லோன் வாங்க போறீங்களா... இந்த 4 வங்கிகள் வட்டி விகிதத்தை குறைந்துள்ளது!

Banks Lending Rates: ஆர்பிஐ ரெப்போ வட்டியை குறைத்ததன் மூலம், பஞ்சாப் நேஷ்னல் வங்கி உள்ளிட்ட 4 வங்கிகள் அதன் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jun 8, 2025, 07:11 PM IST
  • ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் ரெப்போ வட்டியை குறைத்துள்ளது.
  • ரெப்போ வட்டியில் 50 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.
  • இதையடுத்து வங்கிகள் அதன் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
லோன் வாங்க போறீங்களா... இந்த 4 வங்கிகள் வட்டி விகிதத்தை குறைந்துள்ளது!

Banks Which Slashes Lending Rates: இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியில் 50 அடிப்படை புள்ளிகளை குறைத்து நேற்று முன்தினம் (ஜூன் 8) அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம், ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து தற்போது 5.50 ஆக குறைந்துள்ளது.

Add Zee News as a Preferred Source

Lending Rates: ரெப்போ வட்டி விகிதம் குறைவதால்...

ரெப்போ வட்டி விகிதம் (Repo Rate) என்றால், ஆர்பிஐ மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடன்கள் மீதான வட்டி விகிதம் ஆகும். ரெப்போ வட்டி விகிதம் குறையும்போது, நீங்கள் வங்கியில் வாங்கியிருக்கும் வட்டி விகிதமும் குறையும், மாதத்தவணைகளில் தொகை சற்று குறையும், இதனால் மக்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம். இருப்பினும், FD, RD, சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதமும் குறையும்.

Lending Rates: இந்த 3 வங்கிகள்...

இந்நிலையில், பஞ்சாப் நேஷ்னல் வங்கி (PNB), பேங்க் ஆப் இந்தியா (BOI), UCO வங்கி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கு வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. நுக்ரவோருக்கும், வணிகர்களுக்கும் வாங்கும் திறன் அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை தூண்டவே இந்த ரெப்போ வட்டி குறைப்பு நடவடிக்கையை ஆர்பிஐ மேற்கொள்கிறது எனலாம்.

Lending Rates: பஞ்சாப் நேஷ்னல் வங்கி, BOI

அந்த வகையில், ஆர்பிஐ (Reserve Bank Of India) ரெப்போ வட்டியை குறைத்த உடன், பஞ்சாப் நேஷ்னல் வங்கிதான் முதல் வங்கியாக அதன் கடன் வட்டி விகிதத்தை தற்போது குறைந்துள்ளது. அதவாது, 8.85 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 8.35 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் PNB வங்கி அதன் அடிப்படை விகிதம் (Base Rate) மற்றும் MCLR விகிதத்தில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. பேங்க் ஆப் இந்தியாவும் வட்டி விகிதத்தை 8.85 சதவீதத்தில் இருந்து 8.35 சதவீதமாக குறைத்துள்ளது. 

Lending Rates: UCO வங்கி

அதே நேரத்தில், UCO வங்கி தனியாக அதன் அனைத்து கடன்களுக்கும், MCLR விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. வீட்டு கடன்கள், தனிநபர் கடன்கள் உள்ளிட்ட பல வகையான கடன்களின் வட்டி விகிதங்கள் குறைப்பு வரும் ஜூன் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

ஓவட்நைட் MCLR 8.25 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக குறைந்துள்ளது. ஒரு மாத MCLR 8.45 சதவீதத்தில் இருந்து 8.35 சதவீதமாக குறைந்துள்ளது. மூன்று மாத MCLR 8.6 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், ஆறு மாத MCLR, ஒரு வருட MCLR முறையே 8.8 சதவீதமாகவும், 9 சதவீதமாகவும் குறைந்துள்ளது. பேங்க் ஆப் பரோடா வங்கியும் அதன் ரெப்போ தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட கடன்களின் வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. ஆர்பிஐ வட்டி விகிதததை குறைப்பதன் மூலம் நுகர்வோர் மற்றும் வணிகர்களின் செலவு, முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு உந்துவதே நோக்கமாகும். 

மேலும் படிக்க | இன்று UPI மூலம் 4 மணி நேரத்திற்கு பணம் செலுத்த முடியாது - முழு விவரம்! தெரிந்து கொள்ளுங்கள்

மேலும் படிக்க | ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பெரிய செய்தி! 3 ஆண்டுகள் சிறை, ரூ. 1 லட்சம் அபராதம்

மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர் தொகை கிடைக்குமா? முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News