)
DA Hike, 7th Pay Commission: தீபாவளிக்கு முன்னர் அதாவது கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் 3% உயர்த்தப்பட்டது. மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதலின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது.
இதன்மூலம், 55 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்ந்தது. மேலும், இது ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு, அரியர் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்து, பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.
பீகார், ராஜஸ்தான், அருணாச்சலப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, உத்தர பிரதேசம், அஸ்ஸாம், உத்தரகாண்ட், ஆந்திரா உள்ளிட்ட மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் உயர்த்தப்பட்டது. பல மாநிலங்கள் தீபாவளிக்கு முன்னரும், சில மாநிலங்கள் தீபாவளிக்கும் பின்னரும் இந்த அகவிலைப்படி உயர்வை அறிவித்திருந்தன.
இந்நிலையில் தற்போது ஹரியானா அரசு அதன் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது. அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதன்மூலம் ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார்.
இதன்மூலம், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி உயர்வு 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயரும். மேலும், உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2025ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டும். மேலும் ஊழியர்களின் நவம்பரில் வரும் அக்டோபர் மாத ஊதியத்தில் இத்தொகை எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், 3 லட்ச அரசு ஊழியர்கள், 3 லட்ச ஓய்வூதியதாரர்கள் என சுமார் 6 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது. ஹரியானா மாநிலத்தின் நிதித்துறை இந்த அகவிலைப்படி உயர்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்டதை போலவே இதுவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி உயர்வு அக்டோபர் மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் எதிரொலிக்கும் என்றும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அரியர் தொகை நவம்பர் மாதம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ