)
EPFO Wage Ceiling Hike: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. விரைவில் EPF மற்றும் EPS (ஊழியர் ஓய்வூதியத் திட்டம்) தொடர்பான விதிகளில் மாற்றம் வரக்கூடும். EPFO-வின் கீழ் கட்டாய சம்பள வரம்பு ரூ.15,000-லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி
மத்திய அரசு சம்பள வரம்பை அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றம் ஏற்பட்டால், 75 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். அவர்கள் ஓய்வுக்குப் பிறகு அதிக ஓய்வூதியம் பெறக்கூடும். இதனால் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பல வித நன்மைகள் ஏற்படக்கூடும். ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6700 கோடிக்கு மேல் செலவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பள வரம்பு அதிகரித்த பிறகு, அரசாங்கம் அதற்கு தனி ஏற்பாடு செய்ய வேண்டும்.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு சம்பள வரம்பு எவ்வளவு அதிகரிக்கக்கூடும்?
- EPFO விதிகளின்படி, அடிப்படை சம்பளம் ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவாக உள்ள ஊழியர்கள் மட்டுமே EPF மற்றும் EPS சலுகைகளைப் பெற தகுதியுடையவர்கள்.
- பணியாளர் மற்றும் நிறுவனம் இரு தரப்பினரு,ம் அடிப்படை சம்பளத்தில் 12% ஐ EPF-க்கு பங்களிக்கின்றனர்.
- நிறுவனத்தின் 12% பங்களிப்பில், 8.33% EPS (ஓய்வூதியத் திட்டம்) க்கு செல்கிறது. இதன் அதிகபட்ச வரம்பு ரூ.1,250 ஆகும்.
- இந்த ஊதிய வரம்பை ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- இதில் உடன்பாடு ஏற்பட்டால், லட்சக்கணக்கான ஊழியர்கள் EPF மற்றும் EPS வரம்பிற்குள் வருவார்கள்.
- அதாவது, ரூ.15,000 முதல் ரூ.21,000 வரை சம்பளம் வாங்கும் ஊழியர்களும் ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெற முடியும்.
சம்பள வரம்பை அதிகரிப்பதால் என்ன பயன்?
- தற்போது முதலாளி / நிறுவனம் சார்பில் அதிகபட்சமாக ரூ.1,250 வரை EPS-க்கு பங்களிக்கப்படுகிறது.
- வரம்பு அதிகரித்த பிறகு, இந்தப் பங்களிப்பு ரூ.1,749 ஆக உயரலாம்.
- இது ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கும்.
- ரூ.15,000 க்கும் அதிகமான சம்பளம் பெறும் ஆனால் EPF விலக்கு குறைவாக இருந்த ஊழியர்கள் இப்போது தங்கள் சம்பளத்தின் அடிப்படையில் முழு பங்களிப்பையும் செலுத்த வேண்டும்.
- இது அவர்களின் EPF கணக்கில் அதிக பணம் டெபாசிட் செய்ய வழிவகுக்கும்.
- முன்னதாக, ரூ.15,000 க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் EPS இன் பலன்களைப் பெற முடியாது.
- வரம்பு நீட்டிக்கப்பட்டால், ரூ. 21,000 வரை சம்பளம் வாங்கும் ஊழியர்களும் ஓய்வூதியத் திட்டத்தில் சேர முடியும்.
- நிறுவனங்களின் பங்களிப்பாக அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
- இதன் காரணமாக சம்பள அமைப்பில் மாற்றங்கள் காணப்படலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ