந்து வருகிறது. 2026-ல் Gold ETF சிறந்த தேர்வாக இருப்பதற்குக் காரணம் என்னவென்றால், திருட்டுப் பயம் இல்லை, டிஜிட்டல் முறையில் உங்கள் டிமேட் கணக்கில் இருக்கும். 99.5% தூய்மையான தங்கத்தின் விலையை இது இருக்கும். அதனால், செய்கூலி, சேதாரம் போன்ற கூடுதல் செலவுகள் கிடையாது. சந்தை நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் ஒரு கிராம் அளவிற்கு கூட நீங்கள் விற்றுப் பணமாக்கிக் கொள்ளலாம்.
முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?
போர்ச் சூழல் நிலவும் போது தங்கம் எப்போதுமே "பாதுகாப்பான புகலிடம்" (Safe Haven). எனவே, மொத்தப் பணத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், விலை சற்று குறையும் போதெல்லாம் (Dips) சிறுகச் சிறுகச் சேமிப்பதே புத்திசாலித்தனம். 2026-ல் தங்கம் உங்கள் போர்ட்ஃபோலியோவிற்கு ஒரு கவசமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் படிக்க | தங்கம் விலை இன்று - நகைப்பிரியர்களுக்கான முக்கிய தகவல்
மேலும் படிக்க | தங்கம் விலையில் நடக்கப்போகும் தலைகீழ் மாற்றம் - நகைப்பிரியர்களுக்கான முக்கிய தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









