EPFO Wage Ceiling Hike: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இபிஎஃப் திட்டத்தில் சேருவதற்கான மாத ஊதிய வரம்பான ₹15,000 -ஐ திருத்துமாறு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
EPFO -க்கு 4 மாத கால அவகாசம்
மாத ஊதிய வரம்பு அதிகரிக்கப்படுவதன் தாக்கம் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பின் மீது இருக்கும். இந்த விஷயத்தில் நான்கு மாதங்களுக்குள் முடிவு எடுக்குமாறு EPFO-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது EPFO இந்த வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Wage Ceiling Hike: 2024 முதல் இபிஎஃப் ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை
இது தொடர்பாக நவீன் பிரகாஷ் நௌடியல் தாக்கல் செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வெளியிட்டதாக செய்தி நிறுவனமான PTI-யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் EPF ஊதிய உச்சவரம்பு 2014 -இல் அதிகரிக்கப்பட்டது. அதற்கு பிற இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த காலகட்டத்தில், குறிப்பாக நகர்ப்புறங்களில் ஊதியங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஊதிய உச்சவரம்பை அதிகரிப்பது பங்களிப்புகளை அதிகரிக்கும்
- ஒரு ஊழியரின் சம்பளத்தில் எவ்வளவு தொகை வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிக்கப்படும் என்பதை EPF ஊதிய உச்சவரம்பு தீர்மானிக்கிறது.
- தற்போது, நிறுவனத்தின் அடிப்படை சம்பளத்தில் 12% (கூடுதலாக DA) ஒவ்வொரு மாதமும் பணியாளரின் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
- நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் அதே தொகையை ஊழியரின் இபிஎஃப் கணக்கில் செலுத்துகிறது.
- இதில் ₹15,000 வரம்பு உள்ளது.
- ஊழியர் தானாக முன்வந்து அதிக பங்களிப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே பங்களிப்பு அதிகரிக்கிறது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களின் ஓய்வூதிய சேமிப்பும் அதிகரிக்கும்
நிறுவனம் அளிக்கும் 12% பங்களிப்பில், 8.33% ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) செல்கிறது. மீதமுள்ள 3.67% ஊழியரின் EPF கணக்கிற்கு செல்கிறது. ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால், தானாகவே ஊழியர்களின் பங்களிப்புகள் அதிகரிக்கும். இது அவர்களின் ஓய்வூதிய சேமிப்பு மற்றும் ஓய்வூதிய சலுகைகளையும் அதிகரிக்கும்.
ஊதிய வரம்பு கடைசியாக 2014 இல் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு சம்பளம் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் பல ஊழியர்களுக்கான EPF பங்களிப்புகள் தேக்க நிலையிலேயே உள்ளன.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஊழியர்களுக்கு நன்மை பயக்கும்
இபிஎஃப் ஊதிய உச்சவரம்பை அதிகரிப்பது தனியார் துறையில் பணிபுரிபவர்களின் ஓய்வூதிய நிதியை அதிகரிக்கும். இது நடுத்தர வருமான பிரிவில் உள்ளவர்களுக்கு குறிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும். ஊதிய உச்சவரம்பு ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் (EPS) யாரெல்லாம் கட்டாயமாக சேர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வரம்பாகும். ஆகையால் இதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இபிஎஃப் ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால், அதனால், பணி ஓய்வுக்கு பிறகான ஓய்வூதிய பாதுகாப்பு அதிகரிக்கும். லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையாக இது இருக்கும்.
EPF Corpus,EPS Pension: ஊதிய உச்சவரம்பு எவ்வளவு அதிகரிக்கும்?
EPFO உச்சவரம்பு மாதத்திற்கு ரூ.15,000 -இலிருந்து ரூ.25,000 ஆக அதிகரிக்கப்படும் என கூறப்படுகின்றது. இது மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். இது ஊழியர்களின் இபிஎஃப் கார்ப்பஸ் மற்றும் இபிஎஸ் ஓய்வூதியம் என இரண்டிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு நிதி பாதுகாப்பு கிடைக்கும்.
நிறுவனங்களின் மீதான தாக்கம் என்ன?
இபிஎஃப் ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்படுவது நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் பிறகு இபிஎஃப் பங்களிப்புகள் அதிக சம்பள அடிப்படையில் கணக்கிடப்படும் என்பதால், ஒரு பணியாளருக்கான நிறுவனங்களின் செலவு அதிகரிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









